Saturday, 17 September 2016
பிச்சை கேட்கும் சிலைகள்
தலைக்கனத்தில் கொக்கரிக்கும்
பிழைப்பெதற்கு உனக்கு
இலக்கணத்தில் பிழை இருக்கு
விளக்கெடுத்துக் கொழுத்து
விலை உயர்ந்த படிப்பெதற்கு
நடமாடும் சிலைக்கு
கச்சை கூட பிச்சை கேட்கும்
உனக்கெதற்கு கொடுக்கு
ஓவியம் வரையும் லேகியம் ***
நம் தூரத்தை எண்ணித் துவழாதே
நாணத்தை மண்ணில் புதைக்காதே..
தாகத்தால் என்னை நீ தூண்டாதே
மோகத்தால் விண்ணை தாண்டாதே
தினமொரு திருக்குறள் திகட்டாமல் தின்றிட
தேவியுன் திருமொழி தேனெனச் சிந்துதே
காவியம் பாடிடும் கன்னி உன் கருவிழி
ஓவியம் வரையுதே பாவி என் நெஞ்சிலே
லேகியம் தாங்கிய மாதுளை இதழ்களால்
சூனியம் செய்கின்ற சூழ்ச்சமன் என்னடி !
உன் முகவரி என்ன முழுமதி ? ****
குக்குறுப்பாச்சான் குடும்பத்திற்கும்
உனக்கும் என்னடி சம்மந்தம்..
இப்படி அக்குவேறு ஆணிவேறாய்
என் நெஞ்சை கொத்திக் கிழிக்கிறியே
நான் அக்கறையோடு கேட்கின்றேன்
ஏன் இப்படி மோசம்....
எங்கே உந்தன் சந்நிதி அங்கே
சென்று கேட்கின்றேன் எந்தன்
அத்தையிடம் எனக்கொரு நீதி.
கிடைத்தால் மறுகணமே கட்டிடுவேன்
உன் கழுத்தில் தாலி மறுத்தால்
மறு கணமே உடுத்திடுவேன் காவி
உனக்கும் என்னடி சம்மந்தம்..
இப்படி அக்குவேறு ஆணிவேறாய்
என் நெஞ்சை கொத்திக் கிழிக்கிறியே
நான் அக்கறையோடு கேட்கின்றேன்
ஏன் இப்படி மோசம்....
எங்கே உந்தன் சந்நிதி அங்கே
சென்று கேட்கின்றேன் எந்தன்
அத்தையிடம் எனக்கொரு நீதி.
கிடைத்தால் மறுகணமே கட்டிடுவேன்
உன் கழுத்தில் தாலி மறுத்தால்
மறு கணமே உடுத்திடுவேன் காவி
Wednesday, 14 September 2016
என்னை நானே கேட்கின்றேன்
நான் நல்லவனா கெட்டவனா
எனக்குத் தெரியல்ல..ஆனால்
அந்த நாலுபேரின் சொல்லைக்
கேட்டால் நம்ப முடியல்ல...!
எனக்குத் தெரியல்ல..ஆனால்
அந்த நாலுபேரின் சொல்லைக்
கேட்டால் நம்ப முடியல்ல...!
அதுவும் இதுவும் தப்பு என்று
என் ஆத்தா சொல்லிச்சே..ஆனால்
அதையும் இதையும் சேர்த்துப்
பார்த்தால் அர்த்தம் பிழைக்குதே
நல்லவனும் கெட்டவனும் நமக்குள்
தானடா, அதில் ஞானி பாதி வேதி மீதி
இதில் சாமி ஏதடா.. இதை நானும் நீயும்
புரிந்து கொண்டால் மோட்ஷம் உண்டடா
என் கதையை கேட்டால் உனக்கும்
ஒன்றும் நஷ்டம் இல்லடா, நீ கஷ்டம்
என்று கோபம் கொண்டால், ...மிச்சம்
சொல்ல எனக்கும் இஷ்டம் இல்லடா !
என் ஆத்தா சொல்லிச்சே..ஆனால்
அதையும் இதையும் சேர்த்துப்
பார்த்தால் அர்த்தம் பிழைக்குதே
நல்லவனும் கெட்டவனும் நமக்குள்
தானடா, அதில் ஞானி பாதி வேதி மீதி
இதில் சாமி ஏதடா.. இதை நானும் நீயும்
புரிந்து கொண்டால் மோட்ஷம் உண்டடா
என் கதையை கேட்டால் உனக்கும்
ஒன்றும் நஷ்டம் இல்லடா, நீ கஷ்டம்
என்று கோபம் கொண்டால், ...மிச்சம்
சொல்ல எனக்கும் இஷ்டம் இல்லடா !
இதற்கு மேல் நான் என்ன சொல்வேன்
தேடாமல் கிடைத்த முத்து நீ
தேவதையாய் வந்த சொத்து நீ
தேன்கவிகள் கொட்டும் மத்து நீ
தென்றலாய் தழுவும் சிந்தும் நீ
தேவதையாய் வந்த சொத்து நீ
தேன்கவிகள் கொட்டும் மத்து நீ
தென்றலாய் தழுவும் சிந்தும் நீ
இனிமைதரும் இன்பம் நீ
இனிதான சந்தம் நீ... என்
இதயத்தின் சொந்தம் நீ..
ஈன்றெடுக்காத் தாயும் நீ
பூக்களின் சுவாசம் நீ
புன்னகை வாசம் நீ..
புல்லாங்குழலும் நீ
புல்மீது பனித்துளி நீ
காற்றிலணையா தீபம் நீ
கண்முன் நிற்கும் கடவுள் நீ
கனிகளின் சுவையும் நீ
காம த்(தீப்) பந்தமும் நீ
மாளிகை மஞ்சம் நீ
மைனாக் குஞ்சும் நீ
மஞ்சள் குங்குமம் நீ
மரகதக் கிண்ணம் நீ
இத்தனையும் நீ என்பேன்
இவைக்குள் தான் நான் என்பேன்
இதையெல்லாம் தாங்கி நிற்கும் ..
என் இனியவளே நீ என்பேன் !
இனிதான சந்தம் நீ... என்
இதயத்தின் சொந்தம் நீ..
ஈன்றெடுக்காத் தாயும் நீ
பூக்களின் சுவாசம் நீ
புன்னகை வாசம் நீ..
புல்லாங்குழலும் நீ
புல்மீது பனித்துளி நீ
காற்றிலணையா தீபம் நீ
கண்முன் நிற்கும் கடவுள் நீ
கனிகளின் சுவையும் நீ
காம த்(தீப்) பந்தமும் நீ
மாளிகை மஞ்சம் நீ
மைனாக் குஞ்சும் நீ
மஞ்சள் குங்குமம் நீ
மரகதக் கிண்ணம் நீ
இத்தனையும் நீ என்பேன்
இவைக்குள் தான் நான் என்பேன்
இதையெல்லாம் தாங்கி நிற்கும் ..
என் இனியவளே நீ என்பேன் !
கவிதை சொல்லும் கண்ணீர் !
கூறிய வார்த்தைகள் கூரிய
வாளென நெஞ்சிலே பாய்ந்ததே
பாவி என் கண்ணிகளில் மேவிய
நீர்த்துளி ஆறென ஓடுதே
ஏளனமான அந்நிலை கண்டதும்
என் மனம் வெம்முதே
ஓவியம் வரையமுன் தூரிகை
உடைந்து கைதனை கிழித்ததே
வேதனை போக்கிட பாவனை
செய்தது கொடும் காவியமானதே
தனிமையை தகர்த்திட தருணத்தில்
எய்தது விரகதாபத்தில் விழுந்ததே
சாமியின் கணக்கென்று சட்டென்று
சொன்னது பொட்டென்று நீத்ததே
நட்பிலும் கற்பிலும் மின்னிய நாணயம்
தேய்ந்து இன்று நிர்கதியானதே !
வாளென நெஞ்சிலே பாய்ந்ததே
பாவி என் கண்ணிகளில் மேவிய
நீர்த்துளி ஆறென ஓடுதே
ஏளனமான அந்நிலை கண்டதும்
என் மனம் வெம்முதே
ஓவியம் வரையமுன் தூரிகை
உடைந்து கைதனை கிழித்ததே
வேதனை போக்கிட பாவனை
செய்தது கொடும் காவியமானதே
தனிமையை தகர்த்திட தருணத்தில்
எய்தது விரகதாபத்தில் விழுந்ததே
சாமியின் கணக்கென்று சட்டென்று
சொன்னது பொட்டென்று நீத்ததே
நட்பிலும் கற்பிலும் மின்னிய நாணயம்
தேய்ந்து இன்று நிர்கதியானதே !
நியாயம் சொல்ல நாதியில்லை
உரச உரச மணப்பேன் நான்
சந்தனம் இல்லை
கடிக்கக் கடிக்கச் சிவப்பேன்
நான் வெற்றிலை இல்லை
தின்னத் தின்னச் சுவைப்பேன்
நான் முக்கனி இல்லை
எனை ருசித்த பின் எறிந்தால்
நான் யாரிடம் சொல்ல,,,???
எனை ருசித்த பின் எறிந்தால்
நான் யாரிடம் சொல்ல,,,???
Subscribe to:
Comments (Atom)







