சிறுகதைகள்

தத்துவத்தின் தடுமாற்றம் 




ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான் இருந்தான் .என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.அப்ப அந்த குதிரை காரன் குருவைபார்த்து என்ன சொல்லி இருப்பான் ???????

பதில் 

அப்ப அந்த குதிரை காரன் குருவைப்பார்த்து இப்படி கூறினான் ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.
அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.நன்றி !!
----------------------------------------------------------------------------------

அறியாமையின் கைவரிசை ..!!!




ஒரு ஊரில் ஒரு குருஜி கொஞ்ச சிஷ்யர்களை வைத்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அப்போது அந்தச் சிஷ்யர்களில் ஒருவர் , குருவை பார்த்து குருவே கடவுள் என்றால் என்ன அவர் எங்கிருக்கிறார் என்று கேட்க குரு சிஷ்யா கடவுள் உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையேஆபத்தில் இருந்து காப்பாற்றுபவர் , அவர் எங்கும் இருப்பார் ,, ஏன் உன்னில் என்னில் இந்த மரம் செடி அந்தநாய் கோழி எல்லாதிலும் இருப்பார் என்று சொல்லி பாடம் நடத்தினார்....ஒருநாள் அவர்கள் குரு குலத்தில் ஒருவர் நோய்வாய்பட்டு இருப்பதால் சிஷ்யர்களை காட்டுக்குப் போய் மூலிகை பறித்து வரும்படி அனுப்பினார்,,,,, அதன் படி காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும் போதுஒரு யானை கதறி அடித்துனொருக்கியபடி ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்ட எல்லோரும்ஓடி ஆங்காங்கே ஒளித்தனர் ஒரு சிஷ்யன் மட்டும் அப்படியே ஓடாமல் நிற்பதை கண்டு யானைக்குப்பின்னாடி ஓடிவந்த யானைப்பாகன் ஐயோ யானைக்கு மதம் பிடித்துவிட்டது எல்லோரும் ஓடுங்கள் முன்னாடிநிற்காதீங்க ஓடிடுங்க ஓடிடுங்க என்று கத்திய வண்ணம் வந்து கொண்டு இருந்தான்அப்படி கத்தியும் அவன் அப்படியே நின்றான் ஓடிவந்த யானை அவனை அடித்து தூக்கி எரிந்து விட்டு சென்றது ...பின்பு எல்லோரும் வந்து அவனை தூக்கிக்கொண்டு குருவிடம் கொண்டுபோய் சேர்த்தனர், அப்போது குரு கேட்டார்ஏனப்பா எல்லோரும் ஓடி ஒளித்துக்கொண்டார்களே நீ ஏன் ஓடாமல் அப்படியே நின்றாய் என்று அதற்கு அவன் குருவேநீங்கள் தானே சொன்னீர்கள் கடவுள் ஆபத்தில் இருந்து காப்பாற்ருவார் எங்கும் இருப்பார் என்று அதுதான் கடவுள் காப்பாற்றுவார் என்றும் ஓடிவந்த யானையில் கடவுள் இருப்பார் என்று நினைத்து காப்பாறு கடவுளே என்று ஓடாமல் நின்றேன் , ஆனால் யானை என்னை அடித்துவிட்டது என்றும்...அதற்கு குரு என்ன சொல்லி இருப்பார் , உங்களுக்கு என்ன தோன்றுகிறது ??? உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யவும்அன்புடன் கண்ணன் , அன்பே சிவம் !!!

பதில் 


அதற்கு குரு என்ன சொல்லி இருப்பார் , ........உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?????

எல்லோரும் கடவுள் வருவார் காப்பாற்றுவார் என நினைக்கிறீர்கள் கருத்தும் பதிலும் சொல்லுகிறீர்கள் யாராவது (எவராவது) ஒருத்தர் யானை மதம் பிடித்து ஓடி வருகிறது நாம் மனிதர் , முன்னாடி நின்றால் ஆபத்து ஓடித் தப்பனும் என்ற பகுத்தறிவுகூடாவா நமக்கு இல்லை, அவ்வளவு முட்டாள்களா நாம் ??? ... எவர் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவது ஒன்று, இல்லை புத்தகத்தில் படித்ததனை உண்மை என எண்ணி அதையே வேத வாக்கு என்று கூறுவது இன்னொன்று,... நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை நமக்கு, பிரச்சினையை கண்டு நடவடிக்கை எடுக்காமல் கடவுள் வருவார் காப்பாற்றுவார் என்பது சரியா இல்லை அது பெரிய முட்டாள்தனமான மூட நம்பிக்கையா சொல்லுங்கள் என் அன்பு உறவுகளே,, இப்படி இருப்பதால் தான் நாம் இன்னமும் ....................... இருக்கின்றோம் எல்லாவற்றிலும் .. எல்லோருக்க்கும் யானை கடவுள் , யானைப் பாகன் கடவுள், குரு கடவுள்.. ஏன் நம்ம அறிவில் கடவுள் இல்லையா ??? நம்ம அறிவு கடவுள் இல்லையா.. இந்தக் கதை நான் எழுதிய காரணமே வேறு ஆனால் எல்லோரின் பதிலை கண்டு நான் சந்தோசப் பட்டதை விட வேதனை அடைந்ததுதான் உண்மை ! குரு சொன்னது சரி...
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டிருந்தேன் யாரும் தாம் நினைப்பதை இங்கே பதிவு செய்யவில்லை .. ஏன் நம் சிந்தனை மங்கிவிட்டதா இல்லை மரணித்து விட்டதா .????? கூறுங்கள் என் அன்பு உறவுகளே பாசத்துக்குரிய நட்புகளே ???.. இது நான் யாரையும் வேதனை பட வைப்பது என் நோக்கம் இல்லை என் கோபம், ஆதங்கம்,, தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் , வாழ்க வளமுடன் அன்பே சிவம் !!!
----------------------------------------------------------------------------------

உண்மை என்ன ...???



ஒரு ஊரிலே ஒருவன் எப்போது கொடுமைகளை மட்டுமே செய்து வந்தானாம்,,, அதே ஊரில் ஒரு குரு எல்லோருக்கும் நல்லது பண்ணிட்டு இருந்தாராம் .. ஒருநாள் இந்த கொடுமைக்காரன் அவரை சந்திக்க சென்றானாம்,, அப்போது அவனை பார்த்து குரு கேட்டாராம் நீ ஏன் இங்கு வந்தாய் உனக்கு என்ன வேண்டும் என்று,, அப்போது அவன் நடந்ததை கூறினான் ,, நான் நல்லவன் ஆக என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டான்,, அப்போது குரு சொன்னார் நீ எப்போது எல்லாம் தப்பு செய்கிறாயோ அப்போதெல்லாம் உன் வீட்டு சுவரிலோ இல்லை மரத்திலோ ஒரு ஆணி அடித்து வா என்றும் நல்லது எப்போது செய்கின்றாயோ அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கு என்று..ஒருநாள் அவன் குருவை பார்க்க சென்றான் அப்போது குரு கேட்டார் எப்படியப்பா இருக்கின்றாய் ஆணி இப்போதும் அடிக்கின்றாயா என்று அதற்கு அவன் இல்லை குருவே இப்போது எல்லாம் அடித்த ஆணியை பிடுங்குகிறேன் என்று சொன்னான் அதற்கு நல்லது எல்லா ஆணியையும் பிடிங்கிய பின் வா என்று சொன்னார் உடனே அவன் சென்று எப்போதெல்லாம் நல்லது பண்ணுறானோ அப்போதெல்லம் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி முடிந்ததும் போய் குருவிடம் ஐயா ஆணி எல்லாத்தையும் பிடுங்கி விட்டேன் நான் இப்போ நல்லவன் தானே என் பாவம் எல்லம் தீர்ந்தது தானே என்று கேட்டான் அதற்கு குரு என்ன சொல்லியிருப்பார் ???????????????????????????


பதில் 

குரு உடனே அவனை பார்த்து மகனே நீ போய் திரும்பவும் நீ ஆணியடித்தை மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்துவா என்று அனுப்பினார்.. அவன் போய் பார்த்து வந்து குருவே எந்த ஆணியும் இல்லை எல்லாம் பிடுங்கி விட்டேன் இப்போ நான் தூய்மையானவன் தானே என்று கேட்க மகனே அணியெல்லாம் பிடுங்விட்டாய் ஆனால் நீ ஆணி அடித்த சுவர் எப்படி இருக்கு என்று கேட்டார் அதற்கு அவன் காயம் பட்டு ஓட்டை உடைவு இருக்கு என்று சொன்னான்,, சிரித்துவிட்டு குரு சொன்னார் நீ நல்லவனாய் மாறிவிட்டாய் ஆனால் நீ செய்த பாவம் அடையாளமாய் இருக்கும் எப்போதும் தீராது என்று........... காயங்கள் ஆறினாலும் தழும்புகள் சாட்சியாகும் ....!


-------------------------------------------------------------------------------------




தலைக்கனம் 


 தீக்குச்சி ஒருநாள் தீப்பெட்டியைப் பார்த்து கேட்டிச்சுதாம்.. இருவரும் தான் ஒருவருக்கு ஒருவர் உரசுகிறோம், ஆனால் நான் மட்டும் எரிந்து சாம்பலாக போகிறேன் நீ மட்டும் அப்படியே இருக்கிற என்று........
அதற்கு தீப்பெட்டி சொல்லிச்சுதாம், மழை வெயில் என எல்லாத்திலும் உன்னை உள்ளே பக்குபமா வைத்து எப்போதும் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னையே உரசிப்பார்க்கிறீயே அதுதான் நீ எரிந்து போகிறாய்.........., உனக்கு தலைக்கனம் அதிகம் என்று,,... !!!

1 comment:

  1. தர்சி14 June 2012 at 15:10

    தலைக்கனம் கதையும் விளக்கமும் அருமை kk

    ReplyDelete