Wednesday, 21 March 2012

விடை சொல்ல முடியல்ல ***




நிலவொன்று சிரிப்பதை
நேரிலே பார்த்தேனே

மலரொன்று நடப்பதை
மண்ணிலே கண்டேனே...

குழலொன்று இசைப்பதை
குரல்தனில் கேட்டேனே

மீனொன்று வசிப்பதை
விழிகளில் பார்த்தேனே

கொடியொன்று அசைவதை
இடையினில் கண்டேனே

விடை காண முடியாத
கொடையாக நின்றாளே

உயிரோடு இருந்தும், நான்
சிலையாக நின்றேனே

No comments:

Post a Comment