Tuesday, 7 April 2015

பச்சோந்தி உன் இனம்


எப்போழுதும் ஒரே மாதிரி இருக்கும் எதிரியை
கூட நட்பாக வைத்துக் கொள்ளலாம்
ஆனால் நேரத்துக்கு ஒரு மாதிரி மாறும் நட்பை
எதிரியாக கூட வைத்திருக்க கூடாது !

அணில் குஞ்சும் அத்தை மகளும்

மாம்பழத்தை அணில் கொந்த
மாமி அதைத் துரத்த
கொக்கரித்துக் கோழி ஒன்று
தெத்தித் தெத்தி ஒடயிலே
அத்தை மகள் ஒத்தையிலே...
முத்தம்தனை கூட்டயிலே
ஒட்டுப்போட்ட பாவாடை
விட்டு விட்டு ஆடயிலே
இத்தனையும் போதுமடா
எனக்கு எந்த சொத்துச்சுகமும்
வேண்டாமென்றேன்
நித்திரையில் மாமன் எழுப்பி
பட்ட பாட்டை சொன்ன போது
மொட்டு விட்டு பூத்த நெஞ்சம்
ஐயஹோ பட்ட மரம் ஆனதடா 

உயிர் பறிக்கும் ஒற்றை வார்த்தை

உனது ஒரு வார்த்தை கேட்டாலே இந்த உலகையே
மறப்பவன் நான்
உன் உணர்வுகளை சொன்னால் நான் என் உயிரை
விட்டுவிடுவேன்
என்ற அச்சத்திலாடி நீ ஊமையாக நடிக்கின்றாய் ?...
அடி பைத்தியக்காரி
உன் புன்னகை ஒன்றே போதுமடி நான் புதிதாய்
பிறப்பதற்கு.......!!!

கொலையில் இருந்து தப்புமா கலை


கலைக் கோலத்தில் கொலை முயற்சி
விலை போகும் குலவது நிகழ்ச்சி
தலை நிமிர்ந்த நம் சொந்த மண்ணில்
விலை உயர்ந்த மயில்கள் ஆட்டம்
அங்கே வலை வீசும் சிலைகள் கூட்டம்

காட்டுக்கோழியும் மாட்டுக்காரனும்


வீட்டுக்காரி தினம் கோடு கிழிக்க
வேட்டைக்காரன் காட்டில் தவிக்க
காண்டாமிருகம் நாட்டில் நடக்க
கொண்டை சேவல் கூட்டில் கிடக்க
காட்டுக்கோழி கல்யாணத்தில்
மாட்டுக்காரன் மாப்பிள்ளைத்தோழன் !!!

யார் கொடுத்த உரிமை இது


உனக்கொரு நியதி எனக்கொரு நியதி
என்று ஒருபோதும் வகுத்ததில்லை
தலைக்கனம் பிடித்தவன் தனித்துவம்
பெற்றதாய் சரித்திரம் எதுவுமில்லை
இலக்கணப் பிழையோடு இலக்கியம்...
படைத்திட இறுமாப்புக் கொள்கின்றாய்
பிறக்கின்ற போதே இறக்கின்ற கணக்கினை
ஏட்டிலே எழுதுகின்றாய்............................
நடக்கின்ற போதிலே கடக்கின்ற உயிரினை
துடக்கென்று சொல்லுகின்றாய்................
கிடக்கின்ற இடத்திலே படக்கென்று போகின்ற
மனிதா ஏன் துள்ளுகின்றாய் ........................???
 

விளக்கம் இல்லா குழப்பம்


கிழக்கும் மேற்கும் பார்க்கின்றேன்
வழக்கம் மீறி நடக்கின்றேன்
பழக்கம் இல்லா உன் விழியை
குழப்பம் இன்றி ரசிக்கின்றேன்
முழக்கம் இல்லா மழைபோல் எனை ...
நனைத்து நனைத்துப் போகின்றாய்
விளக்கம் இன்றித் தவிக்கின்றேன்
கலக்கம் போக்க வா என் அருகே
அடக்கமாக நீ இருந்தும் என் தொடக்கம்
உந்தன் காலடியே........................!!!
 

அங்கொரு கோணம் இங்கொரு கோணம்

நாற்கோணத்தில் நியாயம் பேசுகின்றோம்
முக்கோணத்தில் மூச்சு விடுகின்றோம்
இருகோணத்தில் முடிவெடுக்கின்றோம்
ஒருகோணத்தில் நடப்பதற்காகத் தினம்
பலகோணத்தில் நாம் பாடுபடுகின்றோம்
இருப்பினும் மழையில் நனைந்த கோலம்
போலே எம் நிலையோ அலங்கோலம் .....!!!

செம்மறி மேய்க்கும் சோம்பேறி

சோம்பேறி பிடித்தவன் மான்கறி கேட்க
செம்மறி மேய்த்தவன் மீன்கறி கொடுக்க
கொம்பேறிமூக்கன் நடுத்துண்டு எனக்கென
வம்புபிடித்தவன் பெரும்வாதம் பண்ண
மார்கழிமாதத்தில் மாமிசம் எதற்கென்று
தின்று கொழுத்தவன் திரும்பிப் பார்த்து
நண்டுக்குழம்பை நாய்க்கு வையென்றானாம் !

இதயத்தில் கோலம் போட வா


பெண்ணே நீ பூமுடித்து புன்னகையோடு
வருவாயென நான் காத்திருந்தேன்
ஆனால் நீயோ விளக்குமாற்றுடன்
வருகின்றாய் விளங்கவில்லையே..!
...
ஓ ஓ . நான் உனக்காக என் இதயத்தில்
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை
தூசி பிடித்திருப்பதால் சுத்தம் செய்து
நீ குடியிருக்கவா................ ??

அப்போ நான் ஓடிப்போய் கோலமாவு
வாங்கிவரவா வாசல் தெளித்து கோலம்
போட்டுவிடு அலங்கோலமாக இருந்த
என் இதயம் மங்களகரமாகட்டும்.....!!!
 

சாதியும் ஒரு வியாதியே


இந்த சாதி கொல்லுது பாதியை
வியாதி கொல்லுது மீதியை
சாதிக்க வந்தவர்கள் எல்லாம்
இங்கே சுவாசிக்கமுடியவில்லை
ஆனால் போதிக்க வந்தோமென...
பலர் வேடிக்கை காட்டுகின்றார்
இதனால் பாதிக்கப்பட்டோர் கூட
யோசிக்க மறந்துவிடார்..........!!!
 

எல்லாம் ஒரு மாதிரியே


நான் அந்தமாதிரிப்பட்ட ஆள் இல்லை
நான் அந்தமாதிரிப்பட்ட ஆள் இல்லை
என்று சொல்லும் இந்தமாதிரிப்பட்ட
யாரையும் நீ எந்தமாதிரிப்பட்டாலும்
நம்பிடாதே நம்பிடாதே ..................!!!

உழைப்பவனுக்கு உணவில்லை

விதைத்தவன் அறுப்பதில்லை
அறுப்பவன் விதைத்ததில்லை
முளைத்தவை விளைந்தபோதும்
வளர்த்தவன் உண்பதில்லை
உனக்கென வகுத்த போதும்...
தடையின்றி கிடைப்பதில்லை
உழுதவன் உரமாகின்றான்
உண்பவன் மரமாகின்றான்
எடுப்பவன் கல்லாகின்றான்
கொடுப்பவன் மண்ணாகின்றான்
இங்கே உழைத்தவன் என்னானான்
என்று எவருமே வருந்தவில்லை.!!!

புன்னகைத்தால் முத்துதிரும்


அன்பே நீ ஆலையம் சென்றால்
அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு
அமைதியாக திரும்பி வந்துவிடு
அங்கே புன்னகைத்து விடாதே
அப்புறம் சாமிக்குற்றமாகிவிடும்...
என்ன அதிர்ச்சியாக உள்ளதா
ஆமாம் உன் சிரிப்பில் உதிரும்
முத்துக்கள் சிதறல் கண்டு அந்த
முத்துமாரி அம்மனே நேரில் வந்து
காட்சி தருவதாக எண்ணி உனை
கைகூப்பி வணங்கிடப்போகின்றார்கள் !
 

கலங்கி துடிக்கும் உள்ளம்


கண்ணுகலங்குது உள்ளம் துடிக்குது
உன்னை நினைக்கயிலே
அந்த உண்மையை கேட்டதும் எந்தன்
நெஞ்சு இன்று வெம்பி வெடிக்குதடி
இது நான் செய்த பாவமா நீ கொண்ட ...
கோலாமா ஒன்றும் புரியல்லடி
இதை ஊருக்கு சொல்லிட நியாயங்கள்
கேட்டிட உண்மை என்ன கூறடி
நான் வாழ்வதா வீழ்வதா சாவதா என
என் கண்கள் பார்த்து சொல்லடி...!!!
 

பட்டாம்பூச்சியும் சிற்றெறும்பும்


பட்டுப்பூச்சி கொண்டையிலே
குண்டுமல்லி பூக்குதே
பார்த்த எந்தன் நெஞ்சுக்குள்ளே
கட்டெறும்பு ஊருதே
சிட்டு ஒன்று பொட்டு வைத்து...
மெத்தையிலே துள்ளுதே
மொத்தத்தையும் கண்ட விழி
வெட்டுக்கிளி ஆனதே
பட்டாம்பூச்சி போட்ட குட்டி நீயடி
உனை வட்டமிடும் சிற்றெறும்பு நானடி!

நியாயம் இல்லாச் சாட்டுக்கள்

வீட்டுக்கும் காட்டுக்கும் நடுவிலே
கோட்டுக்குப் போகின்ற மானிடா
ரோட்டுப் போட மறந்துவிட்டு, ..நீ
கூட்டுக்குள் நின்று கொண்டு, நான்
போகும் ரூட்டுச் சரியில்லையென்று
சாட்டுச் சொல்வதில் என்ன நியாயம்.?

கவிதை பாடும் காவியம் நீ


காதல் என்னும் காவியத்தில்
நீயும் நானும் கவிதையாய்
காலமெல்லாம் கவிபடைக்க
உன் அன்பு ஒன்றே போதுமடி.
எனை தீண்டும் தென்றல் கூட...
உந்தன் பெயரைச் சொல்லுதடி
அலைகள் உரசும் கரையில் உந்தன்
பிஞ்சுப் பாதம் கொஞ்சும் போது
என் நெஞ்சம் கூட மஞ்சம் போடி
நினைவு வெள்ளம் பொங்கி வந்து
எந்தன் கண்ணில் நீராய் சிந்துதடி
உயிரே உந்தன் உணர்வை அள்ளி
உதிரிப்பூவை நானும் எண்ணி
மார்பில் சூடிக்கொள்ளும் போது
மயங்கிப்போறேன் கள்ளி வாடி..!

தீ மூட்டும் தீப்பந்தம்


அவள் மூச்சுக்காற்று படுகின்றதே, என்
மூளைவரையினில் தொடுகின்றதே
தீயை நெஞ்சில் மூட்டுகின்றதே, அதில்
என் தேகம் முழுவதும் சுடுகின்றதே
ஆசை நெருப்பினில் கொதிக்கின்றதே...
அவள் அங்கம் தணலாய் யொலிக்கின்றதே
பூவே எதற்கிந்தப் பூகம்பம்.................. உன்
புன்நகைப்பிலும் ஏன் இந்தத் தீப்பந்தம் ...?

தீமையை கற்று நல்லதை பற்று



உனை சுற்றி நடப்பதை உற்றுப் பார்த்து
கற்றுக்கொள்
பின் நன்மை தீமைமைகள் என்னவென்று
ஏற்றுக்கொள்
அதில் நல்லவற்றை மட்டும் உனதாக ...
பெற்றுக்கொள்
உனை நாடிவரும் நல் உள்ளங்களை
பற்றிக்கொள்
அதன்பின் பல வெற்றிக் கனிகளை தட்டிச்
செல்ல என் வாழ்த்துக்கள் !
 

நன்றி சொல்ல வார்த்தை இல்லை


இதுவே என்னுடைய ஐநூறாவது
ஆக்கம்
இதற்கெல்லாம் காரணம் உங்கள்
ஊக்கம்
தக்கவைப்பது எப்படியென்பதே என் ...
ஏக்கம்
உலகில் இருக்கின்றதோ எந்தனையோ
தாக்கம்
அதையெல்லாம் வெளிக்காட்டுவதே என்
வழக்கம்
நன்றி என்று விலகினிற்பதில்லை என்
பழக்கம்
உங்களெல்லோர் மனங்களையும்
குளிரவைத்து
சந்தோசப்படுத்துவதே என்றும் என்
நோக்கம் !

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் கடமைப்
பட்டுள்ளேன், என் எல்லா ஆக்கங்களுக்கும் உங்கள்
அன்பையும் வாழ்த்துக்களையும் அள்ளி வீசி என்னை
இவ்வளவு அரவணைப்போடு பாராட்டும் என் உறவுகள்
அனைவரையும் என் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் !

வாழ்க வளமுடன் அன்பே சிவம்..!!!
 

செதுக்காத சிலை கிறுக்காத கவிதை அவள்


மாலைக் கருக்கல் வேளையிலே
மான்கள் துள்ளும் சோலையிலே
மயில் போலே மங்கை ஒன்றை
மனக்கண்ணால் நான் பார்த்தேன்


செதுக்காத சிலையாக
நறுக்காக நின்ற அவள்
கிறுக்காத கவிதை போல்
சறுக்காது எனை ஈர்த்தாள்

மோகத்தில் நான் மூழ்கி
தாகத்தில் தவிக்கயிலே
கட்டுடலைத் தான் அசைத்து
மொட்டிதழை விரித்தாளே

அம்பொன்று பாய்ந்து வந்து
அடிமனதில் துழைத்தது போல்
ஐம்புலனும் படபடத்து,,, நான்,
அங்கேயே சாய்ந்தேனே

தென்றல் போல் வந்த அவள்
தேகத்தை தழுவியதால்
தேனி போல் நான் மாறி
பூவைக்குள் மறைந்தேனே !!!
 

மனிதன் புரியாத புதிரா ?


பயத்தின் பொருளை மனமறியும்
இடத்தின் பயனை பயிரறியும்
நீரின் எடையை குடமறியும்
நிலத்தின் வகை மழையறியும்
குளத்தின் பெருமை கொக்கறியும்...
பூவின் தேனை வண்டறியும்
புல்லின் பசுமை பசுவறியும்
பாலின் சுவையை நாவறியும்
கனிந்த பழத்தை கிளியறியும்
தென்றல் சுகத்தை கொடியறியும்
மனிதா உன்னை யார் அறிவார்
மரணம் ஒன்றே தானறியும்..!!!

ஆராய முடியாத ஆழமா பெண்கள் ?


பெண்ணை மலர் என்றான் கம்பன் 
கண்ணை மீன்னென்றான்கவிஞன் 
இதழில் குளிர் என்றான் இளைஞன் 
உதட்டில் சுவை கண்டான் ரசிகன் 
இடையை கொடி என்றான் சிற்பி
மலரில் வாசம் இருக்கும்
பெண்ணில் வேஷம் இருக்கும் 
இதழில் மணம் வீசும்
கண்ணில் வாள் வீசும் 
இடைகள் வசைபாடும் அதுவே விஷமாகும்
 உதட்டில் தேன்சிந்தும் அதுவே உன்னைக் கொல்லும். 
ஆழ்கடலின் ஆழத்தை ஆராட்சி கண்டிடலாம் 
 அன்னமெனும் பெண் மனதை 
ஆராய்ந்து கண்டவர் யார்
இதற்கு விடை அறிந்தவனே இந்தலோக இறைவனென்பேன்.......!

தீயில் ஏற்றும் தீபம்

பத்த வைத்தால் நெருப்பு
மூட்டி விட்டால் தணல்
கொழுத்தி விட்டால் தீ
ஏற்றி வைத்தால் தீபம்
...
நீ என்ன செய்கின்றாயோ அதுவே
உன் வாழ்வில் பிரதிபலிக்கும்....!!!

நீ யார் உன் செயல்தான் என்ன ...???

அதிர்ச்சியிலும் ஆனந்தமே







அன்பே நான் உனக்கு அதிர்ச்சியான விசயம் சொல்வேன்
அதை நீயோ ஆனந்தாமாகவே எடுத்துக் கொள்ளணும்
சேர்த்துவைத்த கனவெல்லாம் மிச்சமின்றி தீர்த்திடணும்
மெத்தையிலே நாம் இருந்தும் நித்திரையை மறந்திடணும்
பொத்தி வைத்த ஆசைகளை  சொச்சமின்றிப் பேசிடணும்
உத்தரவு இல்லாமல் நான் பல யுத்தங்கள் புரிந்திடணும்
சத்தங்கள் ஏதுமின்றி நீயோ மொத்தததையும் தாங்கிடணும்
வண்டாக நான் மாறிக் கொண்டாடித் தேன் குடிக்க,
 நீயோ திண்டாட்டம் போடாமல் என் பொண்டாட்டியாகிடணும்
பூமியிலே இருந்தும் நாம் சொர்க்கத்தை தொட்டிடணும்
இத்தனையும் கூறுவதால் சிறிதேனும் அதி்ர்ச்சி உண்டோ
வெக்கத்தை நீ விட்டு  பக்கத்தில் தான்வந்து கூறடி என்சகியே ? 

கலியுகத்தின் கண்றாவி


புற்றுக்குப் பாலூற்றி புனிதமெனச் சொன்னாலும்
செடிக்கு நீரூற்றி கருணையென நினைத்தாலும்
பூமியிலே விஞ்ஞானம் புதுமை பல செய்தாலும்
ஊற்றெடுத்து ஓடுக்கின்ற சிந்தனைகள் உதிர்த்தாலும்
சாத்தானை விரட்டிடும் சாமியார்கள் இருந்தாலும்...
நேர்த்தியாய் கதைபேசும் தலைவர்கள் வந்தாலும்
கோட்டையில் கொடியேற்றி கோஷங்கள் போட்டாலும்
மேடைகள் பல போட்டு தத்துவங்கள் பொழிந்தாலும்
யார் வந்து போனாலும் வறுமைக்கும் பஞ்சமில்லை
அழுகின்ற பிள்ளைக்கு அரைவயிற்றுக் கஞ்சியில்லை.!
 

தூண்டியதால் ஆண்டியானேன்

என்னை காதல் கவிதை எழுதச்
சொல்லித் தூண்டிவிட்டதாரடி
அதை தாண்டி நானும் சென்று
என்னை தோண்டிப் பார்த்தும்
வார்த்தையின்றி மௌனமாக
ஆண்டியானேன் ஏனடி .....???

நித்திரையில் முதமிடும் குத்துவிளக்கு


குத்துவிளக்கு ஒன்று சத்தமின்றிச்
சிரிக்குது
நித்திரையிலும் எனைமுத்தமிட
அழைக்குது
சந்தனத் தென்றல் ஒன்று சங்கீதம் ...
பாடுது
புன்னகை பூவெடுத்து என் மீது
வீசுது
கொத்துகின்ற விழிகளாலே சத்துணவு
நீட்டுது
உன் சொத்து சுகம் நானென்று கையெழுத்து
போடுது

சேலை கட்டிய வானவில்


வண்ணத்துப்பூச்சி புடவை கட்டி
வருவதென்ன மாயமோ
மான் குட்டி சேலைக்குள்ளே
மறைந்திருக்கும் கோலமோ
நீலமயில் தோகையின்றி ...
நடந்து வரும் சாயலோ
அன்னம் ஒன்று அங்கிருந்தே
பார்ப்பதென்ன நியாயமோ
வானவில்லே ஓடி வந்து என்
தோளில் சாந்தால் பாவமோ
காலைக் கதிரே சோலைக் குயிலே
மாலை நிலவே கோயில் சிலையே
உன் மடியில் எனை தூங்க வைத்தால்
நானும் சொர்க்கவாசியே.... !!!
 

அறிவை கெட்டுகும் விடலை பருவம்


நிறை அதிகமாகி என் உடல் கனக்கின்றது என
உணவை குறைத்து உடல் பயிர்சி செய்தேன்
உடல் மெலிந்தது ஆனால் நிறை அதிகரித்தது
காரணம் அறிய வைத்தியரிடம் சென்றேன்
அவரும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்...
என்னவ இருக்கும் என்று நான் தடுமாறினேன்
பின்புதான் தெரிந்து கொண்டேன் என் இதயத்துக்குள்
நீ இருப்பதால் தான் நிறை அதிகரித்ததென்று
இப்போது நான் உடல் பயிர்சியும் செய்வதில்லை
என் மார்பு இறுகி என் இதயதுக்குள் இருக்கும் உனை
அழுத்தி மூச்சு விடமுடியாது துடித்துபோவாயோ
என்ற அச்சத்தினால் .....!!!
 

வீட்டுக்காரியா இவள் கொள்ளைக்காரியா ?

தாலாட்டும் தென்றலுக்குச் சொந்தக்காரி, இவள்
தள்ளாடும் வயதிலும் கொள்ளைகாரி
முல்லை தோட்டத்துக் காவல்காரி, இவள்
முத்துகள் சந்தைக்குப் பங்குக்காரி
தாமரை இதழ்களின் உறவுக்காரி, இவள்...
தங்கத்தின் ஜொலிப்புக்கு உரிமைக்காரி
வாளெடுத்து விழிகளில் வீசும் காரி, இவள்
வாழ்க்கைக்கு உகந்த வீட்டுக்காரி
சாமர்த்தியக் கதைகள் சொல்லும் காரி, இவள்
தாம்பத்திய உறவில் கெட்டிக்காரி
புருசனை மயக்கும் பூக்காரி , இவள்
புன்னகை செய்யும் புதுமைக்காரி
கண்களில் மையில்லாக் கவர்ச்சிக்காரி, இவள்
கருவினில் எனைத் தாங்கா தாய்க்காரி

தேன் சிந்தும் தேன் மொழியாள்

என் புன்னகைப் பூவே ஏன் இவ்வளவு தேனீக்கள்
என்னை சுற்றி பறக்கின்றன எப்போதும் நான்
உன்னுடன் பேசிவிட்டுப் போகும் போதெல்லாம்
ஓ நீ தேன் சிந்தும் வார்த்தைகளை அள்ளி வீசும்
போது உன் உதட்டில் இருந்து பறந்து என் மேல்
பட்ட உன் எச்சில் துளிகள் தேன் என்பதாலோ ..?

பேய் உறவானால் நாய் பகையாகும்

பேய்களுடன் நட்புறவு வைத்துக்கொண்டால் நீ
நாய்களுடன் போராடவேண்டி வரும், நாயென
தெரிந்தபின் கல்லெடு சொல்தொடுக்காதே பின்
நீயும் நாயாக வாய்ப்புண்டு...................!!!  

மூச்சிலும் பேச்சிலும் தென்றலாய்

நீ பேசாது போனால் மூச்சே நிக்குதடி
நீ பேச வந்தால் வார்த்தை தட்டுதடி
நீ பேசும் போது கவிதை கொட்டுதடி
நீ சொன்ன சொல்லில் உள்ளம் துள்ளுதடி
நீ தோகை மயிலோ துள்ளும் மானோ...
என் உயிரைக் கிள்ளும் கள்ளி நீயோ
என் எண்ண அலையில் நீந்தும் மீனோ
என் வாழ்வில் வந்த வசந்தம் தானோ
என் வழி மறிந்த தென்றல் காற்றோ
என் தேவை தீர்க்க பிறந்தாய் நீயோ....?

உன் தாயும் தந்தையும் மானிடர் தானே, தத்தையே
நீ மட்டும் எப்படி தேவதையாய் பிறந்தாய் ........???

மாத்திரை கொடுக்கும் கலிகாலம்


சோத்துக்கொரு பொய்யை சொல்லுகின்ற ஆளை
சேத்துக்குள்ளே தள்ளி விட்டோம்
மேடைமேலே பொய்யை அள்ளி விடும் ஆளை
போர்த்தி விட்டு வணங்கி நின்றோம்
நாத்து நடும் போது இடம் பார்த்து நடு என்று பல...
பழமொழிகள் சொல்லி வைத்தோம்
சாத்திரிகள் கூட இப்போ மாத்திரைகள் சொல்லும்
கலி காலத்தை கொண்டுவந்தோம்
இதைக் கேட்கின்ற போதே மனம் வியக்கின்ற ஆளை
பார்த்து நாம் நகைத்துக்கொள்வோம்.. !
 

என் நாடித்துடிப்பின் நாயகி நீ

மூச்சு விடுவது நானாக இருந்தபோதும்
உள்ளே துடிப்பது உன் இதயமெல்லவா
பேசுவது என் நாவாக இருந்தபோதும்
அதை பேசவைப்பது உன் உயிரல்லவா
நாடுவது என் மனமானாபோதும் என்
நாடித்துடிப்பின் நாட்டத்தின் ஓட்டத்தில்
என்றும் என் நாயகி நீ அல்லவா .............!

நிம்மதி இழந்தேன் பொன்மொழி கேட்டு

நிம்மதி என்னை கேட்குது கேள்வி
உன் மதி எங்கே போனது என்று
வெண்மதி போலே வந்தவள் உன்னை
தன்மதி இளக்க வைத்தது ஏனோ
கண்ணகி என்று நினைத்ததினாலே
முழுமதி இழந்தேன் பொன்மொழியாலே 

தரித்திரத்துக்கு கிரகம் பிடித்தால் உபத்திரம்

தரித்திரம் பிடித்தவன் தலைகீழாக நிற்க
உபத்திரம் பிடித்தவன் உட்கார்ந்து ரசிக்க
மருத்துவமனையில் வைத்தியம் நடக்க
கிரகம் பிடித்தவன் மௌனவிரதம் இருக்க
விவகாரம் பிடித்தவன் விவாதம் பண்ண
தலைக்கணம் பிடித்தவன் இதுவெல்லாம்
இலக்கணப் பிழை என்றானாம்...............!!!

செல்லப்பெயர் சொல்லத்தெரியா என் செல்லம் நீ

உனக்கோ என்னை செல்லப் பெயர் சொல்லி
அழைக்கத் தெரியவில்லை
எனக்கோ நீ எனது செல்லம் என்பதைத்தவிர
வேறேதும் தெரியவில்லை
நீ சொல்ல முன் நான் செல்வேனோ மண்ணுக்குள்...
அதுவும் தெரியவில்லை
நீ சொன்னால் பறப்பேன் விண்ணில் என்பது கூட
உனக்குப் புரியவில்லை ..!

அறிவை கெடுக்கும் விடலைப்பருவம்

விடலைப் பருவம் விழியை மறைக்கும்
கனவில்க் கூட கவிதை சுரக்கும்
அறிவை எடுத்து அதன் மேல் அடுக்கு
அடுத்த கணமே அமைதி பிறக்கும்
உன் தலைக்கு மேலே கத்தி தொங்கும்
நிமிர்ந்து எழுந்து அதனைக் கவனி, இல்லை
விழுந்து நெஞ்சில் குத்திக் கிழிக்கும் .......!!!

மனிதனை அறிய மனிதனால் முடியவில்லை

மனிதர்களை புரிந்து கொள்ள நீ
மனிதனாக இருந்து கொண்டு
வருந்துவதில் பயன் இல்லை

மிருகமாக மாறி நீயும் மனிதரோடு...
கலந்து கொண்டு அறிந்து கொள்ளும்
வேளையிலே வருந்திடுவாய் மனிதனாக

தேடி வந்த உறவுகூட இறக்கை நன்கு
முளைத்த பின்னே உன்னை விட்டுப்
பறந்து செல்லும் மறந்திடாதே

அப்போ விழிகள் கலங்கி நீரைச் சிந்தும்
அதை துடைக்க அன்று யாருமின்றித்
தவிக்கும் போது உணர்ந்து கொள்வாய்
மனிதர்களின் மகத்துவத்தை

பெற்றவர் போல் என்றும் மற்றவர் இல்லை
உத்தமர் என்று இங்கே யாருமே இல்லை
தத்துவம் சொல்ல நான் வித்தகன் இல்லை
சத்தமாய்சொல்வதால் உண்மையும் இல்லை

என் மனதினில் பட்டதை நான் மறைக்காமல்
சொல்கின்றேன் கவிதை என்று நீ கணக்குப்
போடாமல் உன் இதயத்தை தொட்டிட்டால்
எழுதிடு கருத்து நீ.....................!!

வியர்வையில் பூத்த மொட்டு


பொத்தி வைத்த மொட்டு ஒன்று
மெத்தையிலே பூத்தது
மூடி வைத்த முத்து ஒன்று
முத்தத்திலே வேர்த்தது
கால் முளைத்த வெள்ளி ஒன்று...
கவித்துவமாய் பேசுது
கண் சிமிட்டும் கவிதை ஒன்று
கன்னியாகச் சுற்றுது
கை முளைத்த நிலவு ஒன்று
கன்னத்திலே கனி கொண்டு, தன்
கண்ணாளன் வரவுக்காக
காத்திருக்கும் கிளி ஒன்று...!!!
 

சூழ்நிலை அறிந்து போர் செய்

விற்போர் தொடுக்கமுன்னே உன் முன் நிற்போர் நிலையறிதல் வேண்டும்
சொற்போர் புரிவதென்றால் அதை அங்கே கேட்போர் உணர்தல் வேண்டும்
இல்லாவிடில் அங்கே உன் முன் நகைப்போர் நாயகனாவார்......... !!!

சண்டையின்றி சாய்த்த சண்டாளி




ஏழும் ஏழும் பதின்நான்கென்றேன்
தோழன் நீ என் சொந்தம் என்றாள்

எட்டும் எட்டும் பதினாறென்றேன்
தட்டி விட்டுட்டு எட்டாதென்றாள்...

வட்டம் போட்டு நடுவில் நின்றேன்
சட்டப்படி இது செல்லாதென்றாள்

கட்டம் கட்டி கணக்கு போட்டேன்
கூட்டிக் கழித்து தவறு என்றாள்

சகியே இதுவுன் சதியா என்றேன்
விதியை வெல்லும் மதியிதுவென்றாள்

தொண்டை காய்ந்து என் மண்டை
வெடித்து .சண்டை .போடாமலே

பொத்தென்று சுருண்டு பொசுக்கென்று
வளைந்து சாய்ந்து விழுந்தேன் தரையில் !

சிந்தனையை விலைபேசும் மந்தைகள்


மந்தைகள் கூடும் சந்தையில்
விந்தைகள் என்ன விலை
சந்தனம் பூசிய சாக்கடையில்
சிந்தனைக்கு என்ன வேலை
வஞ்சங்கள் போடும் பஞ்சனையில்...
தஞ்சனை கொள்வோர் எத்தனை
எதற்கு இந்த மந்த நிலை
யார் பின்னி வைத்த வலை.. இது
புரியாதால் மனதில் எத்தனை அலை !