விளையாட்டுப் பிள்ளை நானடி ,
என்னை
விளையாட வைப்பவள் நீயடி ,
உன்னை
அறியாமல் தொலைந்தவன் நானடி
என்னை
அறிந்தும் தொலைத்தவள் நீயடி
உன்னை
உறவென்று சொன்னவன் நானடி ,
என்னை
உறவாடிக் கொல்பவள் நீயடி ,
உன்னை
உயிரென்று சொன்னவன் நானடி
எந்தன்
உதிரத்தை குடிக்கிராய் ஏனடி ????
No comments:
Post a Comment