Sunday, 15 January 2017
உயிரை உருக்கும் ஒருவார்த்தை
எப்படித்தான் நாம் ஒருவர் மீதான
அன்பையும் பாசத்தையும் கொட்டி
அரவணைத்து ஆறுதலாயிருந்தாலும்
ஒரு நிமிடம் ஏதோ ஒரு வகையில்
அவர்கள் பட்ட துன்பத்தை எண்ணி
நமக்கெனயாருமே இல்லையென்று
நம்மிடமே சொல்லும் போது தான்..
நமக்கே புரிகின்றது நாம் எதுவும்
இல்லையென்பதும் எங்களுடைய
கையாலாகத்தன்மையும்....
அந்த நிமிடம் நமக்கே நம்மீது வெறுப்பும்
விரக்தியும் உண்டாவதோடு எங்களின்
அன்பும் அதன் ஆளுமையும் எவ்வாறு
என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது !
Tuesday, 10 January 2017
பேச்சில் கொல்லும் பேதையவள் ****
பேதையவள் பேச்சினிலே
பெற்றெடுத்த மழலைதனை
கல்லறையில் புதைத்துவிட்டு
கண்ணீரால் கரைக்கின்றேன்
உறவென்னும் நாத்து நட்டு
உயிர்வாளும் நெஞ்சினிலே
அன்பெல்லாம் பொய்யென்றும்
உல்லாசக் கூத்தென்றும்...
இதயத்தில் இடியொன்று
இரட்டிப்பாய் விழுந்ததின்று
துடியாய் துடித்த போதும்
மரணித்துப் போகவில்லை
தருணத்தில் தான் சொன்ன
சடுகுடு வார்த்தைகள்கூட
மரணத்தை நியமிக்கும்
மகுடிதான் ஆனதென்ன
மலைத்துப்போய் நிற்கின்றேன்
மரணத்தின் வாசலிலே,
உனக்கு உலகெல்லாம் .......... என்ற
அந்த ஒற்றை வார்தை கேட்டு....
உணர்வில் மலரும் உண்மைகள்
உண்மையொன்று சொல்லப்
போறேன் ஓடிவந்து கேளடி,
நான் சொல்வதெல்லாம் உண்மை
என்றால் ஒத்துக்கொண்டு செல்லடி
வகிட்டில் இட்ட முத்தமும்
உதட்டில் பட்ட எச்சமும்
எனை துரத்தி வந்து முட்ட
நெஞ்சை வருடி அள்ளி ஒட்ட
பட்டுமேனி தொட்ட நாணம்
விட்டு என்னை போகல்ல
கட்டில் மேலே வட்டம்போட்ட
வெட்கம் இன்னும் தீரல்ல..
சட்டப்படி பார்க்கப்போனால்
பெரும் குற்றவாளி நீயடி
வெப்பப்பூவை தூவி என்னை
கொன்று தின்ற வெண்மதி..
இத்தனைக்கும் மேலும் இன்னும்
என்ன சொல்ல நானடி, இனியும்
ஏதும் சொல்லப் போனால், ஐயோ
எனது ஜீவன் ஏதடி.........................!!!
ஆவியாகும் பாவியடி நீ ****
கண்ணாலே வலைவீசி
கனிவான கதை பேசி
முன்னாடி நீ நின்று,
பெரு மூச்சுவிட்ட தருணங்கள்
பின்னாடி தொடர்ந்து வந்து
என் கண்னாடி இதயத்தில்
கல்வீசிப் போவது போல் பொல்லாத
வலி ஒன்று கண்னோரம் வடியுதடா
உண்ணாமல் உறங்காமல்
உன்னாலே வாடுகின்றேன்
கண்ணாலே சொன்ன கதை
எனக்குள் கருவாகி துடிக்குதடா
முன்ஜென்ம பந்தமென்று
முழுசாய் நம்புகின்றேன்
முகத்தை பார்த்து விட்டு,
என் முடிவை முடித்திடுவேன்
அன்போடு நீ இருந்தால்
அன்றேனும் வந்துவிடு
ஆவியாய் அலையமுன்னே
பாவி என்னை பார்ப்பதற்கு
சரியோ தப்போ சரியானால் சரி
சரியோ தப்போ சரியெனப்பட்டால்
சரியென எண்ணி சரிசெய்துகொள்ளு
சரியான ஒன்று சரியின்றிப்போனால்
சரியில்லை என்று பொருள்படல் தப்பு
சரியாக நின்று சரியெனச் சொல்லி
சரிபடச்செய்யதல் சரியென்று சொல்லு.!
பிரியமுடியாப் பிரியங்கள் ****
பிரியத்தின் பிரியத்தால்
பிரிந்துபோ என்கின்றாய்
பிரிந்து நான் போகமுன்
பிரியுமே என் உயிர்
மருந்துதான் இதுவென்று
வருந்தி நீ உருகையில்
பொருந்துமா இதுவென்று
மறந்து நீ பேசிறாய்
விழியில் கண்ணீர் சொட்டுதே
எனை விரட்ட எண்ணி
திட்ட உதிரம் மண்ணில் கொட்டுதே
என்னை மரணம் வந்து தட்ட
அன்பே என்னை செத்துப்போ
என்றுசொல் ஒத்து போகிறேன்
உயிரே உன்னை விட்டுப்போ
என்றுசொல் செத்துப்போகிறேன்
தெரியாமல் என்னை திருடிவிட்டாள்
உத்தரவின்றி உள்ளே வந்த
சித்திரப்பெண்ணே........என்
நித்திரை திருடிப் போனது
உந்தன் வித்தகக் கண்ணே
ஒற்றையில் நின்று வித்தைகள்
புரிந்த செண்பகக் க(ன்)னியே, உன்
சத்துணவுத் திட்டம் சிந்தையில்
மட்டும் எத்தனை சுவையே....
விதிதனைக் கொன்று மதியினால்
வென்று சதிராடும் கொடியே....
தெரியாமல் வந்து, ......... என்னை
அறியாமல் கொய்து,.....போனது
எனக்குப் புரியாமல் போச்சே.....!
காரணம் அறியா கட்டெறும்பு ****
விட்டுப்போன காரணம்
எனக்கு சொட்டுக்கூட புரியல்ல,..
நான் தட்டுக்கெட்ட வேளையிலும்,
உனை விட்டுக்கொடுக்க முடியல்ல
சட்ட திட்ட மேதுமின்றி,
எனை வெட்டி விட்டதேனடி,
உனை கட்டித் தங்கம் என்று சொல்லி
ஒட்டிக் கொண்ட வீணோடி
பட்டாம் பூச்சி கூட்டத்திலுள்
கட்டெறுப்பு நானடி,
எனை சுட்டெரிக்கும் தீக்குமுன்னே
வந்து திட்டிவிடு செல்லடி
Subscribe to:
Comments (Atom)







