தத்துவங்கள்

    43)

                             



எதுவுமே இல்லாத ஒருவருக்கு
நீ எல்லாமாய் இருந்து பார்,

ஒருநாள் உன்னையே உனக்கு
வெறுக்கும் !





42)




 நம்மை பிடிக்கவில்லை என்பவர்களை

நாம் பிடிக்கவைக்கப் பாடுபடுபதை விட

நமக்கு பிடித்தவர்களை மனம் போல்

வாழவிடுவது தான் உண்மை அன்பு... 



41)

                               

சிலருக்கு மட்டும் நம்பிக்கையாக இருந்தும்
துரோகி என்று பேர் எடுத்து துடிப்பதை விட

பலருக்கு தும்பிக்கையாக இருந்து விரோதி
என்று பேர் எடுத்து வாழ்வது பரவாயில்லை !



40)  
                            

 எதுவுமே நடக்காத போது தான்
எல்லாமே எல்லாமாக இருக்கும்
ஏதும் இடையில் நிகழ்ந்துவிட்டால்
எல்லாமே எதுவும் இல்லாமல் போகும்
எது எப்படி இருப்பினும் அது அப்படி
அல்லாது ஆனால்
இதுவும் அப்படித் தான் ஆகும்... !


39)
                                    
                       

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு
உறவாய் இருப்பதை விட
நாணயம் உள்ளவர்களுக்கு
செருப்பாய் இருக்கலாம் !

38)                                  
எதுவரை எது என்பது ஒரு கணக்கு
அதுவரை அது வந்தால் சிறப்பு
இதுவரை இது என்பது வழக்கு
உனக்கு ஏதும் புரிந்தால் விளக்கு!
                                     



37)
                                             

உண்மைகள் சாகும் போது
பொய்கள் பிறக்கின்றது..!
அன்புகள் மிதிக்கப்படும் போது

உறவுகள் இறக்கின்றது..!



36)
                                         

நான் தப்பாக எதுவும் பண்ண மாட்டேன்
தப்பித்தவறி தப்பாய் போனால் தப்பியும்
ஓடமாட்டேன்..!

இங்கனம் தயக்கத்துடன் தலை குனியும்
உன் மனச்சாட்சி .


35)




சங்கடத்துடன் தினமும் வாழ்க்கையை
நடத்துபவர்களோடு கூட சந்தோசமாய்
வாழ்ந்திட்டுப்போயிடலாம்

ஆனால் தினம் தினம் சந்தேகத்துடன்
வாழ்பவர்களோடு சங்கடப்பட்டுக் கூட
வாழ்ந்திட முடியாது..!



34 )




அன்போடு இருங்கள் அனைத்தும் கிடைக்கும்
பண்போடு நடவுங்கள் பதவிகள் உயரும்

தென்போடு முனையுங்கள் துணிவுகள் பிறக்கும்
உண்மையோடு வாழுங்கள் உலகே வணங்கும்


33 )
                                                    


வியர்வை சிந்தாத உழைப்பும்
நேர்மை இல்லாத பிழைப்பும்
சலவை செய்யாத ஆடைபோலே
இரண்டிலும் சுத்தம் இருக்காது !


32 )                              
                         



காரணம் இல்லாமல் காரியம் இல்லை
கவலைகள் என்றும் நிரந்தரம் இல்லை
மாற்றங்கள் ஒன்றே மாறாதது உந்தன்
மனதினில் நிறுத்தி போராடிடு .............!!!



31 )


வாழ்க்கையை புரிந்து கொள்ள பெரும் ஞானம்
ஒன்றும் தேவையில்லை சின்னத் தூறல்
ஒன்றே போதும்


30 )
                         
மனது சொல்வதை கேளாதே உன் மதியை
மயக்கும் மறக்காதே,
உயிரே சொன்னாலும் நம்பாதே உன் உணர்வும்
பொய் சொல்லும் மறவாதே...!



29 )
தன்மையை உணராத பெண்மையும்
தன்னையே உணராத ஆண்மையும்
வெண்மையே இல்லாத பால் போலே



28 )

                                       

வேருக்கு நீரூற்றுங்கள் மண்ணில்
மரங்கள் வளரட்டும்
வியர்வைக்கு உணவூட்டுங்கள் மனித
மனங்கள் குளிரட்டும்
நேர்மைக்கு மதிப்பூட்டுங்கள் உலகில்
உண்மை நிலவட்டும் !


27 ) 



பூஜை இல்லாத கோயிலும்
ஆசை கொள்ளாத மனிதனும்
வெறும் கல்லு மட்டுமே !!!


26 ) 

                                         

நான் அந்தமாதிரிப்பட்ட ஆள் இல்லை
நான் அந்தமாதிரிப்பட்ட ஆள் இல்லை
என்று சொல்லும் இந்தமாதிரிப்பட்ட
யாரையும் நீ எந்தமாதிரிப்பட்டாலும்
நம்பிடாதே நம்பிடாதே ..................!!!


25 )

                                   


உலகத்திலே நீ எந்த மூலையில் வாழ்ந்தாலும் சரி
உன் சொந்த மூளையில் வாழாவிடில் .........நீ .....
உருப்படப் போவதில்லை.................
..................... !!!

24 )
                                           
ஒருவருக்காக உன்னை நீ மாற்றிக்கொண்டாய் ஆனால்
ஒவ்வொருவருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ள
வேண்டி வரும்..

கண்ணதாசன்.....

ஒருவருக்காக உன்னை நீ மாற்றிக்கொள்வாய் ஆனால்
அந்த ஒருவருக்காகவே எப்போதும் நீ உனை மாறிக்கொள்
அவரே உன் ஆயுள்ரேகை

கண்ணராசன்



23 ) 
                                             


உண்மையாக நீ நடந்தால் உலகம்
உனக்குக் கற்றுக்கொடுக்கும்
பொய்யாக நீ இருந்தால் உலகம்
உன்னிடம் கற்றுக்கொள்ளும்
கற்பிக்கப்போகின்றாயா இல்லை 
...

நீ கற்றுக்கொள்ளப்போகின்றாயா ???

                                                                                                                                                                   
22 )




  • தரம் கெட்டதுடன் சேர்ந்து தண்டமாக இருப்பதை விட.. முறை கெட்டதுடன் சேர்ந்து முண்டமாக சுற்றுவது மேல்... !

21 )    
                                              


நம்பிக்கையில் சாயம் போனால் நல்ல மனங்கள்
வாடிப்போகும்
தும்பிக்கையில் காயம் ஆனால் யானை கூட
ஆடிப்போகும் !



20 ) 
                                    
வேலை மினக்கட்டவன் வேட்டைக்கு போனானாம்
கழுதையைப் பார்த்து காண்டாமிருகம் என்றானாம் !

19 )
                                           
உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள பாம்புக்கு வாலையும்
மீனுக்கு தலையையும் காட்டும் விலாங்குமீனாக வாழ்வதில்
தப்பில்லை, ஆனால் தன் சுயநலத்திற்காக மட்டும் மாறும்
பச்சோந்தியாக இருந்துவிடாதே...!

  18 )                                  
நெருப்பில்லா அடுப்பிலே உருப்படாதவன்
உலை வைக்க,
பொறுப்பிலா ஒருவன் பொங்கல் தின்னக்
காத்திருந்தானாம் !


17 )      
                    


சடை வளர்ந்து குடும்பி வைத்தால்
அவன் பெயர் சாமி
தடை தகர்க்கப் பாடுபட்டால் அவன்
பெயர் பாவி
என்னடா உங்கள் நீதி எங்கே போகுது
இந்தப் பூமி.!


16 )                  


விரோதியோடு சேர்ந்து வெத்திலை போட்டாலும்
துரோகியிடம் மட்டும் சுண்ணாம்பு கேட்காதே...!!!


15 ) 

                          



            உழுது களைத்தவன் விழுந்து படுத்தானாம்
             பழுது பார்த்தவன் பதவியேற்றானாம்
             அதனைக் கண்டவன் அழுது தீர்த்தானாம் !



14 ) 
                                     

மெய்யான உணர்விலே பொய்யாக நடிப்பதும்
பொய்யான உறவினை மெய்யாக உரைப்பதும்
உயிர் இல்லா உடலோடு உறவாடுவது போல்.!



13 )



கேட்கும் போது இருந்தும் கொடுக்காத பண்பும் 
கொடுக்கும் போது உணர்ந்தும் ஏற்காத அன்பும் 
பசிக்கும் போது கிடைக்காத உணவுபோல் எதற்கும்
பயன் இல்லை......!


12)
                         

 விழுந்து விழுந்து எழுந்து நடைபோடுபவன்
சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றான்
விழுந்திடுவேனோ என்று பயந்திருப்பவன்
இடத்தில் தரித்திரம் பிடிக்கின்றது !


11)
                                         

    சடை வளர்ந்து குடும்பி வைத்தால் அவன் பெயர் சாமி
    தடை தகர்க்கப் பாடுபட்டால் அவன் பெயர் பாவி
    என்னடா உங்கள் நீதி எங்கே போகுது இந்தப் பூமி.!

10 )                                     

கொடுத்தவனுக்கு குறையிருக்காது
எடுத்தவனுக்கு நிறைவிருக்காது
அடுத்தவனுக்கு கொடுப்பதற்கு முன்
தடுப்பவனுக்கு மனதிருக்காது........ ??

9 )


கவிதை எழுதுபவன் எல்லாம் கண்ணியவானும் இல்லை
புடவை கட்டியவள் எல்லாம் புண்ணியவதியும் இல்லை..!

8 )

                                       
    ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக
    எதை என்றாலும் சொல்லிவிடாதே..

    அதுவே சில நேரம் பலர் வாழ்வை எதுவும்
    இல்லாமல் பண்ணிவிடக்கூடும் !
 7 )                                      

 

பொறுக்க பொறுக்க உண்பவனும் மறுக்க மறுக்க
பேசுபவனும் வெறுக்கும் வரை விடமாட்டான்
நீ பொறுத்துத்தான் ஆகவேண்டும்........!!!
                                                                
6 )
                                         
                                     

தடுக்கி விழுந்தவன் தறுதலை என்றும்
வழுக்கி விழுந்தவன் பொறுக்கி என்றும்
புண்படுத்தும் பண்பற்ற மனிதர்கள் நாம்

 5 )

                                             

விண்ணீர் புண்ணீரை கண்ணீராய் சிந்தினால்
மண்ணில் தண்ணீர் கூட வென்னீராச் சுடும்

  4 )
                                                        
               

உருகிடும் உன் உள்ளம் வெறுமனை ஆனால் 
அரண்மனை இருந்தும் நீ ஆண்டியாய் வாழ்வாய்

3 )

    போதை தெளிந்தபின் மன்னிப்பு கேட்கத் துடிக்கும் ஆண்களும்
    பாதை வகித்தபின் நடைபோடப் பயப்பிடும் பெண்களும்
    தண்டங்களாய் சுற்றும் பிண்டங்கள்..

    2 )

    நாம் எல்லோருக்கும் நல்லவனாக
    நடிப்பதை விட

    நம்மை நம்பியவர்களுக்கு நாணயமாக
    இருப்பதே சிறப்பு

    1 )


    அன்று உருவத்தில் கருப்பாய் இருந்தான்
    உள்ளம் வெள்ளையானது..

    இன்று உருவத்தில் வெள்ளையானான்
    உள்ளம் கருப்பானது .

No comments:

Post a Comment