Thursday, 22 March 2012

முத்தத்திற்கு இல்லை முகவரி ***


பேரைக் கேட்டேன் நீயோ பேசாமல் இருந்தாய்
ஊரைக் .கேட்டேன் என்னை உற்றுப் பார்த்தாய்
வயதைக் கேட்டேன் உந்தன் வாயைச் சுழிந்தாய்
நட்பைக் கேட்டேன் நீயோ நகைத்துக் கொண்டாய்,
இன்றோ நான் .பேசாமல் .இருக்கிறேன் ஆனால்
நீயோ என்னுடன் .பேசத்துடிக்கிறாய் .உன்னை
நாடாமல் இருந்தேன் என்னை நாடித் தவிக்கிறாய்
உன் வாயைத் திறந்து என் வயதை கேட்கிறாய்
முன்னாடி .வந்து நீயோ .சல்லாபம் . பண்ணுறாய்
மூச்சுத் .திணறி என்னால் முடியாமல் .போனதால்
உன் முகவரி கேட்டேன் ஐயோ முத்தம் தருகிறாய்.......!!!

No comments:

Post a Comment