Monday, 24 September 2012

அன்பே என் அன்பே..!


♥ ♥ ♥ உன் அறிவால் என்னை அடக்கவில்லை
ஏன் அரிவாள் கொண்டும் மிரட்டவில்லை ஆனால்
உன் அன்பால் என்னை அசத்துறீயேடி என் அன்பே . ♥ ♥ ♥

ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்...!


குமரி போலே குழந்தை ஒன்று
கண்டபடி பேசுதடி கொஞ்சம்
ஏதும் சொல்ல முன்னே
கண் கலங்கி நிற்குதடி, உடும்பு
பிடித்துவிட்டு உலகமே தெரியும்
என்று ஊரெல்லாம் சொல்லுதடி
தவழத்துவங்க முன்னே தாவிக்
குதிக்குதடி, தடுக்கி விழுந்தாலும்
முடுக்கி விட்டதுபோல் கடுக்காய்
நண்டாட்டம் துடுக்கா நிற்குதடி
ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்
கோபம் வந்து திட்டவும் முடியல்ல
மூஞ்சிலே குத்தவும் முடியல்ல
சத்தமா கத்தவும் முடியல்ல
பித்தனாகி சுத்தவும் முடியல்ல
எது எப்படியோ அது அப்படியோ
இது இப்படியோ, .... நான் என்னடி
உன் பல் விளக்கும் பற்பொடியோ .???


இதயத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி..!


விண்ணோடும் முகிலோடும் நான்
விளையாடி மகிழவில்லை நான்
வானவில்லில் நிறமெடுத்து வண்ணம்
தீட்டி மகிழவில்லை என்னவளே உன்
இதழ்களிலே கருவெடுத்து அதில்

கற்பனையை குழைத்தெடுத்து தினம்
கவிபாடி மகிழ்ந்து வந்தேன் உன்
சொல்லெடுத்து சேர்த்து வைத்து
தோரணமாய் கட்டிவைத்து என்
நினைவுகளில் தொங்க விட்டு அதை
தொட்டு ரசிக்கையிலே என் நெஞ்சில்
பலகோடி பட்டாம்பூச்சி பறக்குதடி
நீ போகும் வழியெல்லாம் விழிமூடித்
தூங்காமல் வழிகாட்டியாக என்றும்
உன் நிழல் போல் தொடர்ந்திருப்பேன்.... !!!


செடியில் பூக்காத மலர் !***


பூத்துக்குலுங்கும் பூவை ஆனால்
அவள் பூஞ்செடி இல்லை
பேச்சில் மயக்கும் போதை ஆனால்
அவள் பேரழகியில்லை.... ஐயோ
அப்போ நீ யாரடி....? ஹா ஹா ஹா
நீதான் என் பூங்கொடி ..!

கவிதை அவளே என் கவிதை அவளே ! ***



கவிதை எழுதுகின்றேன் நான் கவிதை எழுதுகின்றேன்
காலம் தோறும் நான் பல கவிதை எழுதுகின்றேன்
அவளை எழுதுகின்றேன் என் அவளை எழுதுகின்றேன்
என் கவிதை அவள் என்று நான் கவிதை எழுதுகின்றேன்
என் உயிரே அவள் என்று என் உயிரில் எழுதுகின்றேன்

என் உறவே அவள் என்று என் உணர்வில் எழுதுகின்றேன்
என் உறவில் கலப்பாளா என் உயிரை எடுப்பாளா என்று
அவளை கேட்டு நான் அதையும் எழுதுகின்றேன்..
உயிரே நீயின்றி என் உலகம் ஊமையடி உன் உறவே
இல்லை என்றால் என் உயிரும் தொல்லையடி
இதையும் எழுதுகின்றேன் என் இதயம் எழுதுகின்றேன்...!!!

துன்பத்தை நீக்க வந்த இன்பம் !***


வெப்பம் போல் அப்பப்போ துன்பங்கள் தான் வந்து
என் இன்பத்தை கப்பம் கேட்டு நான் கையொப்பம்
இடமுன்னே, என் கைபிடித்து கரைசேர்க்கும் தெப்பம் நீயே
உன் தாய் போன்ற அன்பெனும் பாய்மரக்கப்பலில்
பயணம் செய்யத் துடிக்கும் குழந்தைதான் நானே......!!!

அன்பால் மறைந்த கண்ணீர் ***



என்னவளே என் எல்லாமானவளே
உன் பொல்லாதனத்தால் நான்
புழுவாய் துடித்தாலும் நீயே என்
இல்லாள் என நினைத்தால் என்
இதயம் குளிருதடி, சொல்லால் எனை

வாட்டி சோகத்தில் தள்ளினாலும் உன்
அன்பால் எனை வாரி மெல்ல அள்ளி
அணைக்கையிலே சொல்லெனா துயரம்
கூட பஞ்சாய்ப் பறக்குதடி புண்ணான
இதயமோ பூமேடை ஆகுதடி முத்தாரமே
முழுமதியே என் முல்லைச் செடியே உன்
கள்ளச்சிரிப்பே போதுமடி நான் காவியங்கள்
படைப்பதற்கு, உன் ஓரப்பார்வை போதுமடி
நான் ஓவியனாய் ஆவதற்கு இவை எல்லாம்
இருந்தாலும் உன் அன்பு ஒன்றே போதுமடி
என் கண்ணீரை நான் நிறுத்த .................. !!!!!!!

முரசு கொட்டும் கொள்கை ! ***


எண்ணத்திரையில் வண்ணம் பூசி கொள்கைமாறா நிலைத்து நில்
அப்போ வெள்ளம் ஒன்று உன் வாழ்வில் வந்தால் பள்ளம் இல்லா
உள்ளம் என்று முரசு கொட்டி முழங்கிக்கொள், அதை வெல்லம்
போலே வாயில் போட்டு சுவைத்து நீயும் மென்றுகொள்
வாழ்வில் எல்லாம் வசந்தம் என்று வானம் கேட்க உரக்கச்சொல்...!!!

Monday, 3 September 2012

என் சூத்திரமும் நீயே என் பாத்திரமும் நீயே ! ***



நான் சூத்திரம் தெரிந்தவன்
நீ ஆத்திரம் புரிந்தவள்
என் சூத்திரம் அறிந்ததால்
நீ என் பாத்திரம் ஆனவள்
உன் ஆத்திரம் புரிந்ததால்

நான் உன் தோத்திரமாகின்றேன்
நீ சாத்திரம் பார்த்து தள்ளினிற்காமல்
எனைமாத்திரம் நம்பி வந்தவள் நீயடி..!!!

அதிர்ச்சியா ஆனந்தமா ? ***



அன்பே நான் உனக்கு அதிர்ச்சியான விடையம் சொல்வேன்
அதை நீயோ ஆனந்தாமாகவே எடுத்துக் கொள்ளணும்
சேர்த்துவைத்த கனவெல்லாம் மிச்சமின்றி தீர்த்திடணும்
மெத்தயிலே நாம் இருந்தும் நித்திரையை மறந்திடணும்
பொத்தி வைத்த ஆசைகளை சொச்சமின்றிப் பேசிடணும்

உத்தரவு இல்லாமல் நான் பல யுத்தங்கள் புரிந்திடணும்
சத்தங்கள் ஏதுமின்றி நீயோ மொத்தததையும் தாங்கிடணும்
வண்டாக நான் மாறிக் கொண்டாடித் தேன் குடிக்க நீயோ
திண்டாட்டம் போடாமல் என் பொண்டாட்டியாகிடணும்
பூமியிலே இருந்தும் நாம் சொர்க்கத்தை தொட்டிடணும்
இத்தனையும் கூறுவதால் சிறிதேனும் அதி்ர்ச்சி உண்டோ
வெக்கத்தை நீ விட்டு பக்கத்தில் தான்வந்து கூறடி என்னவளே,. ?

நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை ! ***


விழியிலே நீர் தாங்கி உதடுகள் தடுமாறி

இதயத்தில் வலி சுமந்து துடிப்பது ஏனோ ?
நினைப்பது எல்லாம் நலமுடன் நடந்தால்
பிழைப்புக் கூட இங்கே பிழையாய்ப் போகும்
நடப்பது எல்லாம் நலமெனக் கொண்டு நீயோ

கிடைப்பதை வைத்து உடைத்திடு தடையை
சிரிப்பது கூட சிலரது வாழ்வில் வெளிப்படையாக
உதிர்ப்பது கடினம், இங்கோ குலைக்கின்ற நாயோ
கடிக்காதென்றும் அறுக்கிற வாளோ குலைக்காதென்றும்
பழமொழிகள் மட்டும் குறையவும் இல்லை, உன்
அறிவென்னும் வாள் எடுத்து அறியாமையை நீ வெட்டு
புரியாத புதிர் எல்லாம் புழுதியாய்ப் பறந்திடட்டும்....... !!!

அறியாமையின் பலவீனம் ! ***



இது பரிதாபமா இல்லை
பழிவாங்கும் படலமா..
இது அறியாமையா எங்கள்
அறிவின்மையா.
அடக்குபவன் யாரும் இல்லை
அடங்குவதே எங்கள் குணம்..
பணம் கண்டால் அடங்குவோம்,
பதவி தந்தால் மயங்குவோம்,
சொத்துக்கு ஏங்குவோம் பின்பு
சோகத்தில் நீந்துவோம்,,
வாய் கிழியக் கத்துவதில்
வரலாறு படைப்பவர் நாம்
கைகோர்த்து வலுசேர்த்து வாழ
மறந்தவர் நாம் மறுப்பவர் நாம் ...