உன்னை தீவிரமாக காதலித்தேன்
என்னை தீவிரவாதி என்றாய்
உன்னை பாசத்தோடு பார்த்தேன்
என்னை பயங்கரவாதி என்றாய்
உன்னை உரிமையாக திட்டினேன்
என்னை கோபக்காரன் என்றாய்
உன்னை கைபிடிக்க ஆசைப்பட்டேன்
என்னை பைத்தியக்காரன் என்றாய்
உன் மனசுபோல் வாழ் என்றேன்
நீ தாண்டா மனிதன் என்றாய்
உன் மனசுக்கு பிடித்தவனைக்
............................... காட்டு என்றேன்
அவனைத் தான் தேடுகிறேன் என்றாய்
அப்படி என்றால் நான் யாரடி என்றேன்
நீ தாண்டா என் நண்பன் என்றாய் .......!!!

No comments:
Post a Comment