காதில் பூ வைப்பது ஏன் ??
காதில் பூ வைப்பதும் அதன் பொருளும் !
நம் முன்னோர்கள் நமக்கென விட்டுச்சென்ற பல பழக்க வழக்கங்களில்
காதில் பூவைப்பதும் ஒன்றாகும், இதன் காரணம் தான் என்ன எதற்காக
காதில் பூவை வைத்தார்கள் என்று பலரும் கேட்பதுண்டு அப்படி நான்
என்னையே கேட்டபோது என் கருத்துக்கும் அறிவுக்கும் எட்டியதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியே.
அதாவது பூக்களில் பல மருத்துவக்குணங்கள் இருப்பது நாம் அறிந்தவையே
அதன் குணங்களின் பயன்கள் எம் சுவாசத்தின் ஊடாகவும் செவிவழி ஊடாகவும் மூளைவரை சென்று எங்கள் மூளையின் இறுக்கத்தையும் தொய்வுகளையும் சரி செய்து நமக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்மைசுறுசுறுப்பாகவும் தெளிவான சிந்தனைகளையும் கொடுக்கின்றன இதன் பொருட்டாகத்தான் வில்லவம் இல்லை துளசி போன்றவற்றையும்
இணைத்துக் கொண்டார்கள்.இதற்கு உதாரணமாக நம்மிடம் சிலர் பொய் சொல்லும் போதோ அல்லது எம்மை முட்டாளாக்கி ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும்போது என் காதில் பூ வைக்காதே நான் ஏற்கனவே காதில் பூ வைத்துவிட்டேன் என்று சொல்வதுண்டு,
இதன் அர்த்தம் நாம் தெளிவாய்இருக்கின்றோம் எங்களை ஏமாற்றாதே என்பதை உணர்த்துகின்றோம்இந்த காதில் பூவைக்கும் பழக்கங்களை நாம் மட்டும் கையாளவில்லை தாய்லாந்த், வியட்நாம், கம்போடியா மற்றும் சில நாடுகளிலும் நமக்கு ஒருபடிமேல்சென்று வாழைநாரில் பூக்களை தொடுத்து தலையிகட்டி வந்தார்கள்ஆனால் ஏன் எதற்கு என்று தெரிந்து கொள்ளாமல் போனதின் பயன்அதை ஒரு கேவலமான செயலாகவும் வெட்கப்படும் விடையமாகவும் எண்ணி விலக்கி வைத்து விட்டோம்.. அதே போல் இதற்கு மேற்படி சென்று மேன்மை தாங்கியவர்களும் இன்று அதை ஒரு நாகரீகமாக கருதி வாழைநாருக்கு பதிலாய் நெகிழி (plastic) நைலான் கயிறுகளில் காகிதப்
பூக்களையும் நெகிழிப்பூக்களையும் தொடுத்து தெளிவுகளையும் நற்சிந்தனைகைளையும் இழந்ததோடு நம் முன்னோர்களையும் அவர்கள் நமக்கென விட்டுச்சென்ற அரும் பெரும் நல் விடையங்களையும் கொச்சைப்
படுத்துவதோடு கொஞ்சம் கொஞ்சமாக இழந்தும் வருகின்றோம்.
காகத்துக்கு ஏன் சோறு வைப்பது என்ற கேள்வி பலரின் மனதில் விடை காண முடியாது பல சந்தேகங்களை உருவாக்குகின்றது. அதற்கு பலர் பலவிதமான அர்த்தங்கள் காரணங்கள் சொல்லிவருகின்றார்கள் அக்காரணங்களில் பெரும்பாலும் சொல்லப்பட்டு வருவது என்னவென்றால்
காகம் நம் முன்னோர்கள் ஆகையால் அவர்களை நாம் மறக்காமல் எப்போதும்அன்புடன் இருப்பதை
தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது, இங்கேதான் எனக்கு பெரும் சந்தேகமே எழுகின்றது, அப்படி என்றால் நம் முன்னோர்கள் எல்லாம் காகமாக மட்டும்தான்பிறந்திருக்கின்றார்களா ஏன் கிளி
கொக்கு ஆந்தை என்று ஏன் பிறந்திருக்கக்கூடாது இது எனக்கு எழுவது போல் பலருக்கு எழுந்திருக்கும்அப்படி பார்க்கும் போது இதில் முரன்பாடு இருக்கின்றது புரிகின்றது அல்லவா.... !!!இந்த குழப்பத்திற்கு விடை காண நான் யோசித்த போது என் மனதில் என் அறிவுக்கு எட்டிய கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த பழக்க வழக்கம் இன்று தோன்றியதில்லை
இது பழமையான ஒன்றை பின்பற்றி வருகின்றோம் இங்கேதான் நாம் ஒன்றை மிக கூர்ந்து கவனிக்க வேண்டும் அந்தக்காலத்தில் மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள் அந்த மன்னர்களுக்கு இடையில் பல சூது வாது
நயவஞ்சகங்கள் செய்து மன்னர்களை கொல்வது அவர்கள் வம்சத்தை அழிப்பது என்று பல விடையங்கள் நடந்ததாக பல வரலாற்று கதைகள் சொல்லுகின்றன . அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட
பெரும் ஆயுதம் துப்பாக்கியோ போர் வாளோ அல்ல விசம் (நஞ்சு) வைத்து கொல்லுவதையே பெரும் பாலும் கையாண்டார்கள் எனக்கூறப்படுகின்றது இப்படி உணவில் விசம் வைப்பது குடி பாணங்களில் கலப்பது என்று முடிந்த எல்லாவற்றிலும் இப்படி வஞ்சம் செய்து அழிப்பதையே பெரும் யுத்தியாக கடைப்பிடித்தார்கள் இதை எப்படி அறிவது எவ்வாறு கண்டு பிடிப்பது என்று அவர்கள் கண்டு அறிந்த ஒன்றுதான் இந்த காகத்துக்கு சோறு வைப்பது.
எந்த நச்சு தன்மையோ விசமோ இருந்தால் அந்த உணவை
காகம் ஒருபோதும் சாப்பிட மாட்டாது அதற்கு அதை கண்டறியும் ஆற்றல் மிக அதிகம் அதோடு மட்டுமின்றி இன்னும் பல காகத்தை வரவழைத்து பரிசோதிக்க வைத்து அப்புறம் தான் உண்ணும் தனியாக உண்ணாது
இதை நீங்களே கவனித்திருப்பீர்கள் தன்னுடைய கணிப்பு தவறினாலும் மற்ற காகங்களையும் அழைத்து சோதிக்க வைத்து உண்ணும். இதை நன்கு அறிந்த நம் முன்னோர் தம்மை பாதுகாத்துக்கொள்ள இந்த வழியை கையாண்டு வந்திருக்கலாம் ஆனால் இதை நம்மிடம் சொன்னால் கேட்கவா போகின்றோம் எந்தனை எகத்தாளம் நய்யாண்டி செய்வோம் ஆகையால் இப்படி பல விடையங்களை சமயம் கடவுள் ஆன்மீகம் பித்ருக்கள் என்று சொல்லி நமக்குள் விதைக்கப்பட்டுள்ளது காரணம் மனிதன் பயப்பிடும் ஒன்று கடவுள் இன்னொன்று பேய் அதனால் தான் இப்படி பலவிடையங்களை நான் கடவுள், சாமிக்குற்றம், பேய் , செய்வினை, சூனியம் இதை
தாண்டி யோசிப்பதற்கே பயப்பிடுகின்றோம். இது இவாறு தொடர்வதால் பலருக்கு பல கேள்விகள் எழுந்து நாம் செய்யும் பல நற்காறியங்கள் புறக்கணிக்கப்படுகின்றது அத்தோடு அழிந்தும் போகின்றது இதை நாம்
மனதில் கொண்டு நம் முண்ணோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பல நல்ல விடையங்களை காப்பாற்றப் பாடுபடுவோம்.
பூப்புனித நீராட்டு விழாவில்
தாய்மாமன் தேங்காய்
உடைப்பது ஏன் ??
பூப்புனித நீராட்டு விழா என்பது நம் வாழ்வியலில் கடைப்பிடிக்கும் சடங்குகளில் ஒன்றாகும், இச்சடங்குகளில் பல விடையங்களை உள் அடக்கியே இவற்றை நடாத்தி வருகின்றோம் அவற்றில் ஒன்றுதான் இந்தப் பூப்புனித நீடட்டு விழா, இது மிக பழமைகளில் ஒன்றாகும் இச்சடங்கில் பலவிடையங்கள் உள்ளடக்கி நடாத்தப்பட்டுவருகின்றது இதில் முக்கியமான ஒன்றுதான் தாய்மாமனை முன் நிறுத்தி அவருக்கு தலைப்பா கட்டி கையில் தேய்காய் கொடுத்து அதை அவரையே உடைக்க வைத்து அச்சடங்கை நடாத்துவார்கள் இது ஏன் எதற்காக தாய் மாமன் முன்நிறுத்தப் படுகின்றார் இதன் பொருள் தான் என்னவென்ற கேள்வி பலரின் மனதில் அலையாய் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது,
ஆம் இது எல்லோரும் அறிந்திருக்க வாய்பில்லை காரணம் நாம் தான் என்ன செய்தாலும் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாதே அப்படி கேட்டாலும் விளக்குவதும் இல்லையே பதிலுக்குகேட்பவரையே விதண்டாவாதம் பெரிய மனிதர்களை மதிப்பு மரியாதை இல்லாது கேள்வி வேறு என்று நம்மை அங்கேயே குட்டி மூலையில் உக்கார வைத்து விடுவார்கள். இப்படி எல்லா விடையங்களுக்கும் விளக்கம் சொல்லாது ஏன் செய்கின்றோம் எதற்கு செய்கின்றோம் என கூடத்தெரியாமல் பல சடங்குகளை நாம் இப்போதும் செய்துகொண்டிருக்கின்றோம்.
ஆகையால் ஏன் எதற்கு என்று நான் சிந்தித்த போது என் அறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றேன், முன்னைய காலத்தில் நம் வாழ்வியலில் ஒரு சம்பிரதாய முறையை கடைப்பிடித்து வந்தார்கள் (அது நல்லதா தீயதா என்ற விடையதுக்கு போகவேண்டாமே,) அதாவது திருமணம் செய்துகொள்ளும் முறை, மாமன் மாமி மகன் மகளை (மச்சான் மச்சாள்) மணம் முடிப்பது இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான், அதன் வழியாகத்தான் ஒரு பெண் திருமண வயதுக்கு வந்துவிட்டாள் என்ற நீராட்டு விழாவும் அதில் இவர்தான் தாய் மாமன் என்றும் அறியத்தரவே இந்த முன்னுரிமை வழங்கப்படுகின்றது
காரணம் இந்த தாய்மாமனுக்கு கல்யாண வயதில் மகன் இருக்கின்றாரா அவருக்கு இப்பெண்ணை மணம்முடிக்கபோறார்களா என்ற விபரத்தை அவரிடமே நாசுக்காய் அறிந்து கொள்வார்கள் அப்படி இல்லாத பட்சத்தில் தான் வேறு ஒருவருக்கு அப்பெண்ணை மணம் முடிக்க சம்மதம் கேட்டுப் போக முடியும் இதை இப்படியான சடங்குகளில் எவ்வளவு நாகரீகமாகவும் நாசுக்காகவும் சொல்லி வைத்தி.ருக்கின்றார்கள் நம் முன்னோர்கள் வாழ்க நம் முன்னோர் வளர்க நம் பண்பாடு



No comments:
Post a Comment