Tuesday, 25 December 2012

குழல் ஊதும் பூச்செடி !



வார்த்தையில் அடங்கா மெல்லினமே
என் வாழ்வினில் படர்ந்த பூவனமே
உணர்வினில் உறைந்த வல்லினமே
என் உறவினில் கலந்த உன்னதமே
சொத்தாகக் கிடைத்த பொக்கிஷமே

என் இதயத் துடிப்பின் ஒலி நீயே
எனை ஆட்டிவைக்கும் விதி நீயே
என் உடலில் வாழும் உயிர் நீயே
எனை காயப்படுத்தும் அம்பு நீயே
என் வலியை ஆற்றும் மருந்தும் நீயே
எனை சொர்ப்பனத்தில் வாட்டும் தீயே
என் சொர்க்க வாசல் கதவும் நீயே
என் சொந்தம் என்று வந்தாய் தாயே
எனை பிள்ளையாக்கி மகிழ்ந்தாய் நீயே
உன் பாசத்தை கண்டு மயக்குவதா
உன் பாதத்தை தொட்டு வணங்குவதா
என் சுவாசம் நீ உன் வசம் நான்
என்னவளே என் எல்லாமானவளே
உன் சுவடுகள் என் சுவாசத்தில்
சிறிதேனும் வாசம் குறைந்தால்
என் உயிரின் தடம் என் உடலில் இருந்து
இடம் மாறும் என் உயிரினைத் தேடும் ...!!!

மடியில் உறங்கும் மழலை நீயே !


அன்பே இப்போதுதான் புரிந்துகொண்டேன் நீ ஏன்
என்னை அடிக்கடி வாட்டி வதைக்கின்றாய் என்று
உன் அன்பில் மூழ்கி நான் இறந்துவிடுவேன்
என்பதினால் தானோ என் உயிரை காக்க இப்படி?
ஆமா உண்மைதானடி நீ கொடுக்கும் வலிகளை
கூட என்னால் தாங்கிட முடியும், ஆனால் உனது
அன்பில் மூழ்கி மூச்சு முட்டுதடி என் சுவாசமே
பூர்வஜென்மம் போன ஜென்மம் என்பார்களடி
அதை நான் இப்போது முழுமையாக நம்புகின்றேனடி
அன்று என் அன்னையின் மடியில் உறங்கியசுகத்தை
இன்று உன் அருகாமையில் உணர்ந்தேனடி...............!!!

உயிரை காக்கும் வலிகள் !


உன்னை நானும் தாங்கும் போது உலகே கையிலடி
உன் உணர்வை நானும் சுவைக்கும் போது உயிரில்
மின்னலடி, என்னை நீயும் ஏந்திக்கொண்டால் எதிலும்
இன்பமடி....... என் இரவை பகலாய் ஆக்கும் வித்தை
எங்கே கற்றாயடி... ?

Monday, 17 December 2012

உன் பாவடை பூவிலே தேன் குடிக்கும் வண்டு நான் !




பூப்போட்ட பாவாடை பூட்டாத மேலாடை
காத்தோடு தானாட ஏறுதே பெரும்போதை
உன் பாவாடையில் பூவாக மேலாடையில்
நூலாக ஏங்குதே என் ஆசை..........................
உன் காதிலே கம்மலடி கண்ணிலே மின்னலடி

முதுகிலே யன்னலடி காயுதே என் நெஞ்சமடி
உன் இடுப்பிலே உடுக்கையடி என் உள்ளத்திலே
உலக்கை இடி, ஐயோ போதுமினி உன் இம்சையடி.!

விடை சொல்லும் முத்தங்கள் !



அன்பே உனக்கு எப்படி புரிகின்றது
என் கண்கள் கேட்கும் கேள்விகள்
ஓ என் இதயம் உனக்குள் இருந்து
பேசுவதாலோ மொத்தத்தையும் நீ
முத்தத்தால் மொழிபெயர்க்கின்றாய்
உயிரே நீ என்னை நினைக்கும் போது

தானடி உலகையே மறக்கிறாய் நான்
உனை மறந்தால் தானடி நினைப்பதற்கு
அடி போடி என் பூச்செண்டே என் உலகே
நீதானடி என் பொன்வண்டே.................!!!

மகாகவியும் மானிடப்பிறவியும் !!!



நின் புகழ் பாட என் நிலை என்ன
விண்வெளி தோறும் உன் கவி பாட !!!

சாதியை எடுத்து சந்தனத்தில் குழைத்து
சொந்தத்தில் பூசி சந்தையில் விற்குதே
இன்று உன் புத்திகள் எல்லாம் புத்தகமாகி

குப்பையில் கிடக்குதே...
அச்சங்கள் இல்லை என தினம்தோறும்
சத்தங்கள் போட்டியே
ஐயோ அது இங்கே துஷ்டன்கள் வாயிலே
எச்சங்கள் ஆனதே
பட்டினி பார்த்ததும் நித்தமும் எத்தனை
சத்தியம் செய்தியே..
இப்போ பட்டினி மட்டுமே ஏழையின்
குடிசையில் நித்திரை கொள்ளுதே
சாமியின் தலையிலே ஊற்றிய பால் இங்கே
தரையினில் ஓடுதே
என் தம்பியும் தங்கையும் வாசலில் தான் நின்று
வயிற்றினை தடவுதே..........................................!!!

Tuesday, 11 December 2012

நான் சொல்வது உண்மை !



உண்மை ஒன்று சொல்லவா
உண்மை ஒன்று சொல்லவா
வாயை மூடி மனதைத்திறந்து
வார்த்தையின்றி மௌனமாக
உணர்வை இங்கே கொட்டவா
காதை நீயும் பொத்திக்கொண்டு
கண்ணை நன்கு விழித்துக்கொண்டு
என் கதையை கேட்க ஓடிவா...!
என் விழியில் வடியும் கண்ணீர்
துளியும் அந்த உண்மை சொல்லுதா,
இல்லை ஊமை பேசும் பாஷை போலே
எந்தன் மொழியும் உள்ளதா...............???

கட்டிப்போடு இல்லை வெட்டிப்போடு !



கொடுமையாய் இருந்தாலும் கொடையா நிக்கிறாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகிறாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கிறாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகிறாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கிறாளே

உன் பொல்லாத்தனத்தால் பொசுங்கிப்போறேனடி
என்னவளே என் உயிரே என் எல்லாமானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி இல்லை
உன் காலடியில் என்னை வெட்டிப் போடடி........... !!!

இப்படியும் மனிதர்கள் உலகத்திலே !





உலகம் அழியப்போகுதாம் ஊரெல்லாம் கெடிக்கலக்கம்
உனக்கு என் மீது ஏன் இந்த பகை முழக்கம, ஏண்டா
தம்பி உப்பிடி செய்துட்டாய்.? தாயாய் பிள்ளையாய்
தானேடா பழகினோம், உலகத்து கதையெல்லம்
ஓடிவந்து சொல்லுவியே
பொறுத்த கதையை பொறுப்பில்லாமல் விட்டுட்டியே
உந்த விசயத்தை உடனே ஏன் சொல்லவில்லை.......?
பனங்காய் பணியாரத்தையும் கொடுத்து திண்டேனடா
அறுந்து போவானே ஏன் பழசெல்லம் மறந்திட்டியோ
கிறகம் பிடிப்பானே கேட்டால் தான் சொல்லுவியோ
தெரிந்திருந்தால் முதலே நான் உசாரா இருந்திருப்பேன்
பக்கத்து வீட்டுப் பரிமளம் பத்தாயிரம் தரவேண்டும்
வாங்கும் போதே சொன்னாளே அந்த பாழாப்போனவள்
பணம் உனக்கு தேவையென்றால் ஒருமாதத் தவணை
எனக்கு வேண்டுமென்று,
ஐயோ ஐயோ உலகம் அழிய அவ்வளவு நாள் இல்லை
அழிஞ்ச பிறகு நான் யாரைத்தான் பிடிப்பனடா ............?
அட இராசம்மா மாமிண்ட ஆதங்கம் கேட்டு நானும்
கொஞ்சம் கதிகலங்கிப் போனேனே ........................... !!!

அன்பு புரியாத அசடு !



நீ கேட்ட ஒரு கேள்வி எந்தன்
உயிரைக் குடித்ததடா
இதயத்துடிப்பினிலே இடியாய்
விழுந்ததடா
கனவிலும் நினைக்காத காரியம்

நடக்கையிலே
வெறும் சிலையோ நீயென்று மனசு
கேட்குதடா
உரிமையாய் ஓடி வந்து அன்பால்
அதட்டினேனே
அதுகூடப் புரியாமல் அடிமனதில்
குத்திவிட்டாய்
உயிரை பிடித்து வைத்து உனக்காக
காத்திருந்தேன்
உன் அன்பு அவ்வுணர்வை மதிக்காமல்
போனாலும்
என் அன்பை நீதான் காலில் போட்டு
மிதித்துவிட்டாய் போடா......................!!!

தமிழ் மொழி என் தாய் பொழி !



அதையும் இதையும் எழுதிவிட்டு
கவிதை என்று நான் போட்டேன்
கண்டபடி கருத்துக்கூறி என்னை
கவிஞன் என வாழ்த்துப்பாடி
ஊக்குவிக்கும் உள்ளங்களின்
கருணைதனை நான் கண்டு
மெய்சிலிர்த்து போகின்றேன்
தாய்பொழியாம் தமிழை எடுத்து
தாறுமாறாய் கொலைசெய்தேன்
மொழி காக்கும் தனையனென
வழிமொழியும் போதினிலே என்
விழிகலங்கி நிற்கின்றேன் பெரும்
பழிசுமந்த உணர்வோடு..............!!!

பஞ்சும் நெஞ்சும் கொஞ்சும் நேரம் !



உயிரே நீ உன் இதயத்தை கொடுத்து
பத்திரம் என்றாய் ஆனால் இவ்வளவு
பாரம் என்று சொல்லவில்லையே
அன்பே நீதான் பஞ்சுமிட்டாயாச்சே
அப்போ ஏன் உன் இதயம் மட்டும்

இப்படி கனக்கின்றது ..... ?????
ஓ........... உன் இதயத்துக்குள் நான்
இருப்பதாலோ ....???

எதை தேடி அலைக்கின்றாய் ......???



அம்மா நான் வெளிநாட்டுக்குப் போறன்
கைநிறைய உழைச்சுக்கொண்டுவாறென்,
மாமிட்டை சொல்லிவை என் மச்சாள்
கவனம் எண்டு நான் வந்து கட்டுறன்
அதுக்கும் இதுக்கும் ஆசைப்பட்டாய் இப்போ

மதுக்கடைக்கு வாழ்க்கைப்பட்டாய்
உதுக்குத்தானோ கோடுபோட்டு உன் உறவைக்
கூட விட்டுவந்தாய்
எதுக்கு எதுக்கு என்று கேட்க அதுக்கு அதுக்கு
என்று சொல்லி
ஐயஹோ.......இதுக்குத்தானோ பாடுபட்டாய்......?

லூசும் லூசும் லூசாகுது !


அன்பே நீ என்னை லூசு என்று சொல்லும் போது நான் நம்பவில்லை..
ஆனால் இப்போ அதை என்னால் நம்பாமலும் இருக்க
முடியல்லை..
இல்லை என்றால் நீ என் தேவதை என்று சொல்லி
தினம் தினம்..
உன் புகைப்படத்தை பசும்பாலில் குளிப்பாட்டுவேனா...???

அவள் நனைகின்றாள் நான் கரைகின்றேன் !



மழையில் நனைகின்றாள் என் மைனாக் குஞ்சு
அதை கண்டதும் தொங்குதே என் மனது பிஞ்சு
பக்கதில் சென்று தொட்டேன் அவள் மேனி பஞ்சு
தொட்டதால் என் எண்ணத்தில் ஊறுதே நஞ்சு
ஐயோ என் மனசு சொல்லுதே அவளை கொஞ்சு

இல்லை என்றாள் கெஞ்சு மறுத்தால் நீ மிஞ்சு...
பட்டாடை உன் மேனியை ஒட்டி உரசயில் நான்
பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவன் போல் ஆனேனடி
மழையில் நனைவது நீயடி என் மனதில் ஏன் தீயடி.?

Monday, 10 December 2012

மாற்றங்களும் தருணங்களும் மாலையானது !



மனிதனின் வாழ்வினில் மாற்றங்கள்
மறுக்கமுடியா மந்திரம் என்பது
தடுக்கமுடியா தருணங்கள் ஆகுதே
மனதினால் மண்டியிட்டாலும் அதன்
சண்டித்தனமோ குறைவதும் இல்லை,

பக்தனும் இங்கே பித்தனாவான்
பித்தனும் இங்கே சித்தனாவான்
உற்றானும் இங்கே மாற்றானாவான்
வேற்றானும் இங்கே பற்றானாவான்
கரும்பான குறும்பு செய்பவனும் இங்கே
எறும்புபோல் கூனிக் குறுகுவான்
விருந்தாக கிடைத்த அன்பும் இங்கே
மருந்தாக மாறும் போது இரும்பான
உள்ளம் கூட வருந்தாமல் போவதுண்டோ
ஏன் இந்த நிலையென்று யாரிடமோ
நான் கேட்டால். உன் சொந்த நிலை
இதுவோ என்று கைகொட்டி சிரிக்கின்றார்
ஐயோ என் கண்கள் கலங்கி நிற்கின்றேன்
எனை காப்பாற்ற யாரும் உண்டோ.......???

அன்பில் பூத்த அழகு மலர் !



குத்துவிளக்கே என் குலமகளே உன்
நாமம் தினம் நான் உரைப்பதினால்
என் நாவூறும் உமிழ்நீரும் பேரின்பம்
கொள்ளுதடி கர்வமாய் முறைக்குதடி...
பட்டுமேனி கட்டழகி சிட்டு உன்னை
கண்ட கண்கள் கட்டத்த காளைபோல்
கட்டளையை மீறுதடி..
கருமுரல் கூந்தலழகே கருவப்பழ உதட்டழகே
கொத்தித்தின்னும் விழியழகே கொக்கரிக்கும்
கழுத்தழகே
குத்தரிசி சிரிப்பழகே குயில்கீதப் பேச்சழகே
திகட்டாத இடையழகே கோலம் போடும்
நடையழகே
நாகதாளி பாதழகே நாவூறும் அவளழகே
அழகே அழகே இது அழகே, அழகான
அழகே இவள் அழகே, என் முட்டைகண்ணியே
கொட்டைப்பாக்கே,.......... மன்மதனும் பசியாற
மாங்கனிகள் தாங்கிநிற்கும் தேவதையே
இதையெல்லாம் தாண்டியதே உன் அன்பழகே
இதுதான்டி என் உயிரில் கலந்த பேர் அழகே... !!!

Monday, 12 November 2012

உயிரும் நீயே என் உணர்வும் நீயே !



என் எல்லாமனவளே நீயே ....
பருவமழைபோல் வந்தாய் என்
பாதி உயிரை தின்றாய்
உருவம் இல்லா ஓவியமாய் என்
உயிரினில் நுழைந்தாய், பின்

உருவமெனும் ஒளிகொடுத்து என்
உணர்வில் ஏறி அமர்ந்தாய்
நீயே எந்தன் உறவு என்று என்
கனவில் வந்து வதைத்தாய்
இறுதிவரை நீதான் என்று என்
உதிரத்திலே கலந்தாய்
இதயம் முழுதும் அன்பிருந்தும்
இடைக்கிடை வெடித்தாய் இன்று
உனக்கு தலை வலித்தால் நான்
தையிலம் போடுகிறேன்
உனக்கு காச்சல் வந்தால் என்
இதயம் நொருங்குதடி
என் உயிரும் ஊஞ்சலாடுதடி
உன்னை சுமப்பதினால் அதுவும்
போக மறுக்குதடி என் வாழ்வும்
இன்று கசக்குதடி.............

தன்மானத்தை விற்று தாளம் போடாதே !

தோல்வியுற்றவன் எல்லாம் கோழையும் இல்லை
வெற்றிபெற்றவன் எல்லாம் வீரனும் இல்லை
சந்தர்ப்பம் கொஞ்சம் சதி செய்து விட்டால்
எலிப் பொறியிலும் புலிகூட மாட்டிக் கொள்ளும்
பந்தையக் குதிரை முந்தையில் வந்தால்
தெய்வகம் கூட என்றுமே நம் வசம் என்பார்
விந்தைகள் புரிந்து வீழ்வோரைக் கண்டால்
கந்தைக்கும் வழியில்லா கயவர்கள் என்பார்
தாளம்போட்டு தடவிக்கொடுத்தால் உயிரைக்
காக்கும் தோழன் என்பார், வேஷம் கண்டு நீ
மறுப்பு சொன்னால் நாயைவிட மோசம் என்பார்
பையில் கொஞ்சம் பணம் இருந்தால் பதவி
என்னும் ஆடை வாங்கி பசுவைப்போலே அணிந்து
கொண்டு பாசம் காட்டும் மனிதனாக தினம்தோறும்
பல மோசங்கள் செய்திடுவார்......
கூறுகெட்ட மானிடனின் கேடுகெட்ட செயல்களினால்
பாடுபடும் மனதினுள் மாறுபட்ட எண்ணங்களில்
தூசு ஒட்டிக்கொண்டதடா...
ஏரு கொண்டு உழுது நீயும் வீறுகொண்ட உள்ளங்களில்
நல்ல விதையை விதைக்கா விடில்..
உணவு கூட விஷமாய் போகும் சர்வமும் நாசமாகும்
விழிக்க நீயோ மறுத்திடாதே விழியை மூடித்தூங்கிடாதே.!!
!

பூர்வ ஜென்ம பந்தம் !



புல்லாங்குழலே என் பூர்வஜென்ம
பந்தமே, உன் புன்னகை கண்டு
எத்தனை நாட்களடி, உன்
பூச்சொரியும் வார்த்தை கேட்டு
எத்தனை காலமடி...?

நீ இல்லாத பொழுது எனக்கு
இருளாகிப்போனதடி என்
இதயத்துடிப்பில் இடைவெளி
கூடுதடி...........
நான் இருந்தும் மெல்லத்தினம்
இறந்துதான் போறேனடி
என் உயிரின் ஒளியே நீ என்னதான்
செய்வாயோ எனக்குத் தெரியாது
உன்னுயிர் இங்கே உருக்குலைந்து
போகமுன்னே என் உயிரோடு கலந்து
உறவாட வருவாயோ.................?????

அம்பான அன்பு !


அம்பால் குத்தினால் வலிக்கும்
அன்பால் குத்தினால் இனிக்கும்
என் அன்பே நீ அன்பை அம்பில்
வைத்து குத்துகிறாயேடி.

உனக்கும் தெரியும் இது எனக்கும் தெரியும் !


எனக்கு தெரிந்த அன்பைத்தான்
காதல் கீதல் எண்ணுறாங்க
எனக்கு தெரிந்த காதலைத்தான்
காமம் கீமம் எண்ணுறாங்க
உனக்கும் தெரிஞ்சு போச்சிண்ணா
தயங்கித் தள்ளி நிற்காதே............!!!

பணம் தேடும் இயந்திரங்கள் !



நாம் இயந்திராமாய் வாழுகின்றோமே
தினம் மின்சாரமாய் பாய்கின்றோமே
காலையில் எழுந்தவுடன் கடிகாரத்தை
முறைக்கிறோமே, கெட்டும் பட்டணம்
போவென்று சொன்னவனும் இங்கே

கெட்டுப்போன கதைகள் தான் பல உண்டு
கொட்டும் பனியில் ஒட்டடை தட்டுறோமே
கொளுத்தும் வெயிலில் கோபுரம் ஏறுறோமே
பாலைவனத்திலே ஒட்டகம் மேய்க்கின்றோமே
நாள்தோறும் உழைக்கிறோமே, வேளை
வரும் என நி்னைக்கிறோமே இது என்னடா
வாழ்க்கை என்று ஏங்கித்தவிக்கிறோமே
திரிபோஷமாவையும் ஒடியல்பிட்டையும்
அன்று அன்போடு அம்மா ஆக்கிப்போட்டாலும்
ஆவேசத்துடன் அடி மனதில் திட்டி தீர்த்தோமே
ஆசையோடு அப்பா ஆறுதல் சொன்னாலும்
அவரைப் பார்த்தும் ஆத்திரம் கொண்டோமே
கட்டுங்கடங்கா காளையாய் திரிந்தோமே
ஏன் என்று கேட்பவனை எட்டி உதைத்தோமே
வெட்டிவிடு உறவையென வீராப்பாய் சொன்னோமே
இப்போ தீக்கிரையான தீனியைத்தான் தின்கிறோமே
விட்டுப்போன உறவை தொட்டிட துடிக்கிறோமே, அடே என்பவனை அண்ணா என்றோமே, தறுதலை என்று நினைப்பவளையும் நாங்கள் தங்கையென அழைக்கிறோமே,.... இது என்ன கொடுமையடா
இதை எங்கே சொல்வேனடா...??? எதையெல்லாம் இழந்தாலும் ஏங்கித்தவித்தாலும் இங்கேயும் ஒரு நல்லது நடப்பதை நான் கண்டு மகிழ்கின்றேன்
தீண்டத்தகாதவன் என தள்ளி வைத்து உணர்வுக்கு
கொள்ளி வைக்காமல் பள்ளி பிள்ளைகள் போல்
கிள்ளி விளையாடுகிறோம் கூடி உறவாடிகிறோம்... !

அம்மா உலகின் சாமி !



அம்மா எழுத முடியாக் கவிதை
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ

எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !

Tuesday, 6 November 2012

நனைந்தது அவள் வலி எனக்கு .!





மழையில் நனைந்தாய என் மைனாக்குஞ்சே
காச்சல் பிடித்ததோ என் இலவம் பஞ்சே
மருந்து குடித்தாயா என் மாதுளம் பிஞ்சே
தலை வலி குறைந்ததா என் அணில்குஞ்சே
உன்னை மடியிம் வைத்து தாலாட்டுப்பாடி
தைலம் தடவி விடத் துடிக்குதே என் நெஞ்சே...!

Monday, 15 October 2012

அன்பால் கொல்லும் சண்டாளி.. !



ஐயோ கொல்லுறாளே கொல்லுறாளே
என்னை அன்பாலே கொல்லுறாளே
ஐயோ வாட்டுறாளே வாட்டுறாளே
என்னை வார்த்தையாலே வாட்டுறாளே
பூட்டுறாளே பூட்டுறாளே என்னை
இமைக்குள் வைத்து பூட்டுறாளே
காட்டுறாளே காட்டுறாளே என்னை
தன் இதயத்துக்குள் காட்டுறாளே
மயக்குறாளே மயக்குறாளே நீதான்
என் மன்மதன் என்று மயக்குறாளே
துடிக்கிறேனே துடிக்கிறேனே நான்
அவள் அன்போடு போட்டி போட்டு
தோர்த்து விட்டுத் துடிக்கிறேனே
ரசிக்கிறாளே ரசிக்கிறாளே சண்டாளி
என் தோல்விகண்டு ரசிக்கிறாளே
சிரிக்கிறாளே சிரிக்கிறாளே ஐயோ
சிறு பிள்ளைபோல் சிரிக்கிறாளே
என்னை கொன்றவளே கொள்ளை
கொண்டவளே என்னவளே நீதாண்டி
என்னுயிரே என் எல்லாமானவளே...!!!

Friday, 5 October 2012

என் எல்லாமானவளே... !


பிரக்கடிக்கும் பிள்ளைக்கு முதுகில் தட்டி
ஆறுதல் சொல்லும் தாயை போல் என்
தடுமாற்றங்களை எல்லாம் தட்டி விட்டு
என்னை தாங்கிப்பிடிக்கும் தந்தையாய்
சோகத்தை துரத்தும் தோழியாய் தாக்கத்தை
போக்கும் ஏணியாய் பாசத்தை பாலாக ஊட்டி
விவேகத்தை சீராகக் காட்டி என்னை வழி
நடத்தும் குருவாய் வந்தவளே என் வாழ்வே
உன் காலடியே என் உலகம் என்றும் எனை
காத்திடும் அன்னை என நான் காலமெல்லாம்
கவிபாட உந்தன் கருணை எனக்கு வேண்டுமடி...!!!




Monday, 24 September 2012

அன்பே என் அன்பே..!


♥ ♥ ♥ உன் அறிவால் என்னை அடக்கவில்லை
ஏன் அரிவாள் கொண்டும் மிரட்டவில்லை ஆனால்
உன் அன்பால் என்னை அசத்துறீயேடி என் அன்பே . ♥ ♥ ♥

ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்...!


குமரி போலே குழந்தை ஒன்று
கண்டபடி பேசுதடி கொஞ்சம்
ஏதும் சொல்ல முன்னே
கண் கலங்கி நிற்குதடி, உடும்பு
பிடித்துவிட்டு உலகமே தெரியும்
என்று ஊரெல்லாம் சொல்லுதடி
தவழத்துவங்க முன்னே தாவிக்
குதிக்குதடி, தடுக்கி விழுந்தாலும்
முடுக்கி விட்டதுபோல் கடுக்காய்
நண்டாட்டம் துடுக்கா நிற்குதடி
ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்
கோபம் வந்து திட்டவும் முடியல்ல
மூஞ்சிலே குத்தவும் முடியல்ல
சத்தமா கத்தவும் முடியல்ல
பித்தனாகி சுத்தவும் முடியல்ல
எது எப்படியோ அது அப்படியோ
இது இப்படியோ, .... நான் என்னடி
உன் பல் விளக்கும் பற்பொடியோ .???


இதயத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி..!


விண்ணோடும் முகிலோடும் நான்
விளையாடி மகிழவில்லை நான்
வானவில்லில் நிறமெடுத்து வண்ணம்
தீட்டி மகிழவில்லை என்னவளே உன்
இதழ்களிலே கருவெடுத்து அதில்

கற்பனையை குழைத்தெடுத்து தினம்
கவிபாடி மகிழ்ந்து வந்தேன் உன்
சொல்லெடுத்து சேர்த்து வைத்து
தோரணமாய் கட்டிவைத்து என்
நினைவுகளில் தொங்க விட்டு அதை
தொட்டு ரசிக்கையிலே என் நெஞ்சில்
பலகோடி பட்டாம்பூச்சி பறக்குதடி
நீ போகும் வழியெல்லாம் விழிமூடித்
தூங்காமல் வழிகாட்டியாக என்றும்
உன் நிழல் போல் தொடர்ந்திருப்பேன்.... !!!


செடியில் பூக்காத மலர் !***


பூத்துக்குலுங்கும் பூவை ஆனால்
அவள் பூஞ்செடி இல்லை
பேச்சில் மயக்கும் போதை ஆனால்
அவள் பேரழகியில்லை.... ஐயோ
அப்போ நீ யாரடி....? ஹா ஹா ஹா
நீதான் என் பூங்கொடி ..!

கவிதை அவளே என் கவிதை அவளே ! ***



கவிதை எழுதுகின்றேன் நான் கவிதை எழுதுகின்றேன்
காலம் தோறும் நான் பல கவிதை எழுதுகின்றேன்
அவளை எழுதுகின்றேன் என் அவளை எழுதுகின்றேன்
என் கவிதை அவள் என்று நான் கவிதை எழுதுகின்றேன்
என் உயிரே அவள் என்று என் உயிரில் எழுதுகின்றேன்

என் உறவே அவள் என்று என் உணர்வில் எழுதுகின்றேன்
என் உறவில் கலப்பாளா என் உயிரை எடுப்பாளா என்று
அவளை கேட்டு நான் அதையும் எழுதுகின்றேன்..
உயிரே நீயின்றி என் உலகம் ஊமையடி உன் உறவே
இல்லை என்றால் என் உயிரும் தொல்லையடி
இதையும் எழுதுகின்றேன் என் இதயம் எழுதுகின்றேன்...!!!

துன்பத்தை நீக்க வந்த இன்பம் !***


வெப்பம் போல் அப்பப்போ துன்பங்கள் தான் வந்து
என் இன்பத்தை கப்பம் கேட்டு நான் கையொப்பம்
இடமுன்னே, என் கைபிடித்து கரைசேர்க்கும் தெப்பம் நீயே
உன் தாய் போன்ற அன்பெனும் பாய்மரக்கப்பலில்
பயணம் செய்யத் துடிக்கும் குழந்தைதான் நானே......!!!

அன்பால் மறைந்த கண்ணீர் ***



என்னவளே என் எல்லாமானவளே
உன் பொல்லாதனத்தால் நான்
புழுவாய் துடித்தாலும் நீயே என்
இல்லாள் என நினைத்தால் என்
இதயம் குளிருதடி, சொல்லால் எனை

வாட்டி சோகத்தில் தள்ளினாலும் உன்
அன்பால் எனை வாரி மெல்ல அள்ளி
அணைக்கையிலே சொல்லெனா துயரம்
கூட பஞ்சாய்ப் பறக்குதடி புண்ணான
இதயமோ பூமேடை ஆகுதடி முத்தாரமே
முழுமதியே என் முல்லைச் செடியே உன்
கள்ளச்சிரிப்பே போதுமடி நான் காவியங்கள்
படைப்பதற்கு, உன் ஓரப்பார்வை போதுமடி
நான் ஓவியனாய் ஆவதற்கு இவை எல்லாம்
இருந்தாலும் உன் அன்பு ஒன்றே போதுமடி
என் கண்ணீரை நான் நிறுத்த .................. !!!!!!!

முரசு கொட்டும் கொள்கை ! ***


எண்ணத்திரையில் வண்ணம் பூசி கொள்கைமாறா நிலைத்து நில்
அப்போ வெள்ளம் ஒன்று உன் வாழ்வில் வந்தால் பள்ளம் இல்லா
உள்ளம் என்று முரசு கொட்டி முழங்கிக்கொள், அதை வெல்லம்
போலே வாயில் போட்டு சுவைத்து நீயும் மென்றுகொள்
வாழ்வில் எல்லாம் வசந்தம் என்று வானம் கேட்க உரக்கச்சொல்...!!!

Monday, 3 September 2012

என் சூத்திரமும் நீயே என் பாத்திரமும் நீயே ! ***



நான் சூத்திரம் தெரிந்தவன்
நீ ஆத்திரம் புரிந்தவள்
என் சூத்திரம் அறிந்ததால்
நீ என் பாத்திரம் ஆனவள்
உன் ஆத்திரம் புரிந்ததால்

நான் உன் தோத்திரமாகின்றேன்
நீ சாத்திரம் பார்த்து தள்ளினிற்காமல்
எனைமாத்திரம் நம்பி வந்தவள் நீயடி..!!!

அதிர்ச்சியா ஆனந்தமா ? ***



அன்பே நான் உனக்கு அதிர்ச்சியான விடையம் சொல்வேன்
அதை நீயோ ஆனந்தாமாகவே எடுத்துக் கொள்ளணும்
சேர்த்துவைத்த கனவெல்லாம் மிச்சமின்றி தீர்த்திடணும்
மெத்தயிலே நாம் இருந்தும் நித்திரையை மறந்திடணும்
பொத்தி வைத்த ஆசைகளை சொச்சமின்றிப் பேசிடணும்

உத்தரவு இல்லாமல் நான் பல யுத்தங்கள் புரிந்திடணும்
சத்தங்கள் ஏதுமின்றி நீயோ மொத்தததையும் தாங்கிடணும்
வண்டாக நான் மாறிக் கொண்டாடித் தேன் குடிக்க நீயோ
திண்டாட்டம் போடாமல் என் பொண்டாட்டியாகிடணும்
பூமியிலே இருந்தும் நாம் சொர்க்கத்தை தொட்டிடணும்
இத்தனையும் கூறுவதால் சிறிதேனும் அதி்ர்ச்சி உண்டோ
வெக்கத்தை நீ விட்டு பக்கத்தில் தான்வந்து கூறடி என்னவளே,. ?

நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை ! ***


விழியிலே நீர் தாங்கி உதடுகள் தடுமாறி

இதயத்தில் வலி சுமந்து துடிப்பது ஏனோ ?
நினைப்பது எல்லாம் நலமுடன் நடந்தால்
பிழைப்புக் கூட இங்கே பிழையாய்ப் போகும்
நடப்பது எல்லாம் நலமெனக் கொண்டு நீயோ

கிடைப்பதை வைத்து உடைத்திடு தடையை
சிரிப்பது கூட சிலரது வாழ்வில் வெளிப்படையாக
உதிர்ப்பது கடினம், இங்கோ குலைக்கின்ற நாயோ
கடிக்காதென்றும் அறுக்கிற வாளோ குலைக்காதென்றும்
பழமொழிகள் மட்டும் குறையவும் இல்லை, உன்
அறிவென்னும் வாள் எடுத்து அறியாமையை நீ வெட்டு
புரியாத புதிர் எல்லாம் புழுதியாய்ப் பறந்திடட்டும்....... !!!

அறியாமையின் பலவீனம் ! ***



இது பரிதாபமா இல்லை
பழிவாங்கும் படலமா..
இது அறியாமையா எங்கள்
அறிவின்மையா.
அடக்குபவன் யாரும் இல்லை
அடங்குவதே எங்கள் குணம்..
பணம் கண்டால் அடங்குவோம்,
பதவி தந்தால் மயங்குவோம்,
சொத்துக்கு ஏங்குவோம் பின்பு
சோகத்தில் நீந்துவோம்,,
வாய் கிழியக் கத்துவதில்
வரலாறு படைப்பவர் நாம்
கைகோர்த்து வலுசேர்த்து வாழ
மறந்தவர் நாம் மறுப்பவர் நாம் ...

Saturday, 25 August 2012

நானே அவளை தூண்டிவிட்டேன் ! ***



சும்மா இருந்தவளை நான் தூண்டி விட்டுபுட்டென்
தூண்டிலில் மீனாக நானே மாட்டிக்கிட்டென்
என்ன என்னன்னு கேட்டு நின்றவளை, அன்றே
சும்மா சும்மான்னு சொல்லி முடிக்காமல்
கண்ணே கண்ணே உன் காதை கொடுவென்று
கன்னா பின்னான்னு கதைகள் தான் சொல்லி்
இன்று சின்னா பின்னான்னு ஆட்டிபடைக்கின்றாள்
ஐயோ ஐயோன்னு நான் அலறித் துடித்தாலும்
பொய்யே பொய்யேன்னு கள்ளி நகைக்கின்றாள்

கண்ணா கண்ணா நீதான் என் மன்னா மன்னா
என்று அன்பை மொத்தமாய் கிள்ளி முத்தமாய்
தெளிக்கின்றாள், என் பிள்ளை நீ என்று மெல்ல
அள்ளி அனைக்கின்றாள் துள்ளி மகிழ்கின்றாள்...!!!

அன்பில் அடிமையாகும் மனசு ..!***


உன் புன்னகை ஒன்றே போதுமடி
நான் புதிதாகப் பிறப்பதற்கு
உன் பார்வை ஒன்றே போதுமடி
நான் பல கவிகள் படைப்பதற்கு
உன் வாய்மொழி ஒன்றே போதுமடி
நான் காதல் கடலில் குளிப்பதற்கு
உன் அன்பு ஒன்றே போதுமடி
நான் அடிமை என்று சொல்வதற்கு
உன் நினைவு ஒன்றே போதுமடி
நான் ஆயுள்வரை வாழ்வதற்கு.. !!!

வணங்க வைக்கும் வஞ்சிக்கொடி ..!***



உன் அஞ்சனவிழிகளில் கதைபல பேசிடும்
கயல்மீன்கூட்டம்
உன் மாதுளைச்சிரிப்பினை பார்த்ததும்
மயங்கிடும் மான்கூட்டம்
உன் தாமரை இதழ்களை தந்தவர் யாரென
தயங்கியே நின்றிடும் மயில்க்கூட்டம்
உன் கைவிரல் தீண்டவே இசை பல வீசவே
கலங்கியே நின்றிடும் யாழ்கூட்டம்
உன் கார்குழல் கூந்தலில் கவிதைகள் ஆயிரம்

விடித்திட துடித்திடும் கவிக்கூட்டம்
உன் காதடி ஓரத்தில் மின்னிடும் வேர்வைகள்
கண்களை மயக்கிடும் பனித்தோட்டம்
உன் பாதங்கள் தொட்டதும் பார்வைகள் பட்டதும்
பைந்தமிழ் பேசிடும் புல்க்கூட்டம்
உன் நாவினில் ஊறிடும் தேந்துளி உண்ணவே
திக்கென அலையுது தேனீக்கூட்டம்
உன் பொன்னிற மேனியை புடவைக்குள் பார்த்ததும்
புன்னகை சிந்திடும் நூல்க்கூட்டம்
உன் அன்பினை உணர்ந்ததும் பண்பினை அறிந்ததும்
கையெடுத்துக் கும்பிடும் ஆண்வர்க்கம் .........!!!

Saturday, 11 August 2012

வேஷம் இல்லாப் பாசம்..! ***


அன்பே உன் அழகை கண்டு நான் மயங்கவில்லை
உன் அன்பை உண்டு நான் மயங்கிவிட்டேன்
உயிரே உன் பார்வையில் நான் மயங்கவில்லை
உன் பாசத்தில் நான் மயங்கிவிட்டேன்.. !!!

கவிஞர்களின் தயவு நாடி தவிக்கின்றேன் ..!***



கவியரசர் கண்ணதாசனின் கல்லறையில்
நின்று நான் கண்ணீர் வடிக்கின்றேன்
எனக்கு கருணை காட்டு என்று,
வாலிபக்கவி்ஞர் வாலியிடம் சென்று நான்
வாழ்த்தச்சொல்லி கெஞ்சுகின்றேன் எனக்கு
கவிவடிக்க வார்த்தைகள் வேண்டுமென்று
புலமைப்பித்தனிடம் புலம்பி தவிக்கின்றேன்
என் கவிதைக்கு புதுக்கரு கொடுவென்று
வைரமுத்துவின் வாசலில் தவம் புரிகின்றேன்
என் சொத்தானவளுக்கு ஒரு முத்தான கவிதொடுக்க
வரம் கொடு கவியரசே கவிப்பேரரசே என்று
என்னவளே நீ தினம் தினம் புதிதாகப் பிறக்கிறாயே
நான் உன்னை கவிபாட என்னுள் வார்த்தை இல்லையடி..!!!

பனங்கட்டியும் பஞ்சுமிட்டாயும் ..! ***



மழைபொழிந்தாலும் வெய்யிலடித்தாலும் நான் செல்லும் இடமெல்லாம் குடையெல்லவா கொண்டுசெல்லுகின்றேன்,
அன்பே நீ மழையில் நனைத்துவிடுவாய் என்பதற்காக
இல்லை உயிரே நீ கரைந்துவிடுவாய் என்பதற்காக,
அப்புறம் ஏனடா மடையா வெய்யிலுக்கும் குடையெடுத்துச்
செல்கிறாய் என்று நீ கேட்கலாம், என் இனிய முழு லூசே
வெய்யிலில் நீ உருகிவிடுவாய் என்பதற்காக, காரணம்
நீதான் பனங்கட்டிக்குட்டானுக்குள் அடைத்து வைத்த
பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறீயே என் செல்லமே.........!!!

Thursday, 2 August 2012

சிடுசிடுக்கும் சிறுக்கியவள் ..!***


குறுகுறுத்த பேச்சினாலே
குதுகலிக்க வைத்தவளே
அறிவாக இருந்தும் அவள்
அறியாமை படமெடுக்க
வெடுவெடுத்த கோபம்கொண்டு

படபடத்து வெடிப்பவளே
திடுதிடென்று முடிவெடுத்து
கடகடென்று முடித்துவிட்டு
சடசடறென்று கண்கலங்கி
கொளகொளென்று அழுதுகொண்டு
குடுகுடென்று ஓடி வந்து
மளமளென்று கதைகள் சொல்லி
திருதிரென்று முழிப்பவளே, நான்
உன்மேல் சிடுசிடுத்துக்கொண்டாலும்
புறுபுறுத்து நடந்தாலும் உன் பளபளத்த
அன்பு என்னை தொளதொளக்க
வைத்துவிட்டு விறுவிறென்று தேடிவந்து
உனை தொட்டணைக்க சொல்லுதே
எனை கட்டியழச் செய்யுதே............. !!!

மெய்ஞானமும் விஞ்ஞானமும் ***



புற்றுக்குப் பாலூற்றி புனிதமெனச் சொன்னாலும்
செடிக்கு நீரூற்றி கருணையென நினைத்தாலும்
பூமியிலே விஞ்ஞானம் புதுமை பல செய்தாலும்
ஊற்றெடுத்து ஓடுக்கின்ற சிந்தனைகள் உதிர்த்தாலும்
சாத்தானை விரட்டிடும் சாமியார்கள் இருந்தாலும்

நேர்த்தியாய் கதைபேசும் தலைவர்கள் வந்தாலும்
கோட்டையில் கொடியேற்றி கோஷங்கள் போட்டாலும்
மேடைகள் பல போட்டு தத்துவங்கள் பொழிந்தாலும்
யார் வந்து போனாலும் வறுமைக்கும் பஞ்சமில்லை
அழுகின்ற பிள்ளைக்கு அரைவயிற்றுக் கஞ்சியில்லை...!!!