Wednesday, 22 March 2017

சுயம்வரம் நடத்தும் சுயநலம்

சுயநல உச்சத்தில்
சுயம்வரம் நடக்கின்றது


சுகாதாரம் இல்லாத
சுதந்திரம் நிலைக்கின்றது



தலையாகக் கடமைகள்
தலைகூனி கிடக்கின்றது


தார்ப்பரியம் பேணாத
தர்மங்கள் ஜொலிக்கின்றது


பாசங்கள் எல்லாம் இங்கு
பகல்க் கனவாகும்


வேஷங்கள் மட்டும் இனி
வேதங்கள் ஓதும்


நியாயங்கள் தர்மங்கள்
நிற்கதியாகும்


நாளைய உலகு அது
நமக்கென்னவென்று


நாய்களும் பேய்களும்
நர்த்தனம் ஆடட்டும்..!

புரிந்து கொண்டால் பூரிப்பேன்

ஏதேனும் ஒன்று எழுதட்டா இன்று
எதற்காக என்று புரிந்திட்டால் நன்று

பலகோடி விழிகள் பார்த்திடும் என்று
பலமுறை உரைத்தும் அறிவில்ல மண்டு

துணையாக சென்று துணிவோடு நின்று
பலகாரம் உண்டு பரிமாறிக் கொண்டு

வினையாற்றும் போது விபரீதம் உண்டு
தெளிவாக செய்யும் செயல்வழி நன்று

புதிர் ஒன்று போட்டேன் புரியாத என்று
புரியாமல் போனால் புகைப்படம் சான்று !

Monday, 13 March 2017

நஞ்சு வைத்தாலும் என் குஞ்சு நீயடி

வம்புக்கு அடங்கா ஆடவன் ஒருவன்
தூய அன்பென்று வணக்கினான்..

தன் ஆயுளை அள்ளி பூக்களாய் பின்னி
பாதத்தில் கொட்டினான்

அவன் பண்பினை அறியா பாலகி ஒருத்தி
சொற்கற்களை வீசினாள்

அவன் நெஞ்சினை பிளக்க நொந்துதான்
சிவக்க விழி நீரினில் மூழ்கினான்

நஞ்சிலே பழுத்த பிஞ்சினைப் போலவே
நெஞ்சம் தான் வெந்ததே

அவள் மஞ்சத்தை வென்றவன் வஞ்சகன்
என்றதால், மனம் கல்லறையானதே

நாணயம் கொண்டவன் போதனை செய்தும்
ஏன் வேதனை அள்ளித்தந்தாள்

கற்பனை தனிலே ஒப்பனைபண்ணி ஏன்
உயிரினை மென்று தின்றாள்

மிஞ்சி நீ போனாலும் நெஞ்சினை பிளந்தாலும்
என்றும் எந்தன் குஞ்சு நீ அல்லவா !

உயிர்குடிக்கும் கழுகுகள்

புறப்படும் தருணத்தில்
அகப்படும் பறவைகள்
இதயத்தின் யன்னலில்
இரத்தத்தின் சுவடுகள்



துளிர்த்திடும் வேளையில்
துண்டாடும் அவலங்கள்
விரக்தியின் எல்லையில்
விரியாத முல்லைகள்


சரித்திரம் படைப்பினில்
சதிராடும் சாத்தான்கள்
உழைத்திடும் முனையினில்
உயிர்தின்னும் கழுகுகள்


சிரித்திடும் நெஞ்சினில்
சில்லறைச் சிதறல்கள்
சிந்திக்கும் தன்மையில்
சீர்கெட்ட வண்ணங்கள்


சொர்க்கமும் நரகமும்
சொல்லட்டும் சுகத்தினை
பக்கத்தில் சென்று யார்
பார்த்தவர் நம்மிடம் ..?

தோரணம் கட்டும் தாரகை

தேகம் திகட்டாத என் தேவதையே
வானம் தலைகூனும் வானவில்லே
என் பருவம் மீட்டெடுத்த தோரணமே


கர்வம் தலைக்கேற்றும் தாரகையே
என் பாதி உயிர் தின்ற பாதகியே, எனை
மேவி நிலை கொண்ட மோகினியே

மாதர் குலம் ஏங்கும் மான்விழியே
மயக்கி வதைக்கும் மாதுளையே
என் மதியும் விதியும் உன்னிடமே !

வேஷங்களும் மோசங்களும்


நம்பிக்கை எனும் நாதங்கள்தனை
நாவினில் வைத்து சுற்றுதே பூமி


இங்கு நல்லவர் கெட்டவர் யாரென்று
தேடமுன் போகுதே ஆவி



பேச்சிலும் மூச்சிலும் யோக்கியம்
நாமென்று போடுதே சாவி


புத்தனும் காந்தியும் மொத்தமும்
நாமென்று ஆடுதே காவி


பாசங்கள் வைத்தவர் நெஞ்சிலே
ஏறித்தான் நடக்கிறாய் பாவி


வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றில்லை
என்றுதான் காட்டுறாய் தாவி


பொய்களும் மெய்களும் பொறுப்பற்றுப்
போனதால் சாய்கிறேன் வாடி


நாய்களும் பேய்களும் நாட்டியம் ஆடுதே
இங்கே பூ மழை தூவி


நீ நல்லவர் என்று நான் ஊரெல்லாம்
சொன்னதால் நிற்கிறேன் கூனி..!

கொட்டிக்கிடந்தது ஒட்டிக்கொண்டது

காட்சி கொடுத்த கதிரொளியே
எனை ஆட்சி புரியும் அரும்சுடரே
போற்றி புகழ்ந்த பொற்சிலையே
எனை பதுக்கிவைத்த பொக்கிசமே



என் நாடித் துடிப்பின் நாயகியே
ஊட்டி வளர்க்கும் முழுமதியே
என் உயிரில் தவழும் உன்னதமே
உறிஞ்சி குடிக்கும் இராட்சசியே


கொட்டிக் கிடந்த நவ மணியே
வெட்டியெடுத்த கயல்விழியே
ஒட்டிக் கொண்ட பெரும் சுகமே
நீ உத்துப் பார்த்தால் கனிரசமே


தேகம் முழுதும் தேன் சுவையே
என் தாகம் தீர்க்கும் மதுக்கடலே
சிணுங்கி சிவக்கும் சித்திரமே, நீ
மலர்ந்து ஜொலிக்கும் மலர்வனமே


படர்ந்து கிடக்கும் பனித்துளியே
பாவை வடிவில் பைந்தமிழே,
பருவம் சுமக்கும் பால் குடமே
என் பகலும் இரவும் உன் வசமே...!

துளிகள் பட்டு மொழியை மறந்தேன்

பட்டுத்தெறிக்குது துளிகள்
தொட்டுச்சுவைத்தன கிளிகள்


வெட்டிக்குவிக்குது விழிகள்
ஒட்டிக்கிடந்தன உயிர்கள்



முட்டித்தவிக்குது மொழிகள்
கொட்டிக்கிடந்தன கனிகள்


தட்டிக்கழிக்குது செவிகள்
எட்டிப்பறித்தன இதழ்கள்


நெட்டிமுறிக்குது இடைகள்
நாடித்துடிப்பினில் முயல்கள்


மாட்டித்தவிக்குது உடைகள்
காட்டிக்கொடுத்தன தடைகள்


விட்டுக்கொடுக்குது வழிகள்
பூட்டைத்திறந்தன மான்கள் !

வலிக்கின்றது இருந்தும் பிடிக்கின்றது



வலிகளே வலிகளை வலுவாக்கின்றது
வலிக்கிறது என்றபின்னும் வலிசேர்கிறது
வலிக்கின்ற போதுதிலும் சலிக்கவில்லை
வலுவாக இருப்பதினால் வலிக்கவில்லை!

கணக்கு போட்டு வாழ்ந்து பார் புரியும்


ஒன்றும் ஒன்றும் இரண்டு
பூட்டி வைத்தால் மூன்று
நாலும் இரண்டும் ஆறு
நடந்தது என்ன கூறு



ஆறும் ஒன்றும் ஏழு
எழுதி வைத்துப் பாரு
ஏழும் இரண்டும் ஒன்பது
ஒன்றாய் இருந்தால் தெம்பு


ஒன்பதும் ஒன்றும் பத்து
ஒத்துப்போனால் சொத்து
பத்தும் ஒன்றும் பதினொன்று
பகுத்து அறிவது நன்று


பதினொன்றும் ஒன்றும் பன்னிரண்டு
பழியுணர்ச்சியை கொல்லு
பன்னிரண்டும் இரண்டும் பதின்நாலு
பன்னீர் தெளிக்கச் சொல்லு


பதின்நாலும் ஒன்றும் பதினைந்து
பழகிப் பார்ப்பதில் கண்ணு
பதினைந்தும் இரண்டும் பதினேழு
பார்த்தும் ரசித்தும் செல்லு


பதினேழும் ஒன்றும் பதினெட்டு
பருவம் முழுவதும் பொன்னு
பதினெட்டும் இரண்டும் இருபது
படுக்கையில் மின்னும் பாம்பு


இருவதும் ஒன்றும் இருவத்தொன்று
இனிப்பாய் தொடங்கும் வம்பு
இருபத்தொன்றும் இரண்டும் இருபத்துமூன்று
இதற்குப்பின் தான் உனக்கு சங்கு..!