Monday, 31 August 2015

பஞ்சவர்ணக்கிளி

பஞ்சவர்ணக்கிளி ஒன்று நெஞ்சணையில்
நிலை கொண்டு தன் சுந்தரத் தமிழினிலே
பல விந்தைகள் புரிவதென்ன...

மந்திர வலையினிலே மாட்டிய மான் போலே
சிந்தனை காட்டிலே சிக்கியதன் மாயமென்ன

சந்தனத் தென்றலாய் சிந்திட அவள் மொழி
தந்திரக் குவளையாய் ஏந்தியதே என் செவி

காதிலே தேன் துளி கண்களில் மின்பொறி
ஏங்கிடும் உள்ளத்தில் என்றுமே அவள் ஒளி

பூரண நிலவு பூமிக்கு வந்ததுபோல் தாரகை
நகைப்பில் தாமரை பூப்பதென்ன.....

ஆடிய மயில்கள் அவளை கண்டதும் தோகையை
மடித்தொழித்து சோகத்தில் மிதந்திட.......

கூவிய குயில்கள் ஒப்பாரி வைக்க வீசிய தென்றல்
வெந்நீராய் கொதித்திட நான் மட்டும் இங்கே பன்னீரில்
குளிக்கின்றேன்.................!

சமத்துவம் இல்லா சமுதாயம்



சமுதாயம் பற்றி நான் என்ன சொல்ல, இங்கே
சமத்துவம் இருந்தால் அதை நீ வந்து சொல்லு

கூழுக்கும் கஞ்சிக்கும் கூத்தாடும் உயிர்களை
கூரிய சொல்கொண்டு குறிவைத்து தாக்குறோம்

மண்ணுக்கும் பொன்னுக்கும் பன்னீரை தூவும் நாம்
பெண்களின் புன்னகையை கண்ணீரில் கரைக்கிறோம்

மாமியார் மருமகள் மதிப்புத் தான் இங்கு உண்டா
மாந்தர்கள் பேச்சிலே மரியாதை தினம் உண்டா

ஆடவர் கைகளில் அடக்கும் அதிகாரம் உள்ளதா
சீதனம் கேட்பது அவர்களின் ஆண்மையின் சின்னமா

தாரம் என வருபவள் உனக்கு சமைத்து போடவா
தாலி கட்டினால் மட்டும் அவளின் தாகம் தீருமா

பிள்ளைகள் பெறுவது பெற்றோர்களின் கடமையா
பொத்தி பொத்தி வளர்பது போட்டிக்கு அனுப்பவா

காட்டு மிருகங்கள் தன் இனத்துடன் கூடி வளருது
நாட்டில் விலங்குகள் வீடென்னும் கூட்டில் வாழுது

இங்கே பாவி யாரடா இதன் சாபம் ஏனடா அதன்
சாவி எங்கென்று முதல் தேடி திறவடா...........!!!

கண்சிமிட்டும் பொன் சிலை

பொன் சிலை ஒன்று உயிர் கொண்டு
கண்சிமிட்டுதே என் நிலை தன்னை
அறியாமல் கை நீட்டுதே

தலைவாழை இலை போட்டு எனை
அழைக்குதே மடி தாங்கி தலைகோதி
விதுந்தூட்டுதே

கலையாத என் நெஞ்சில் தீப்பற்றுதே என்
குலையாத எண்ணத்தில் அலைபாயுதே

கடலாக அவள் என்னை மூழ்கடிகின்றாள்
படகாக நான் மாறித் தத்தளிக்கின்றேன்..

துடுப்பாக யார் என்னை கரையேற்றுவார்
துணிவோடு படும் பாட்டை யார் நீக்குவார் ?

புரியாத புதிர்



ஏதோ இங்கே சரியில்லை
என்னவென்று புரியல்லை
கணித்து சொல்லமுடியல்லை
கடந்து செல்லப்பிடிக்கல்லை
வாழ்க்கை முறை விளங்கல்லை
வாதம் செய்ய விரும்பல்லை
போனவரெவரும் சொன்னதில்லை
வருபவர் யாரும் சொல்வதில்லை
யார்தான் இதற்கு விடை சொல்வார்
நான் யார் அதற்கு பதில் சொல்ல ...?
தெரிந்தால் நீயும் பதில்சொல்லேன்
முடிந்தால் நானும் முயற்சிக்கிறேன் !

உள்ளதை சொல்லு



உன்னை ஒன்று கேட்கணும்
உண்மை என்ன சொல்வாயா
உள்ளுக்குள்ளே என்னவென்று
உள்ளபடி நீ சொல்வாயா.....???

உள்ளத்துக்குள் நான் இருந்தால்
என்னை விட்டு செல்வாயா, உன்
எண்ணத்திலே தான் தொடர்ந்தால்
ஊமையாகி எனைக் கொல்வாயா

என்னுக்குள்ளே நான் நொருங்கி
என் கண்ணுக்குள்ளே நீர் நிரம்பி
என் தொண்டைக் குழிநீர் வற்றும்
போதும் உந்தன் நாமம் தாகமாகி

மண்ணுக்குள்ளே மறையும் செய்தி
மடலாய் வரும் ஒருநாள் தேடி, நான்
உலகை விட்டு பிரியும் போதும், என்
உண்மை பாசம் தீயில் மோதி உன்னை
வாழ்த்திப் போவேன் மலர்கள் தூவி..!

தேன் கலந்த வார்தை யாலம்


தென்பில்லாத் தேகம் கொண்டு
தும்பில்லாக் கயிறு கட்டி செம்பு
நிறைய தேன் இறக்கும் சங்கத்தமிழ்
மேடையிலே,... பண்பில்லாதவன்
வார்த்தை கேட்டு வம்பில்லாதவள்
வழுக்கி விழ கொம்பில்லாக் காளை
ஒன்று சங்கு ஊதும் நிலை இங்கு..!!!

வித்தகனா மனிதனா



புத்தகத்தில் சத்திருந்தால்
பத்திரமாய் நீ வழங்கு

வித்தகனாய் இருப்பதென்றால்
சாத்திரத்தை நீ விலக்கு

நித்திரையில் கனவு வந்தால்
பாத்திரத்தை நீ அடக்கு

புத்தியிலே கூர் இருந்தால்
மத்தியிலே நீ முழங்கு

சித்திரமாய் திகழ்வதென்றால்
சத்தியத்தை நீ வணங்கு

இத்தனையும் சாத்தியமா..?
மனிதனுக்குள் நீ அடங்கு.

கடவுளும் காதலும் ஒன்று



கண்ணில் பட்டு நெஞ்சை தொட்டு
உள்ளம் கொள்ளை கொண்டவளே

வண்ணம் பூச வார்த்தை கோர்த்து
கதைகள் பல சொன்னவளே

என்னை விட்டு எங்கே சென்றாய்
எண்ணம் என்னை கொல்லுதடி

இமைகள் மூடித் திறக்க முன்னே
இடியை நெஞ்சில் போட்டவளே

இருட்டில் என்னை தள்ளிவிட்டு
இறைவன் ஆணை என்றவளே

விதியே என்று சொன்ன போது
என் விழியில் அருவி கொட்டுதடி

சகியே உன்னை கண்டால் மீண்டும்
நானும் கடவுள் உண்டு என்பேனடி..!!!

ஏழை பென்னின் ஒப்பாரி


கோது நொருங்கிய நண்டு
மாது சமைக்க கண்டு

கேது ராகு இடம் சென்று
சாது மிரண்டது என்று

பார்வை இழந்தவன் வந்து
சூது நடக்குதே அங்கு

என் பாவம் தீர்க்கவா இங்கு
என காதில்லாதவனிடம் ஓதும்
நிலை கண்டு,

சோகம் தாங்க சோலைக்குயில்
மாலைக்கருக்கலில் மல்லாக்க
பறக்குதென்று

ஓலை குடிசையிலே ஒப்பாரி நடக்குதென்று
காலைக் கனவினிலே கரிக்குருவி
சொன்னதென்று

மாலை அணிந்து வந்த மணமகள் இது என்
சாபம் எனச்சொல்லி கோலம் கலைத்தாளாம்!

தனிமையில்லாத் தனிமை



தனிமையில் இருக்கின்றேன், நான்
தனியாக இல்லை
தனியாக இருக்கின்றேன் ஆனால்
தனிமையில் இல்லை

என் ஜீவநாதமே உன் நினைவுகள்
மட்டுமின்றி நீயும் எனக்குள்ளே
தான் வாழ்கின்றாயடி

எந்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மத்திலும் நீயே
என் விதியாக வேண்டுமென்று
வரம் அன்று கேட்பேனடி

அப்பொழுது கூட உன் உடலுக்கு
நானே உயிராய் வேண்டி பெரும்
தவம் ஒன்று கொள்வேனடி.

என் நிம்மதியே மதி கொல்லும் விதியே
இந்து நதியே உன் கல்லறையில் கூட எனக்கு
ஒரு இடம் வேண்டுமடி...!

உண்மை சொல்லும் மௌனம்



உண்மை ஒன்று சொல்லவா
உண்மை ஒன்று சொல்லவா

வாயை மூடி மனதைத்திறந்து
வார்த்தையின்றி மௌனமாக
உணர்வை இங்கே கொட்டவா

காதை நீயும் பொத்திக்கொண்டு
கண்ணை நன்கு விழித்துக்கொண்டு
என் கதையைக் கேட்க ஓடிவா...

என் விழியில் வடியும் கண்ணீர்
துளியும் அந்த உண்மை சொல்லுதா,

இல்லை ஊமை பேசும் பாஷை போலே
எந்தன் மொழியும் உள்ளதா...............???

கூத்தாடும் விலங்குகள்


நாட்டு நடப்பிலே தினம் பல கூத்து நடக்குதே
அதை காத்துக் கறுப்புக்கள் சேர்ந்து நடத்துதே

காட்டு விலங்கெல்லாம் நாட்டில் அலையுதே
அதை பார்த்து ரசித்தொரு கூட்டம் நகைக்குதே

சோற்றுக் உழைப்பது ஏனோ சேற்றில் கிடக்குதே
சாட்டுக்குழைப்பதோ இங்கே சாதனையாகுதே

வேடிக்கை எல்லாம் இங்கே வாடிக்கையானதே
காணிக்கை ஒன்றே இங்கே கோரிக்கையானதே

சாதிக்க நினைத்து சமாதியாகாதே சாத்தான்கள்
துணையிருந்தால் நீயே சரித்திரப் புருசனாவாய் !

கனவில்வரும் ராட்சசி



கனவிலும் ஏனடி கஞ்சத்தனம்
கள்ளி ஏன் இந்த சின்னத்தனம்
கட்டில்மேலே கொள்ளைத்தனம்
பார்வையில் சிறு வில்லத்தனம்
உள்ளத்தில் நீ வெள்ளை இனம்
உனக்குள் இருப்பது பிள்ளைமனம்
இதுவா உந்தன் சொந்தக்குணம்
அதுவா வாடி என் கொல்லைப்புறம்
இல்ல மதுவாய் மாறி என் அந்தப்புரம் !

காவடி ஆடும் கழுதைகள்



கிரகம் பிடித்ததென்று கரகம் எடுக்கின்றான்
நரக லோகத்திலே விரதம் இருக்கின்றான்
மரண ஊர்வலத்தில் கரணம் போடுகின்றான்

சாத்திரம் பார்பவன் சைக்கிலில் போகின்றான்
பரிகாரம் சொன்னவன் பல்லக்கில் சுற்றுறான்
ஆத்திரம் கொள்பவன் அனாதை ஆகின்றான்

இங்கே காசி தீத்தத்தை கழுதைகள் குடிக்குது
காண்டாமிருகங்கள் காவடி எடுக்குது, ஆடிப்
பெருக்கில் அர்ச்சணை செய்யுது ஆந்தைகள்
கூடிக் குலவுது செம்மறி ஆட்டு மந்தைகள்...

நாடித்துடிப்பிலே நாணயம் போனதே நல்லதும்
கெட்டதும் நாவினில் வாழுதே மாளிகைவீட்டில்
மானிடச் சிலைகள் ஏழைக் குடிசையில் எத்தனை
இன்னல்கள் சூடியஆடையில் ஏனிந்த யன்னல்கள் ?

அவள் மடி சொர்க்கம்


வெட்கம் வெட்கம் என்பார்கள் அதன் பொருள்
எனக்கு புரிந்ததில்லை... என் கைகள் உன்னை
தீண்டிய போது தான் தெரிந்து கொண்டேனடி
வெட்கத்தின் அர்த்தங்கள் என்னவென்று...

சொர்க்கம் சொர்க்கம் என்பார்கள் அதை நான்
நம்பியதில்லை ...உன் மடிமீது தலை சாய்த்த
போதுதான் உணர்ந்துகொண்டேனடி சொர்க்கம்
என்று ஒன்று இருப்பது உண்மையென்று......!!!

தாய்மொழியில் ஏன் தகறாறு


தமிழ் நாட்டில் நான் தமிழ் பேசியதால் என்
பேச்சு பல தமிழர்களுக்கு புரியவில்லை
அவர்களில் சிலர் பேசும்மொழி என்னவென்று
எனக்கும் விளங்கவில்லை...!!!

Sunday, 30 August 2015

நிலையற்ற சிலைகள்


நிலை கெட்ட பேச்சும் நிலை அற்ற மூச்சும்
விலையற்ற வாழ்வை சிலையாக்கிசி விற்கும்

நினைவில் தொங்கும் தோரணம்



பாவடை நாடாவில் அன்று பூமாலை கட்டி
பூரணநிலவில் தோரணம் தொங்கவிட்டு
காரணமின்றி காரியங்கள் நடத்தினோமே

சாமியார் இல்லாமல் கல்யாணம் கட்டி
மாமியார் இல்லாமல் மணல்வீடு கட்டி

நெருப்பில்லா அடுப்பில் குண்டான் சட்டியில்
கூட்டாஞ் சோறாக்கி உண்டு மகிழ்ந்தோமே

இன்று சாமியார் தீண்டாத மண்ணும் இல்லை
மாமியார் திட்டாத பொண்ணும் இல்லை....!!!

தரித்திரம் பிடித்த உபத்திரம்


தரித்திரம் பிடித்தவ(ளு)னுடன் சமாதானமாய் போனாலும்
உபத்திரம் பிடித்தவ(ளு)னுடன் உறவாடாதே ...!!!

புலம்பி தவிக்கும் இதயம்


என்ன நினைத்து கவிதை எழுத
என்னை நினைத்து ஏதும் எழுத

கண்ணே நீயும் கண்ணை கசக்கி
கட்டில் மேலே விழுந்து புரள

விளக்கம் இன்றி நீ புலம்பி குளற
இதற்கு எதற்கு நான் ஏதும் எழுத

உனை நினைத்து வார்த்தை தேட
உள்ளம் எல்லாம் வெல்லம் ஆக

வெள்ளம் மேலே வள்ளம் போலே
யன்னல் ஓரம் நானும் ஆட

வேண்டாம் அன்பே காண்டு ஆவேன்
நாண்டு கொண்டு மாண்டு போவேன்

மின்னல் போலே பாய்ந்து வந்து
என்னை அள்ளி கொண்டு செல்லு !

தேன் சிந்தும் தேவதை நீ


தேவதை தேகத்தில் பூ விரியுது
தேடி வந்து வண்டொன்று தேன்
குடிக்குது

தாமரை இதழ்களில் நீர் வடியுது
தாவி வந்து நண்டொன்று ஏன்
நெளியுது

பாவை விழிகளில் மீன் துடிக்குது
பறந்து வந்து கொக்கொன்று வலை
விரிக்குது

பூவை புன்னகையில் பால் சொரியுது
பாய்ந்து வந்து காளையொன்று பல்
இளிக்குது

தேன் குடித்த வண்டுக்கு என்ன ஆச்சு
தாவி வந்த நண்டுக்கு என்னதானாச்சு

பறந்து வந்த கொக்குக்கு ஏதோ ஆச்சு
பாய்ந்து வந்த காளைக்கு என்னமோ ஆச்சு

இதையெல்லாம் அறியாமல் என் மனசோ
குழம்பிப்போச்சு இப்படி குழப்பதில் வாழ்ந்து
எனக்கு பழகிப்போச்சு..!!!

வழுக்கி விழுந்தவன் கண்ணீர்


தடக்கி விழுந்தவன் கண்ணீர் கண்டால் நீயோ
இடக்கு முடக்காய் விளக்கம் சொல்கின்றாய்
வழுக்கி விழுந்தவன் வழியில் சென்றால் நீயோ
சாட்டுப் போக்காய் தத்துவம் சொல்கின்றாய்
மடக்க முடியாதவன் கிடக்க இடம் கேட்டால்
நடக்க உனக்கெதற்கு நாலுகால் என்கின்றாய்
படுத்த இடத்திலே அடக்கம் செய்து நீ இருக்கும்
வரையிலும் துடக்கு என்கின்றாய் ...................!!

உன்னால் தேயும் தேய்பிறை நான்



நினைக்கும் போது உருகின்றேன் உன்
நினைவில் தானே வாழ்கின்றேன்.... நீ
சிணுங்கும் போது கருகின்றேன்.. உன்
சிரிப்பில் மீண்டும் வளர்கின்றேன் .. நீ
முறைக்கும் போது இறக்கின்றேன் உன்
அணைப்பில் மீண்டு பிறக்கின்றேன் . நீ
தவிக்கும் போது துடிக்கின்றேன். உனை
தவணை முறையில் ரசிக்கின்றேன்... நீ
பிரிந்தால் உடலில் உயிர் இல்லை எனை
மறந்தால் நான் இருந்தும் பயன் இல்லை!

சந்தனக்கிண்ணியில் சாக்கடை

அருணாச்சல செட்டியார் அடுப்பிலே வெந்த
சட்டியார் விழுந்தாலும் உடையார் எழுந்தாலும்
மடையர் என்று பெயருக்கு பின்னும் முன்னும்
பெருமை என நினைத்து பேடித்தனங்கள் நாடித்
துடிப்பில் ஓடித்திரிவதால் தானோ பேசாமல்
இருக்கின்றாய் பெருமானே என் பெருவாழ்வு
பரநாசம் ஆனதே இதனாலே என துடித்தாள்
பேதை எதனாலே ..............................???

தாயாகும் தாரம் இவள்


ஈயாரே எறும்பாரே இனிப்பான
செய்தி ஒன்று கரும்பாக சுவை
உண்டு செவி கொடுத்து நீ கேளு
நான் தயாராக இருக்கின்றேன்
அவளை தாயாராக பார்ப்பதற்கு
அவளும் தயாராக இருக்கின்றாள்
தான் தாயாராக ஆவதற்கு
வாயார நான் உரைக்க மனசார
நீ ருசித்த ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் கருத்திருக்கு உனக்கது
புரிந்ததால் உலகுக்கே சொல்லி விடு!

மனதில் பழுத்த மாங்கனி

பலாப்பழம் வாங்க பண்ருட்டி சென்றேன்
அல்வா வாங்க திருநெல்வேலி சென்றேன்
முறுக்கு வாங்க மணப்பாறை சென்றேன்
வெற்றிலை வாங்க கும்பகோணம் சென்றேன்
ஓலைப்பாய் வாங்க பச்சமடை சென்றேன்
மல்லிப்பூ வாங்க மான மதுரை சென்றேன்
எனக்குப் பிடித்த இவைகளயெல்லாம் வாங்க
எல்லா இடமும் சென்ற நான் மாம்பழம் வாங்க
மட்டும் சேலம் செல்லவில்லை ஏன் எதற்கு
எனக்கு பிடித்த மாம்பழம் நீ இருக்கும் இடம்
--------- அதனால் அங்கு அல்லவா வருகின்றேன்

விளக்கே உன் விலை என்ன?


இருண்ட பலரின் வாழ்வின் விடிவிற்கு
விளக்கேற்றி வைக்கும் குல விளக்கே
உன்னை விலை பேசுகிறார்களே இந்த
உலகில் சில விளங்காத பயல்கள்....!!!

சேவலை குஞ்சாக்கும் மந்திரக்காரி

சாமக்கோழியாக வந்த அவள்
என்னை சண்டைக்கோழியாக
மாற்றிவிட்டு


இப்போகாட்டுக்கோழியாக ...
பதுங்குவது எதற்கு ?


வெடிவால் முளைத்த சேவல் போல்
நான் படியாமல் கூவித் திரிந்தேனே,


என்னை கறையான் உண்ணும்
குஞ்சுபோல் இன்றுபறனாசம்
பண்ணி விட்டாளே !

இளமை செய்யும் யுத்தம்

இரவில் நடக்குது யுத்தம்
இளமை தீயின் சத்தம்
நிலவின் மடியில் இரத்தம்
விரதம் முடித்தான் பக்தன்
அதையும் அறிந்தவன் புத்தன்
எதையும் புரிந்தவன் சித்தன் !

சந்தம் இல்லா சொந்தங்கள்


சொந்தங்கள் வாழ்வில் சந்தங்கள் ஆனால்
சந்தனக் காற்றாய் சந்தோசம் வீசும்

பந்தங்கள் வாழ்வில் மந்தங்கள் ஆனால்
சந்தோச காட்டில் மந்தைகள் மேயும்

பூச்சூடும் பெண் சிலை

பெண் சிலை ஒன்று தலைசீவி
பூ முடிக்குதே
என் நிலை மாறி சிலையாகி
வலை வீசுதே
மடல் வாழை குலை ஏந்தி
நடமாடுதே
என் விழியிரண்டும் தொலை
நோக்கில் விலைபேசுதே
வெண் மலை மீது நிலவொன்று
விளையாடுதே
என் மனமெல்லாம் கடலாகி
அலை அடிக்குதே
அவள் நடைபோட தரை மீது
கலை வடிக்குதே
அதை கண்டு புல் எல்லாம்
கவி படிக்குதே
இதனாலே என் மேனியெங்கும்
மழை பொழியுதே
எனை அறியாமலே அடிவயிற்றில்
உலைகொதிக்குதே..!

ஆத்திரத்துக்கு உதவாத பாத்திரங்கள்



மங்கைக்கு மாலை இட்டு
மாப்பிள்ளை என்கின்றாய்
சிங்கத்துக்கு சேலை கட்டி
சீதனம் கேட்கின்றாய்

தங்கத்தில் தாலி செய்து சாதனை
படைக்கின்றாய் தங்கையின்
கண்ணீரை தலை எழுத்தில்
புதைக்கின்றாய்

கருங்கல்லுக்கு காவி உடுத்து
கடவுளாய் வணங்கிறாய் காதிலே
பூவைத்து கடும்தவம் செய்கிறாய்
சாமியார் ஆகின்றாய்

இப்படி ஆத்திரத்துக்கு உதவாத
பாத்திரங்களை ஏற்று விட்டு பின்
வாழ்க்கையே வீண் என்று சொல்லி
மாத்திரை உண்கின்றாய்..!!!

மானம் கெட்ட மானிடனே உனக்கு
ஏன் ஆறறிவு.....???

என் இதயதில் நீ குழந்தையடி


அன்னாசிப்பழம் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்
பப்பாளிப்பழத்தை பார்த்தாலே எனக்கோ வாயூறும்
ஆனால் இதையெல்லாம் உண்டால் கருக்கலையும்
என்று எனது பாட்டி அன்று சொன்னதால் இன்று
அன்னாசிப்பழத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்
பப்பாளிப்பழத்தை எனக்கு பார்த்தாலே பிடிக்கவில்லை
காரணம் இவையெல்லாம் உண்பதால் என் இதயத்தில்
கருவாகி உருவாகி குழந்தையாய் தவழும் என்னவள்
கரைந்து விடுவாளோ என்ற அச்சம் கொள்வதால் ...!!!

ஆதாயம் தேடும் களுகுகள்


வருமான நோக்கோடு வரலாறு
பேசுகின்றாய் வறுமையை அதில்
தொட்டு வலைவீசி பார்க்கின்றாய்

வடிகின்ற கண்ணீரில் வலுச்சேர்க்க
பார்க்கின்றாய் வாழ்வென்றால் வலி
என்று வளைகாப்பு நடத்துகின்றாய்

வாட்டத்திலே தோட்டம் செய்யும் வல்லூறு
நமக்கெதற்கு காட்டுக்குள்ளே நீ இருந்தால்
வேட்டைக்காரன் தொல்லைதான் உனக்கு !

முத்தத்தில் நனையும் மலர்கள்



முத்தத்தில் வரும் சத்தத்தில் என்
பித்தம் தெளிய வேண்டும்
அதை ..... நீ .....
நித்தம் பொழிய வேண்டும்
அதில் .... நான் ...
மொத்தம் நனைய வேண்டும்

வெட்கத்தில் என் பக்கதில் உன்
நாணம் துளிர்க்க வேண்டும்
அங்கே.... நீ .....
அச்சம் தொலைக்க வேண்டும்
அப்போ .... நாம்....
சொர்க்கத்தில் படும் நஷ்டத்தை
உடன்...... உன்..........
இதழ்கள் பொறுப்பேற்க வேண்டும் !

சுவை அறியாச் சூனியங்கள்



எழுதத்தெரியாதவன் கைகளில் எழுதுகோல்
படிக்கத்தெரியாதவன் கைகளில் கவிதைநூல்
சுவைக்கத்தெரியாதவன் கைகளில் அமிர்தம்
ரசிக்கத்தெரியாதவன் கையில் பெண் ஓவியம்
பசி ருசி தெரியாதவன் கைகளில் பல ஆகாரம்
இப்படி தேவைப்படாதோர் கைகளில் எல்லாம்
தேவையில்லாமல் கொடுத்த உனக்கு எந்தன்
தேவைகள் என்னவென்று தெரியவில்லையா
என் தேவனே என முறையிட்டாள் தேவி.......!

இது தேவனின் குற்றமா தேவியின் குழப்பமா ?

கொடூரக் கொள்ளைக்காரி



கொடுமையாய் இருந்தும் கொடையாக நிக்கின்றாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகின்றாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கின்றாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகின்றாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கின்றாளே
உன் பொல்லாத்தனத்தால் நான் பொசுங்கிப்போறேனடி
என் எளியவளே எனக்குள் கருவாகி உருவானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி....... இல்லை
உந்தன் காலடியில் என்னை வெட்டிப் போடடி...........!!!

சாயம் பூசிய சாட்டுக்கள்



உண்மை இங்கே முக்காடு போட்டு
முடங்கிக் கிடக்குது
பொய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லாக்கில் சுற்றுது
தீமை மட்டும் தீயைப்போலே தினமும்
தீண்டிக்கொள்ளுது
அன்பு ஏனோ அடுப்பில் வெந்து காற்றில்
கரைந்து பறக்குது
உறவுகள் எல்லாம் உதட்டில் மட்டும்
ஊஞ்சல் ஆடுது
உரிமை என்று சொல்லிச் சொல்லி பல
உயிர்கள் போகுது
இயந்திரம் இப்போ மந்திரம் சொல்லி உனை
ஆட்டி வைக்குது
நாளைய உலகம் என்னவாகுமோ என்று
மனசுது ஏங்குது
நல்லதை சொன்னால் நாத்திகன் என்றே
சாயம் பூசுது
நல்லதும் கெட்டதும் சாமியின் கணக்கென்று
ஆத்திகம் சொல்லுது
இப்படி சாட்டுச் சொல்லி சாட்டுச் சொல்லியே
எங்கள் வாழ்க்கை ஓடுது.. !!!

கசக்கும் உண்மை


குட்ட குட்டக் குனிவதால் குட்டிக்கொண்டே இருக்காதே
ஒரு நாள் உனக்கும் வலிக்கலாம் அப்போ உன் வலியை
போக்க தட்டிக்கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள் ..!

யார் தான் நீயடி ?


மனதை மயக்கும் மயிலா நீ
மார்பில் கொத்தும் கிளியா

சேலை உடுத்த கொடியா நீ
செவ்வந்திப்பூ இதழா

காலை நேர கதிரா நீ
கவிதை பாடும் குயிலா

புள்ளி இல்லா மானா நீ
புன்னகைக்கும் கனியா

மாலை மலரும் மலரா நீ
மன்மதன் மயங்கும் சிலையா..?

மனச்சாட்சி இல்லா பொருட்காட்சி



சீர்கெட்ட செயலுக்கு சீர்வரிசை
என்று பெயரு
சீர்திருத்த முடியாமல் சீரழியும்
கதை நூறு
மனச்சாட்சி உனக்கிருந்தால் மனம்
திறந்து நீ கூறு
சம்மதம் இல்லாத சம்பிரதாயம்
தேவையா என்று.....?

காதல் மழையா காம மழையா ?


மீன் குட்டி சமைக்கிறாள் மான் குட்டி
நான் உண்டு மகிழ்வதை தான் கண்டு
ரசிக்கிறாள் விழிநீர் கொண்டு

நம் இடைவெளி குறைக்க அவள் இடை
கவி வடிக்க நாணம் குடை பிடித்தும் நாம்
நனைந்தோம் காம மழையில்

ஆடை தடை போட அதில் நானும் தடுமாற
அவள் மேனி எடை கூட மடி மேடை என
ஆக நான் தவழ்ந்தேன் கடல் நண்டாக

அவள் திண்டாட நான் கொண்டாட மலர்ந்தாள்
பூச்செண்டாக சுற்றிப் பறந்தேன் கரு வண்டாக
அட அட இதற்கு மேல் சொல்ல நான் மண்டல்ல.!

போலி நகைப்பில் பொழுது போகுது


கரிக்குருவி அழகென்று காகத்தின் கதை கேட்டு
கந்தைக்கும் வழியில்லாக் கயவர்கள் பலர் உண்டு
சந்தைக்கு போகத சரக்குக்கு மதிப்பில்லை..........நீ
விந்தைகள் புரியாமல் வீழ்வது முறையில்லை.
போலியாய் நகைத்திட்டு பொழுதினை போக்கிடலாம்
ஆனால் பிறந்த உன் பயன் பூமிக்கு தெரிவதெப்போ ...?

அம்மா அம்மா அம்மா



அம்மா எழுத முடியாக் கவிதை
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ
எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !

அதிஷ்டம் அடிக்கா அப்பாவி



அவள் கோபப்பட்ட போது தான் தெரிந்து
கொண்டேன் கோபத்திலும் இத்தனை
அழகா என்று

அவள் என்னை திட்டும் போதுதான் அறிந்து
கொண்டேன் திட்டிலும் கவிதை கொட்டும்
என்று

ராட்சசி கடைசி வரை என்னைஅடிக்காமல்
இறுதியில் சிறு புன்னகைப்போடு சென்று
விட்டாளே

அவள் என்னை அடித்திருந்தால் அதிஷ்டம்
அடித்த அதிஷ்டசாலியாகி இருப்பேன் நான் !

விடையில்லாக் கேள்விகள்



விலை மதிக்க முடியா மாந்தர்கள்
விலை போகாத மாணிக்கங்கள்
தடை போடும் சீதன ஆதிக்கங்கள்
விடை சொல்லா ஆண் வர்க்கங்கள்
கண் கலங்கும் பெண்கள் அவலங்கள்
மண் அளக்கும் ஆண்கள் சடலங்கள்
வென்னீரில் குளிக்கும் மருமகள்கள்
பன்னீரை தெளிக்கும் மாமியார்கள்
கண்ணீர் கண்டும் வருந்தா மனிதர்கள்
என்ன உலகமடா சாமி எததை தேடி
ஓடுது இந்தப் பூமி .................................?

முத்தம்



காதல் முத்தம் இனிக்குமா
காம முத்தம் சுவைக்குமா

இந்த கேள்விக்கு பதில் தான்
கிடைக்குமா அந்த விடையை
உலகம் ஏற்குமா..?

மார்பில் சாய்ந்திட தயக்கமா
சாய்ந்த பின் வந்தது மயக்கமா

மார்பில் சாய்வதும் மடியில்
வீழ்வதும் காதல் மீது உருக்கமா
அந்த காமம் செய்யும் குழப்பமா

காதலில் ஏதடா முத்தச்சத்தம்
அப்போ அந்த காமத்தில் பொங்கி
எழுவதா இந்தப் பித்தம் ....???

தேவதை



என்னவள் வீசுகின்றாள் காதல் வலை
எனக்குள்ளே பொங்குதே காம அலை

தேவதை உன் சொந்தமடி நீயோ
எனக்கு பந்தமடி
உன் அழகை பாடிடவே எனக்குள்
வார்த்தை இல்லையடி

வாடாத மல்லிகையே வானத்து
புன்னகையே
வண்டாக நான் மாறி வருடித்தேன்
குடித்திடவா
உண்ட தேன் நெஞ்சினிலே உரமாக
உள்ளதடி
உள்ளங்காலில் முத்தமிட்டால் உச்சி
வரை கூசுதென்றாய்

பாலைக் கண்ட பூனை போலே பருகத்
தவித்தேன் நானும் அன்று
பறக்க நினைக்கும் பச்சி போலே இறக்கை
இன்றி துடித்தாய் நின்று

பூமியிலே மோட்ஷம் காணும் பூவினத்தில்
நாமும் ஒன்று
பூஜை செய்ய பூக்கள் எடுத்து பூவை மேலே
தெளித்தேன் அன்று

என்னவள் வீசுகின்றாள் காதல் வலை
எனக்குள்ளே பொங்கியதே காம அலை

மஞ்சம் வந்த குஞ்சு நிலா



மஞ்சம் வந்த குஞ்சு நிலா எனை
கொஞ்ச சொல்லி கெஞ்சுகிறாள்
பிஞ்சு போன நெஞ்சினிலே மெல்ல
பஞ்சு முத்தம் விதைக்கின்றாள்
வஞ்சி உந்தன் நெஞ்சிருக்க எனக்கு
பஞ்சு மெத்தை தேவையில்லை
அஞ்சி அஞ்சி நானிருந்தும் எனை
மிஞ்சி விட்டேன் தத்தை உந்தன்
வித்தைகளால்.......................!

உரிமை மறுத்தால் மிருகம் விழிக்கும்



கிடைக்கும் உரிமைகள் மறுக்கும் போது
உள்ளே உறங்கும் மிருகம் விழிக்கும்
தடுக்கும் செயலில் கடைக்கண் வைத்து
படுக்கும் போழுது கடித்துக் குதறும், உன்
இருக்கை உனக்கு செருக்கை கொடுத்தால்
நடக்கும் பொழுது வழுக்கி விழுத்தும், என்
கருத்தில் இருக்கும் அர்த்தம் புரிந்தால், உன்
கடைமை மீது கவனம் செலுத்து....................!