உள்ளுக்குள்ளே பல கோடி ஆசை இருக்கு
நேரம் வரும்போது சொல்வேன் உனக்கு
உன்னில் எனக்கேதோ மாயம் இருக்கு
மஞ்சம் வந்து என்னை நீ தட்டி எழுப்பு
கொஞ்சும் போது சொல்வேன் மீதி உனக்கு
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் ஒன்று இருக்கு.....
கொஞ்சம் வந்து அதில் ஆடி என்னை அடக்கு
பக்கத்தில் வரவும் அனுமதி இல்லை
பார்த்திட்டுப் போக முடியவும் இல்லை
தூரத்தில் இருந்தும் தருகிறாய் தொல்லை
துன்பமோ எனக்கு முடிவற்ற எல்லை
இதயத்தில் ஏனடி வீசினாய் முள்ளை..????

No comments:
Post a Comment