உங்கள் அடிமை என்னவென்று
உனக்குத்தான் தெரிந்ததுண்டோ
மருமகளாய் இருக்கையிலே
மாமியாரைத் திட்டுகிறாய்
நீயோ மாமியார் ஆனதுமே
மருமகளை குட்டுகிறாய்
வரதட்சனை கேட்பாருடன்
வாழ மறுத்தாயென்றால்
வாலிபரின் வாட்டத்தை
வானளவில் பார்த்திடலாம்
ஏச்சுப் பிழைப்பவரை
எஜமானாய் ஆக்குகிறாய்
தாலி கட்டுமுன், தன்
தாயைப் பார்க்கிறான்
தாம்பாழத்தில் வைத்தபின்
தலையை ஆட்டுறாள்
சாமியாய் இருந்து நீ
சக்தியை கொடுக்காமல்
மாமியாய் இருந்து நீ
மங்களம் பாடுகிறாய்
மறுமகள் இவள் என்று
மனதினில் கொள்ளாது
மருமகள் என்று நீயோ
மண்டியிட வைக்கிறாய்
கந்துவட்டிக்கு கடன் வேண்டி
கணவன் உனை காத்திட்டாலும்
திண்டு கெட்ட மனிதன் என்று
கண்டபடி திட்டுகிறாய்
மாமியார் சாமியாடுறாள்
மருமகள் பாவியாகிறாள்
ஐயகோ இங்கே யாரடா அடிமை
யாருக்கு இங்கு அடிமை ...... ?????

No comments:
Post a Comment