நரிகள் கூட்டமோ நாட்டுக்குள் அதிகம்
நல்ல பாம்புகள் கூடி போடுது ஆட்டம்
ஓநாய்கள் தான் இங்கு ஓட்டுக் கேற்குது
செம்மறிக் கூட்டமோ வாக்குப் போடுது
பூனைகள் தான் இங்கே புரட்சி பண்ணுது
புரியாத எலிகள் புன்னகை செய்யுது
விழிகள் இருந்தும் விழிக்க மறந்தோம்
விண்ணை பார்த்து கையை விரித்தோம்
மண்ணை நோக்கி மழை பெய்த போதும்
நம் எண்ணங்கள் இன்னும் துளிர்க்கவில்லையே...

No comments:
Post a Comment