அவளுக்கு நான் அடிமை ***
விழியில் மோதி எனக்குள் இறங்கி
உயிரை வாட்டுவதேன்
மனதை மயக்கி அறிவை ஒடுக்கி
அடிமை ஆக்கியதேன்
விரகதாபம் விரட்டி என்னை
வேள்வி செய்கிறதேன்
இதழ்கள் திறந்து இருந்த போதும்
இருளில் அலைகின்றேனே
பனியில் படுத்து புரழும் போதும்
தேகம் கொதிப்பது ஏன்.....ஏன்
உன் பேச்சில் என்றும் தேன் ஊறுது
என் மூச்சில் காமன் தேரோடுது
தேவதை விழிகளில் போதையும் வடியுது
தேகத்தை வாட்டிடும் தீயினை பொழியுது
தீயிலும் என் மனம் நீராடுது
தேவியின் பூஜைக்குப் போராடுது...
No comments:
Post a Comment