Saturday, 26 January 2013

என் கதவை தட்டிய சொர்க்கம் அவள்


சொர்க்கத்துக்கு அழைப்பிதழ் சொல்லாமல்
கொடுத்தது யார்
என் வீட்டு கதவுதனை வந்து கேட்காமல்
தட்டுது ஏன்
தேவதையை தேரில் வைத்து என்னிடத்தில்
அனுப்பியது யார்
சிந்துகின்ற அவள் உமிழ்நீர் நாவில் தேனாக
சுவைப்பது ஏன்
காமன் அவன் அம்பு தனை என் நெஞ்சினிலே
பாய்த்தது யார்
கவி படைக்க வந்த நானும் கதிகலங்கி
நிற்பது ஏன்
என் மதி மயங்க வைத்தவளே உன் விழி வழியே
பாயும் அம்பு
எனை மொழிமறக்க வைக்குதடி உன் சிற்றிடையின்
நடனம் கண்டு
நானோ சிட்டெறும்பாய் மாறி பனங்கட்டியாக எண்ணி
உனை உண்டு உறவாடுகின்றேன் .. !

அதுவுமில்லை இதுவுமில்லை எதுவுமில்லை


வாழுற வாழ்வுக்கும் பேசுற பேச்சுக்கும்
சம்மந்தம் இல்லை
கேட்கிற கேள்விக்கும் சொல்லுற பதிலுக்கும்
சம்மந்தம் இல்லை
பையிலே உள்ளது வற்றித்தான் போச்செண்ண
சொந்தமும் இல்லை !

உன்னதமும் நீயே என் பொற்பதமும் நீயே





உன்னதமே என் உள்ளம் கொள்ளை
கொண்டவளே
சின்னவளே என் சிந்தனைக்கு வித்தாக
வந்தவளே
விளையாட்டுத்தனத்தாலே விழியில் அருவி
படைத்தவளே
உன் அறியாமையால் என் நெஞ்சில் அம்பை
பாய்த்தவளே
சிறு ஊடல் கூட எனக்குள் எரிமலையாக
வெடிக்குதடி
என் ஆயுள் ரேகை நீயடி உன் ஆயுள் கைதி
நானடி
உத்தமமே பொற்பதமே சொர்ப்பனமே என்
சொந்தமே
என் கண்ணுக்குள் ஏந்தினால் நான் தூங்கும்
போது உனக்கு
மூச்சுமுட்டுமேயென அஞ்சி என் இதயத்துக்குள்
ஒழித்தேனடி....
நான் உன் தொட்டால்சிணுங்கி தானடி நீ தொடமுன்
சுருங்கிறாய் ஏனடி .....?

மாயம் போன நெஞ்சும் சாயம் போன சேலையும்



என்னுயிரே என் நிலையும்
உன் நிலையும் ஒன்றோடி 
உயிரும் உயிரும் ஒன்றாய்
சேர்ந்து உரசிக்கொள்ளுதா 

தொண்டைக்குழியில் ஒற்றை 
வார்த்தை சிக்கித்தவிக்குதா 
உதட்டின் மேலே ஊறும் எச்சி 
ஏனோ வறண்டு போகுதா

தொட்டுத் தழுவாத போதும் 
நெஞ்சில் மொட்டு மலருதா
கட்டியணைக்காமல் மேனி 
வேர்த்துக்கொட்டி உச்சி கூசுதா

கண்ணை மூடித்தூங்கும் போது 
எந்தன் வாசம் தட்டியெழுப்புதா
சொர்க்கவாசல் கதவைத் திறக்கும்
சாவி எங்கள் முத்தமானதா

மொத்த உணர்வைக் கேட்டு உந்தன்
பட்டுச்சேலை சாயம் போகுதா 
எனக்கானவளே உன்னவனின் 
உணர்வில் உண்மை உள்ளதா 

உண்மையென்றால் ஓடிவந்து 

ஒட்டிக்கொள்ளவா

கொஞ்சு மொழியும் பிஞ்சு விரலும்








மலரின் உள்ளே தேன் என் மனதின் உள்ளே நீ,
உன் பிஞ்சு விரல் கண்டு கெஞ்சுதடி என் நெஞ்சு
உன் குஞ்சு மொழி கேட்டு அஞ்சுதடி என் பேச்சு ,
தேவதைக்கு நீ பந்தம் தேவதையோ என் சொந்தம்,
தேனீக்கள் உனை தேடி தேன் குடிக்க பறக்குதடி
தேடுகின்ற இடம் விட்டு எங்கெங்கோ அலையுதடி,
தேவதையும் எனக்குள்ளே தேங்கித்தான் இருப்பதை
தெரியாத தேனீக்கள் தெருத் தெருவாய் சுற்றுதடி..!!!