பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

  • 4 ) வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை போக்கற்றவனுக்கு பொலிஸ் வேலை 

  • இந்த பழமொழியை நாம் எப்போதெல்லாம் பாவிக்கின்றோம் ஒருவன் ஒரு செயலை தப்பாகவோ தவறாகவோ செய்யும்
    போதோ பேசும் போதோ இல்ல அறியாமையினால் தடுமாறி தவிக்கும் போதோ அவர்கள் செயலில் திறமை இல்லை
    இவர்களை யார் இந்த இடத்தில் வைத்தது அவன் அவனை அந்தந்த இடத்தில் வைக்கணும் இதுக்குத்தான் சொல்வார்கள்
    வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை போக்கற்றவனுக்கு பொலிஸ் வேலை என்று சொல்லி நையாண்டி பண்ணுவார்கள்.
    ஆனால் சொல்பவர்களை பார்த்து நகைப்பதா அழுவதா என்பதுதான் புரியவில்லை காரணம் இதன் பொருள் அப்படியும் இல்லை
    சொல்லும் பழமொழி சரியானதும் இல்லை வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை போர் கற்றவனுக்கு பொலிஸ் வேலை
    என்னும் பெரும் ஆழ்பொருள் கொண்ட பழமொழியை எப்படி எல்லாம் சொல்லிவைத்திருக்கின்றார்கள் . 


  • 3 ) காகம் திட்டி மாடு சாவதில்லை (சாகாது) ! 


இதை நாம் எங்கே பயன்படுத்துகின்றோம் எப்படி பயன்படுத்துகின்றோம் ஒருவர் நம்மை திட்டினாலோ தூற்றினாலோ விடடா விடு
இவன் எல்லாம் ஒரு பெரிய மனிதன் இவன் சொல்லி நடக்கப்போவதில்லை என்றும் அவன் சின்னப் பயல் நீ எவ்வளாவு பெரிய ஆள் என்று 
ஆறுதல் சொல்வோம். ஆனால் இங்கேயும் பழமொழியை தவறாக பயன்படுத்துகின்றோம் கா அகம் திட்டி மாடம் சாய்வதில்லை (சாயாது)
என்பதே பழமொழி கா அகம் என்றால் கறுப்பு தூய்மையற்ற இதயம் (உள்ளம் என்று பொருள்படும்) திட்டி ஒருபோதும் மாடமோ மாளிகையோ சாயாப்போவதில்லை என்ற பொருளில் சொல்லப்பட்டதை நாம் இப்படி திரித்துத் திரித்து சொல்லி வைத்திருக்கின்றோம்.


2 ) சோழயன் குடும்பி சும்ம ஆடாது



இதை நாம் அன்றாடும் வாழ்வில் சிலருடன் பேசும் போது அவர் எங்களிடம் ஏதோ ஒன்றை எதிர் பார்க்கின்றார் என்றும் அதை 
பெறுவதர்காகவே அவர் எங்களிடம் நடிக்கிறார் என்ற அர்தத்தில் இந்த பழமொழியை சொல்லி பொருள்கொள்வோம்.
ஆனால் உண்மையில் இதன் பொருள் இது அல்ல காரணம் பழமொழியே இங்கே தவறாக திரிக்கப்பட்டு நாளடைவில் இதுவே
பயன்பாட்டில் உள்ளது நிஜத்தில் சோழயன் குடும்பி சும்மாடு ஆகாது என்பதுதான் பழமொழி சும்மாடு என்றால் விறகு சுமக்கும் 
போதோ தண்ணீர் பானை சுமக்கும் போதோ தலையில் அண்டாமல் ( வலிக்காது ) இருக்க சும்மாடு  திருகணை போன்ற வடிவில் 
துணியால் செய்யப்பட்ட ஒன்று. அதன் பொருள்படிதான் என்னதான் குடும்பி வளர்த்தாலும் அது சும்மாடு போல் ஆகாது என்று சொல்லி
வைக்கப்பட்ட பழமொழியை நாம் மாற்றி காரியம் பெற ஒத்து ஊதுகின்றார்கள் என்ற அர்த்தத்தில் தவறாக பயன் படுத்தி வருகின்றோம்.


1 ) போன காய்ச்சலை புளிவிட்டு கூப்பிடு (கூப்பிடாதே) !

இந்தப் பழமொழியை எந்தச் சந்தர்ப்பதில் பயன்படுத்துகின்றோம் ஏன் பயன்படுத்துகின்றோம் இதன் பொருள் என்ன ?
இப்பழமொழியை என் அப்பாவே எனக்கு சொல்லி இருக்கின்றார் அதுகும் என்னை திட்டும் போது, ஒரு வாரம் நான் 
காய்ச்சலில் படுத்து இருந்து நலம் பெற்று எழுந்து சில நாள்களின் பின் மாங்காய் சாப்பிட்டேன் அதை பார்த்து இப்பதான் 
காய்ச்சல் மாறியிருக்கு மாங்கையை தின்று போன காய்ச்சலை புளிவிட்டு கூப்பிடு உனக்கு இருக்கு அப்புறம் என்று சொல்லி 
கோபப்பட்டார் நான் கேட்டதற்கு புளி சாப்பிட்டால் காய்ச்சல் திரும்ப வரும் என்ற பொருளில் கூறினார். உண்மையிலே இதன் 
பொருள் அது  அல்ல நாம் பெரும்பாலும் எல்லாவற்றையும் சமைத்து தான் சாப்பிடுகின்றோம் சமைக்காமல் சாப்பிடுவது 
மிக மிக குறைவே இப்படி சமைக்கும் போது கொதித்து ஆவியாக பல சத்துக்கள் வெளியேறுகின்றன அதனால் தான் பச்சையாக 
சாப்பிடுவது நல்லது என்று சொல்வர்கள், இப்படி சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து வெளியேறும் சத்துக்களை கொஞ்சமேனும்
திரும்ப சேர்க்கும் ஒரு முறைதான் இந்த எலுமிச்சம்பழம் விடுவது கருவேப்பிலை போடுவது சமைத்து இறக்கி வைத்தபின் 
அப்போது கூட நம் பாட்டிமார் சொல்வார்கள் உடனே புளி விடாதே ஆறிய பின் விடச்சொல்லி ஏன் என்றால் சூட்டோடு இருக்கும் 
போது விட்டால் மீண்டும் ஆவியாக மறைந்து விடும் என்பதற்காகவே, இதை நாம் புரிந்து கொள்ளாமால் காய்ச்சல் வரும் மாங்காய் 
சாப்பிடாதே புளி சாப்பிடாதே போன காச்சலை புளிவிட்டு கூப்பிடு என்பதையே கூப்பிடாதே என்று பலகாலமாக மாற்றி வைத்து
பயன்படுத்தி வருகின்றோம் வேறு (ஆனால் என்ன ஆகிப்போச்சென்றால் அதுவே நாவில் சுவையாகி சுவைக்காகவே எலுமிச்சம்பழம் 
என்று நிலைக்கு வந்துவிட்டது.


************************************************************************

No comments:

Post a Comment