Monday, 25 March 2013

அத்தனையும் நீயடி என் முத்தமிழே



கார்த்திகை பூவே என் கற்பூரவள்ளியே
மாத்திரை மருந்தே என் மன்மதபாணமே
கப்பல்வெள்ளியே என் காந்தக்கட்டியே
கொத்து மலரே என் கொய்யாப்பழமே
மார்கழிப்பனியே என் மாதுளம்பிஞ்சே
மூலைமுடுக்கே என் முல்லைச்சரமே
ஆட்டுக்குட்டியே என் அல்வாத்துண்டே
ஓலைக்குருத்தே என் ஒடியல்பிட்டே
கிளக்கன்மீனே என் கிறுக்குப்பெண்ணே
கடலைவடையே என் கடல்க்கரையே
கவிதை நடையே என் காதல்சுடரே
என் ஆத்திரம் தீர்க்கும் பாத்திரமே
உனக்கு என் அன்புத் தோத்திரமே...!!!

சந்தர்ப்பத்தை தவற விட்டு சாட்டு சொல்லாதே


சறுக்கும் என்று சாட்டுச் சொல்லி
சந்தர்ப்பத்தை இழக்காதே பறவை
கூட இறக்கை விரித்து உயரப்
பறக்கும் இரைக்காக..

கழுவுற நீரில் நழுவுற மீனாக இருக்க
நீயும் நினைக்காதே நடப்பது எல்லாம்
நடக்கட்டும் என்று கிடைப்பது எல்லாம்
கிடைதிடும் என்றும் நடக்கிற மனிதனை
தடுக்காதே..

கொடுப்பதற்கு உனக்கு யாரும் இல்லை
எடுப்பதற்கு இங்கே எத்தனை பேரடா
இந்த அடிப்படைகூடத் தெரியாது வாழ்ந்தால்
உந்தன் அடுப்புக்குள் பூனைகள் படுப்பதை
தடுப்பது யாரடா.............................................. ???

பசிக்கு விருந்தாகும் மருந்தவள்



சாப்பிடப் போறேன் நான் சாப்பிடப் போறேன்
உனை சோறோடு குழைத்து சாப்பிடப்போறேன்
நண்டு குழம்பாட்டம் மணக்கிறியே உன்னை
கடிச்சு ருசிக்கமுன் துடிக்கிறியே திருக்கை
வறையாட்டம் இழுக்கிறியே நான் தின்ன
முன்னமே சுவைக்கிறியே அரைத்தகறியாட்டம்
மினுங்கிறியே எனை அவிச்ச கீரையைப்போல்
மசிக்கிறியே சுறா மீனாட்டம் கொதகொதக்கிறாய்
சும்மா இருக்கும் என்னை கெடுத்துவைக்கிறாய்
முட்டைபொரியல் ஒன்று முழுசாய் இருக்குதென்று
வெட்டுக்கிளியாட்டம் எனை தட்டி எழுப்பிறியே
ஐயோ உண்ணச்சொல்லி விருந்து படைக்கிறியே
உனை பார்த்தாலே நாவில் இனிக்குதடி பக்கத்தில்
நீ வந்தால் பசி மயக்குதடி.......................................!!!

சோதனை கண்டு வேதனை கொள்ளாதே


தோல்விகளை தோழனாக்கி
அதன் துணைகொண்டு ..நீ
வெற்றிகளை எட்டித்தொடு

முன்னேறும் பாதைகளில் முட்கள்
...
இருப்பதுண்டு நீ அஞ்சி பின்னோக்கி
அடியெடுத்தால் அது மீண்டும் உன்
காலிலே குத்துமடா

தொலைனோக்கு பார்வைகளை நீ
தோள் கொண்டு நடந்தாய் என்றால்
வானம் கூட உன் தொடுதூரமடா

சாதனை செய்யும் போது சறுக்குவது
ககசமடா சோதனை கண்டு வேதனை
கொண்டாய் என்றால் உன் கல்லறையைக் கூட
சில்லறையாய் மதிப்பாரடா

காட்டிலே வாழ நினைத்தால் மிருகமாக
இருந்துவிடு நாட்டிலே வாழ்வதென்றால்
மனிதனாக மாறிவிடு

விதி என்று எண்ணி வீதியிலே சாய்ந்தாய்
என்றால் மதி கூட உன் வாழ்வில் சதி
செய்யும் மறந்திடாதே.

விழியும் மொழியும் கவியாக


விழி இருந்தும் பார்க்க முடியவில்லை
மொழி இருந்தும் பேச முடியவில்லை
கவிவண்ணம் பேசுகின்றேன் என்னவளே
உனக்காக நான் இங்கு....... :'( :'( :'( ....

இதயம் கேட்கும் கேள்வி


♥ ♥ ♥ என் இதயம் இப்போ துடிக்கின்றது
என் உயிரின் ஓசை கேட்கின்றது
என் கவலை காற்றில் பறக்கின்றது
அது ஏனோ என்று தெரிகின்றது இது
எதற்கு என்று புரிகின்றதா...... ♥ ♥ ♥

இதுவும் ஒரு பிழைப்பா ?




எரிகின்ற தீயினிலே எண்ணையை ஊற்றாதே

ஏமார்ந்த உள்ளத்தினிலே ஏறி நீ அமராதே

எந்தனையோ வழிகள் வாழ்வினிலே இருந்தும்

ஏமாற்றி பிழைப்பதிலே என்ன சுகம் கண்டாயோ

எதை நீ அடைவதற்கு இதை நீ கையாண்டாய்

ஏன் என்றே அறியாமல் எதற்காக உன் அறிவை

வேரோடு கொய்தெறிந்தாய் ................................ ???

இதயத்தின் ஓசை புரிகிறதா ?




வெள்ளை உள்ளத்தால் கொள்ளையடிக்கின்றாள்
மஞ்சள் குங்குமம் என் மார்பில் பூசுகின்றாள்
இடுப்பு மடிப்பிலே கொளுக்கி போடுகின்றாள்
தடுக்கி நான் விழுகின்றேன் கள்ள சிறுக்கி சிரிக்கின்றாள்
பென்சில் விரல்களால் நெஞ்சில் கிறுக்கி வைக்கின்றாள்
முறுக்கு மீசையை தா கடித்து நறுக்கி எறிகின்றாள்
வாயில் வந்ததெல்லாம் வாரிக் கொட்டுகின்றேன்
அவளோ வானவில்லாட்டம் வளைந்து ஜொலிக்கின்றாள்
ஏழுநிறங்களை அவள் எண்ணத்தில் காண்கின்றேன்
பாலைவனத்திலே நான் பஞ்சாட்டம் எரிகின்றேன்
சோலை வனமாக எனை தொட்டு தழுவுகின்றாள்
பத்தரைமணிக்குப் பின் என் நித்திரையில் முத்திரை பதிப்பவளே,
காமத்துப்பாலில் கலப்படமில்லாமல் முழுதாய் குடித்தால்
நம் மூளைக்கு நல்லதாம்
பெண்ணின் வாசனை ஆணுக்கு நல்லதென்று காமசூத்திரம் ஆய்வு பண்ணிச் சொல்லுதாம் .......!

போதனை செய்வது வேதனைக்கல்ல


ராதையே உனக்கு வேதனை கொடுக்க நான்
சோதனை செய்யவில்லை..
பேதையே உனை சாதனை புரியவைக்கத்தான்
போதனை செய்கின்றேன்

புதுமையென புளுகும் மடமைகள்


காகிதத்தில் அது மெல்ல தவழ்ந்தது,....
நாம் புதுமை என தினம் புளுகுகின்றோம்
புரட்சி என்று உளறுகின்றோம் வறுமை
கோட்டை தாண்டிடாமல் வழியை தானே
அடைக்கின்றோம் கவிதை பல வடிகின்றோம்
கருவை உள்ளே புதைக்கின்றோம் கருத்து
சொல்ல மறக்கின்றோம் கருணை கொண்ட
உள்ளங்களை கவனிக்க ஏனோ மறுக்கின்றோம்,
விழியை நாமே மூடிக்கொண்டு விடிவைத்தேடி
அலைகின்றோம் விளையும் பயிரின் முளையை
கண்டால் விழுந்து விழுந்து சிரிக்கின்றோம்
துளிரும் தளிரை கிள்ளித்தானே எறிகின்றோம்.!

குடை பிடிக்கும் திருக்குறள்



தாஜ்மகால் நிழலில் நான் தவமிருக்கின்றேன்
தனியாக இல்லை என்னவள் துணையோடு
மழை பொழியும் வேளை குடையாகிறாள்
புரியாமல் தவிக்கையில் விடையாகிறாள்
தடுமாறி நான் வீழ்கையிலே மருந்தாகிறாள்
கண்விழித்து பார்க்கையிலே விருந்தாகிறாள்
வரமாக எனக்கு கிடைத்த கொடை இவள்
வாழ்க்கையை நடத்திச்செல்லும் படை இவள்
என் அன்பே நீதானடி எனக்கு திருக்குறள்....!!!

உள்ளம் தந்து உயிரை எடுத்தாள்



♥ ♥ ♥ நீ உள்ளம் தந்தாய் என்னிடம்
அள்ளி கொண்டேன் சம்மதம்
என்னை கண்டேன் உன்னிடம்
உன் உள்ளே நானும் பூரணம்
என் நெஞ்சில் நீயும் தோரணம்

நம் காதல் காலம் ஆயிரம் உன்
அன்பே இதற்கு காரணம் என்
உயிரே உனக்கு சீதனம் ♥ ♥ ♥

நான் அசுரனும் இல்லை முனிவனும் இல்லை



ஆசையை காட்டி உலகை வதைத்தேனா
ஆம் மாபெரும்நடிகன் தான் உண்மையிடம்
இருந்து விருது வாங்கிய மகாநடிகன் தான்
நான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை
யாருக்கும் வழிகாட்டவும் வரவுமில்லை
தேவர்கள் எனை வாழ்த்தி அனுப்பவில்லை
சந்தனம் பூசிய தேகமும் இல்லை எனக்கு
தங்கத்தால் சூடிய முடியும் இல்லை, நான்
சாட்டையை கையில்வைத்து அலையவுமில்லை
சாவினை தடுக்கும் வித்தையும் என்னிடமில்லை
நான் அழியா வரம் பெற்ற அசுரனுமில்லை
அழிந்துபோவன சாபம் கொடுக்க முனிவனுமில்லை
பெண்களை காக்க வந்த புருசோத்தமனும் இல்லை
இந்த பொன்னான பூமியில் நான் யோகியுமில்லை
பொறுப்போடு வாழும் யோக்கியனுமில்லை நான்
இப்படியொரு பரிசு இதுவரை வாங்கியதுமில்லை
ரொம்ப நிறைவாயிருக்கு மிக்க நன்றி், என்னை சிறு
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா.......... ???

காத்திருப்பது நன்றி சொல்ல


காத்திருக்கிறேன் உன் பதிலுக்காகவில்லை
என் முடிவை சொல்வதற்கு
பார்த்திருக்கிறேன் உனை பழிதீர்கவில்லை
நன்றி சொல்வதற்கு............

நாகரீகமான நவீனக்காதல்



காதலர் தினம் இங்கே களிப்பாட்ட மேடையில்
ஆடையை குறைத்து பேரானந்தம் காண்பதே
கண்களும் தான் இங்கு கவர்ச்சியை உண்ணுதே
கைதட்டி பலகூட்டம் இது காதல்தானெங்குதே
மேற்கத்திய உலகில் இது தான் நாகரீகம் ஆனதே
மேலாடை இல்லாமல் பாவடை முழாடையானதே
அறியாத நம் இனத்தின் மரியாதை குறையுதே
புரியாத பல கூட்டம் இதற்கு பலியாடு ஆகுதே
இதை நான் சொன்னால் குறிவைத்து தாக்குதே
எம்மினதின் காதல் தனை அறியாத மூடனாடா நீ
ஆடை கொஞ்சம் விலகி அவள் அங்கம் அங்கே
தெரிந்து கொண்டால் அவன் உள்ளம் எல்லாம்
படபடக்க கண்கலெல்லாம் கடகடக்க ஓடிவந்து
மூடிவிட்டு உரிமையோடு கோபம் கொள்வான்
உண்மையான காதலன் .. இதைக்கூட அறியாது
ஆண் ஆதிக்கம் பெண்ணடிமை என்று சொல்லும்
ஒருகூட்டம் இருக்குது என்பதே பெரும் கேவலம்..!

உயிர் உள்ளவரை நான் காத்திருப்பேன்




விடியும் வரை காத்திருப்பேன் என் விழிகளில்
நீர் சொட்ட சொட்ட
முடியும் வரை காத்திருப்பேன் என் உதிரம்
மண்ணில் கொட்ட கொட்ட
புரியும் வரை காத்திருப்பேன் என் உணர்வை
நீ தொட்டணைக்க ....... !

போடி மடைச்சி நான் என்ன மடையனா ?




 உன் சுதந்திரம் இழந்து துவண்டது போதும்
என் சுயநலத்தில் நீ சுழல்ந்ததும் போதும்
அன்பென்று நம்பி நீ அழிந்ததும் போதும்

போதும் போதும் இனி எல்லாம் போதும்
என் உயிர் போகும் போதும் உன்னைத்தேடும்
என் கடைசி மூச்சிலும் உன் உயிரே வாழும்


உலகை விட்டு போகும் போது உன் நினைவை
தாங்கி என் ஆவி வாடும் ..... ஹா ஹா ஹா
ஐயோ ஹா ஹா ஹா ஹா ஐயோ ஹா ஹா..
இப்படி எல்லாம் சொல்லி உன்னை அப்படியே
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ பெரும்
பருப்பாட்டம் கதை பேசி என்னை நெருப்பாட்டம் 


எரித்தாலும் நான் பொறுப்போடு தான் இருப்பேன் 
உன்னை வெறுக்காமல் அணைத்திடுவேன், விதி
எல்லாமே என் விதி என்பாயே மடைச்சி, ஆமா 

உன் விதியும் நானே உன் விதியை வெல்ல வந்த
மதியும் நானே உன் கதியும் நானே உன் பதியும்
நானே என் சகியே தான் நீயே ............................ !!!

கதறித்துடிக்கும் உறவுகள்


அன்னையின் அழுகுரல்
அண்ணனின் ஆதங்கம்
வயசுக்கு வந்த தங்கை.
வயசான தந்தை, இந்த
வாழ்கையோ பெரிய சந்தை ,
அதில் வாழ்வதுதான் விந்தை.
.