மாலைக் கருக்கல் வேளையிலே
மான்கள் துள்ளும் சோலையிலே
மயில் போலே மங்கை ஒன்றை
மனக்கண்ணால் நான் பார்த்தேன்
செருக்காத சிலையாக
நறுக்காக நின்ற அவள்
கிறுக்காத கவிதை போல்
சறுக்காது எனை ஈர்த்தாள்
மோகத்தில் நான் மூழ்கி
தாகத்தில் தவிக்கயிலே
கட்டுடலைத் தான் அசைத்து
மொட்டிதழை விரித்தாளே
அம்பொன்று பாய்ந்து வந்து
அடிமனதில் துழைத்தது போல்
ஐம்புலமும் படபடத்து,,, நான்,
அங்கேயே சாய்ந்தேனே
தென்றல் போல் வந்த அவள்
தேகத்தை தழுவியதால்
தேனி போல் நான் மாறி
பூவைக்குள் மறைந்தேனே..
No comments:
Post a Comment