Friday, 25 May 2012

கனவில் வந்தேனா ....??? ***




கனவினில் வந்தேனா காயங்கள் தந்தேனா
கவிதைகள் சொன்னேனா காதலி என்றேனா
உயிரென சொன்னேனா உறவில் கலந்தேனா
மனதை வென்றேனா மடியில் துயில்ந்தேனா
மாயங்கள் செய்தேனா மந்திரம் போட்டேனா
தேவதை தானென செவியில் உரைத்தேனா
அன்பே என்றேனா அணைத்துக் கொண்டேனா
செல்லம் நீயென்று சேட்டை புரிந்தேனா
முத்தம் கொடுத்து உனை மூழ்கடித்தேனா
சும்மா சொல்லடி தயக்கம் ஏனடி நமக்குள்
இனிமேல் இந்த வெக்கம் எதற்கடி...........???




Thursday, 24 May 2012

என் கதையே கவிதையென்றால் !!! ***



அவள் திட்டினாலும் ரசிக்கிறாள்
நான் கத்தினாலும் ருசிக்கிறாள்
முத்த மழை பொழிகிறாள்
நித்தம் எனை வதைக்கிறாள்
குழந்தை போலே சிரிக்கிறாள்
கோபம் கொண்டால் துடிக்கிறாள்
உயிரே என்று அழைக்கிறாள்
உரிமையுடன் முறைக்கிறாள்
மாமோய் என்று மகிழ்கிறாள்
மனசை மெல்ல வருடுறாள்
கதைக்க சொல்லி கெஞ்சிறாள்
என் கதையே கவிதையென்கிறாள்
அன்பே உந்தன் அன்பாலே நான்
இன்று தும்பு போலே ஆனேனே........!!!

Tuesday, 15 May 2012

மூடரின் முழக்கம் ***


வாழ்க்கையை மனிதன் வரம் என நினைத்து
வாழ்ந்திடும் போது வஞ்சனை தொல்லை
வழியினில் காணும் மனிதனின் பேச்சில்
வலிகளின் வண்ணமும் ஓயவும் இல்லை
முன் அடி வைத்து முயற்சிக்கும் போதும்
மூடரின் முழக்கமும் முடிவற்ற எல்லை

சிந்தனையில் சிரிப்பு.!!! ***



வலிப்பதனால் துடிக்கிறேனா, இல்லை
துடிப்பதனால் வலியை அறிகின்றேனா
ஹா...........ஹா........ஹா...............ஹா......
சிரிப்பதனால் சிந்திக்கின்றேனா இல்லை
சிந்திப்பதனால் நான் சிரிக்கின்றேனா.....?
எதுவும் புரியவில்லை ஏனோ தெரியவில்லை
கண்ணைக் கட்டி காட்டிலே விட்டது போல்
கண்ணில் நீர் ஏந்தி நெஞ்சில் உனைத்தாங்கி
அன்பை பொழிந்தாலும் அம்பால் குத்துறியே
வம்புசண்டைபோட்டு வாட்டி வதைக்கிறியே
என்ன வாழ்க்கையடா இது ..............???

பாப்பாக்கு ஒரு கவிதை..!!! ***


காற்றிலே மிதக்கின்றேன் .
காகிதமாய் பறக்கின்றேன்
உருவம் இல்லா ஓவியத்தை
இதயத்திலே சுமக்கின்றேன்
மாலையில் சிரிக்கிறேன்
மயக்கத்தில் துடிக்கிறேன்
காலையில் .அழுகின்றேன்
கண்கலங்கி நிற்கிறேன்
மாதுளம் பூவே என் மனதை
நீ அறியாயோ
பூலோகத் தேவதையே என்
புலம்பல் கொய்வாயோ
தேகம் சிலிர்க்கும் தேனமுதே
என் தேவைகள் புரியாதோ
காற்றில் வந்த காவியமே
என் கையில் தவழாயோ
பாப்பா பாப்பா என்று உனை
பாசத்தோடு அழைக்கின்றேன்
ஏம்பா ஏம்பா என்று என்னை
தாவி அணைப்பாயோ...........???

நோயும் வாழ்வும் ***

மருத்துமனையில் என் மனதில்
பட்டதை கருத்தினில் கொண்டு
சிறு கவியாய் வடிக்கின்றேன்.....
இங்கே பார்ப்போர்கள் எல்லாம்
பரிதாப நிலையில் , ஐயஹோ
தூக்கத்தை இழந்து துடிப்போர்
உண்டு
ஏக்கத்தில் தன்னை மறப்போர்
உண்டு
தாக்கத்தில் வாடும் தனிமையும்
உண்டு
தாயைப்போலே பாசம் காட்டும்
தங்கை என்னும் தாதிகள்
உண்டு
பேயைப்போலே நோயைக் கூட
விரட்டி அடிக்கும் வைத்தியர்
உண்டு
மூச்சு நிற்கும் பேச்சும் உண்டு
இதயத்துடிப்பின் சத்தம் உண்டு
இதயம் துடிக்கும் சந்தம் உண்டு
வாழத்துடிக்கும் மனங்கள் உண்டு
வாழ்வைத் தொலைத்த நெஞ்சம்
உண்டு
எத்தனை எத்தனை தத்துவங்கள்
நித்தமும் கண்களில் மின்னுதடா
அத்தனை வண்ணமும் நான் கூற
பித்தமும் தலைக்கு ஏறுதடா.......
பசிவந்தால் பத்தும் பறந்திடும்
நோய் வந்தால் அந்தப் பசியே
மறந்திடும் ..
இதுதாண்டா வாழ்க்கை இதில்
நமக்கு ஏண்டா வீண் ............................???

தனிமையின் இனிமை. ***


தனிமையில் இருந்தேன், நான்
தனியாக இல்லை
தனியாக இருந்தேன் ஆனால்
தனிமையில் இல்லை
என்னவளே உன் நினைவுகள்
மட்டுமின்றி நீயும் எனக்குள்
தான் வாழ்கின்றாயடி
எந்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மத்திலும் நீயே
என் துணையாக வேண்டுமென்று
வரம் கேட்பேனடி
அப்பொழுது கூட உன் உடலுக்கு
நானே உயிராய் வேண்டி பெரும்
தவம் கொள்வேனடி.
என்னவளே உன் கல்லரையில் கூட
எனக்கு ஒரு இடம் வேண்டுமடி...!

தாயும் சேயும். ***



அன்னை போலே அவளின் அன்பு
என்னை பிள்ளை போலே மாற்றி
விட்டது
அவள் மனதை அன்னை மடியாய்
ஆக்கி என்னை தூங்கச் சொல்லி
ஆணையிட்டது
அவள் பாசம் என்னும் பாலைக்
குடித்து உன் குழந்தை என்று
சொல்ல வைத்தது
அவள் வேஷம் இல்லா கருனை
என்னை வெகுளி போலே ஆட்டி
வைக்குது
குறும்பு பண்ணித் திரிந்த என்னை
குமரி அவள் காதல் வென்றது...
தாயே என்று சொன்ன போதும்
நீயே என் சேயும் ஆவாய் ஓடி வாடி........ !!!