நிலவில் ஒளியெடுத்து
நினைவில் ஒட்டி வைத்து
நிஜமாய் வாழ்கிறாய்
எந்தன் நிழலும் நீயாகி
நித்திரையும் களவாடி
முத்திரைகள் பதிக்கிறாய்
உன் சித்திரமும் நானாகி
சொத்துரிமை தானாக்கி
வித்தகியாய் வாழ்கிறாய்
எப்பிறப்பிலும் எனதாகி
முப்பொழுதும் தேனாகி
எப்பொழுதும் சுவைக்கிறாய்
சொப்பனத்திலும் காணாத
சொந்தமாய் வந்தென்னை
சொர்க்கத்தில் தள்ளிவிட்டாய்
கண்ணுக்குள் பொத்திவைத்தால்
கனவாகிப் போகுமென்று,.. என்
நெஞ்சுக்குள் பூட்டி வைத்தேன்
உள்ளுக்குள் இருந்துகொண்டு
என் உயிரோடு கலந்து நின்று
உறவாடும் நுண்ணுயிரே
மண்ணுலகம் தான் மறந்து
விண்ணுலகம் நான் அடைந்து
வெண்ணிலவில் வாழ்கிறேன்
பெண் வடிவில் தான் வந்த
பொன் மலரே நீ எந்தன்
கண்ணிமையை மூடவிடு !
Monday, 19 December 2016
நாயகன் நெருப்பில் நாயகி மலர்ந்தாள்
காரண அமைப்பில் காரிய நிகழ்வில்
தோரண இனைப்பில் தூவிய மலரில்
வாரண முனைப்பில் பூரண சுகத்தில்
காமுக செழிப்பில் நாயகி நகைப்பில்
மேவிய நெருப்பில் நாயகன் உமிழ்ந்தான் !
தோரண இனைப்பில் தூவிய மலரில்
வாரண முனைப்பில் பூரண சுகத்தில்
காமுக செழிப்பில் நாயகி நகைப்பில்
மேவிய நெருப்பில் நாயகன் உமிழ்ந்தான் !
உனக்கும் எனக்கும் இதுதான் கணக்கு
நீ யார் எனக்கு நான் யார் உனக்கு
ஆனால் நமகுள் ஏதோ இருக்கு
ஏன் தான் இந்தத் தீராக் கணக்கு
யார்தான் வந்து சொல்வார் எமக்கு
நான் என்பதும் நான் இல்லை
நீ என்பதும் நீ இல்லை, ஆனால்
நானாய் நீயும் நீயாய் நானும்
நாமாயிணைந்து ஒன்றாயிருக்கு
நீதான் எனக்கு நான் தான் உனக்கு
இதுதான் என்று எழுத்து இருக்கு
எது தான் என்று நாமும் உணர
அது தான் இந்த காலக் கணக்கு !
ஆனால் நமகுள் ஏதோ இருக்கு
ஏன் தான் இந்தத் தீராக் கணக்கு
யார்தான் வந்து சொல்வார் எமக்கு
நான் என்பதும் நான் இல்லை
நீ என்பதும் நீ இல்லை, ஆனால்
நானாய் நீயும் நீயாய் நானும்
நாமாயிணைந்து ஒன்றாயிருக்கு
நீதான் எனக்கு நான் தான் உனக்கு
இதுதான் என்று எழுத்து இருக்கு
எது தான் என்று நாமும் உணர
அது தான் இந்த காலக் கணக்கு !
Subscribe to:
Comments (Atom)


