Tuesday, 11 October 2016

நிழலா நிஜமா நீ சொல்லு ???



எனது உயிரில் இருந்து உதிரும் வார்த்தைகள் உன்
உள்ளத்திற்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை

ஆனால் உனது கண்களுக்கே அது தெரியாவிட்டால் எனது
உடலில் உயிர் இருந்தும் வெறும் ஜடமே

நீ நிஜம் என்றால் எனது நிழல் என்ன எனது
நினைவுகளும் உனை என்றும் தொடருமே

நீ வெறும் நினைவுகள் மட்டும்தான் என்றால் எனது
நிழல் கூட உன்னை நிஜமாகத் துரத்தும்...

    இறந்தாலும் இறக்காத உன் நினைவுகள்


    மொத்த உறுப்புக்களும் சிதைந்து சிதறி
    குருதியில் மிதக்கும் மனித சடலங்களை
    பார்த்த பின்னும்

    காவுகொடுத்த குறுக்குச்சந்தில் வேகத்தை

    குறைக்காது பயணிப்பது போல்..... அதே..
    அதிவேகத்தோடு

    உனை சுவாசித்குக்கொண்டே இருப்பேன்
    விபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் !

    அப்படி நான் மரணித்துப் போனாலும் இதயம்
    மட்டும் துடித்துக்கொண்டு தான் இருக்கும்
    உனது வரவை எதிர்பார்த்து

    அப்போதாவது வந்து ஒருதுளி கண்ணீர்
    விட்டுச்செல் அதன் தவிப்படங்கி ஆன்மா
    சாந்தியடையட்டும் !

    நிகழ்காலம் ஒன்றே நிஜம்

    தடுக்கி விழுந்த தருணத்தில்
    தாங்கிப் பிடிக்கும் பூங்கொடியே
    இறக்கை எதுவும் உனக்கில்லை
    இருந்தும் ஏந்திப் பறக்கிறியே



    கடந்த காலம் நினைவில் இல்லை
    எனக்கு எதிர்காலம் தேவையில்லை
    நிகழ்காலம் ஒன்றே நிஜம் என்பேன்
    மெல்லினமே என்னருகே நீயிருந்தால்.


    அழகான வர்ணங்கள் அமையாத
    வேளையிலும், உந்தன் அன்பான
    ஆர்ப்பரிப்பில் நிலைகொள்ளும்
    சமயத்தில் இதமான வண்ணங்களே !

    அலுக்கோசும் அரைலூசும்

    ஓம் ஓம் நான் விசுக்கோத்து
    போடி நீயொரு அலுக்கோசு. ..
    எதற்கடி கள்ளி கண்களில்
    வைத்து சுத்துறாய் குளுக்கோசு...
    போடா நீயும் தான் அரை லூசு

    ஐயோ.... ஐயோ........ஓடி .....நீ...
    வாடி எந்தன் முழு லூசு..!

    கவிவடிக்கும் விழிகள்


    அவள் விழியில் ஒரு ஒளி தெரியுதே
    அந்த ஒளியில் பல கவி நெளியுதே


    செவ்விதழில் பனித்துளிகள் பூக்குதே
    என் கண்கள் அதை நாடிக் கேட்க்குதே



    இதை கண்டு கொண்டு உண்டு மகிழ
    பறக்கிறதே மனம் வண்டாக..


    அதை கண்டு எனை வென்று கொன்று
    தின்றாள் பூச்செண்டாக..!