Wednesday, 5 March 2014

என்னை திட்டாதே செல்லம்

தெற்பைக் குளத்தினிலே கற்பம் தரித்தவளே
மச்சம் உண்டபின்னும் விரதம் பிடிப்பவளே
கட்டைப் பாவாடையில் மொட்டு மலரக்கண்டு
தொட்டு முகர்ந்தவனை திட்டி விரட்டுவதேன்

கிட்ட இருந்தும் எட்டவில்லை

அன்பே உன் ஒற்றைச் சொல்லில் உயிர் வாழ்கின்றேன்
இன்று போய் நாளை வா என்றது புராணம் நேற்று போய்
இன்று வருவாய் என்பதே என் பிராணம்.,
உருமாறலம் ஏன் என் உயிர் கூடப் போகலாம் ஆனால்
என் உள்ளத்தில் உருவான உன் கருமாறாதே...

காவோலை சத்தத்திலும் காற்றடிக்கும் முற்றத்திலும் என்
எல்லாமானவளின் இதய ஒலி கேட்குதடி
வல்லிபுரக்கோவிலினிலே நீ நடந்த சுவடு கண்டு என் தடம்
பதித்து நடக்கின்றேன் பக்கத்தில் நிற்கின்றேன் பாவி உன்
வார்த்தைக்கு கட்டுப்பட்டு வீதி வழி சென்றிருந்தும் விழி
மூடிச் சென்றிருந்தேன்....
என் விடுமுறை முடியமுன் உன் தடுமடை உடைய வேண்டும்
இல்லை உன் கருவை நான் காக்க என் பொறுமையை இழக்க
நேரும்....... இது உத்தரவு இல்லை கட்டளை.....................................!!!!!

படபடக்குது நெஞ்சு பாழாய்ப்போன நிலைகண்டு

கொதகொதக்கும் உலையினிலே
குறுக்கெழுதுப் போட்டியடா
படபடத்த நிலையினில் நான்
பதில் சொல்ல ஓடி வந்தேன்
புறுபுறுக்கும் உலகினிலே ...

அருவருக்கும் வாழ்க்கையடா
சொருசொருக்கும் மண்ணினிலே
விறுவிறென்று நடந்திடலாம்
கொழகொழென்ற பூமியென்றால்
புதைபுதையென்று புதைக்குமேடா
சட்டுப்புட்டென்று முடிவெடுத்து
கொட்டும் மழையிலும் சோறாக்கி
எட்டிப்பார்க்கும் ஏழைக்கெல்லாம்
கொட்டிக்கொடுத்து உறவாடு
உனை தட்டிக்கொடுக்க பலர் உண்டு
இல்லை முட்டி மோதிப் போராடு
பட்டினிச் சாவை மெல்ல கட்டிப்போடு
முடியாட்டி வெட்டிப்போடு..................!!!

தோற்கவில்லை ஆனால் நீக்கப்பட்டேன்

நீ விளையாடும் அழகை பார்க்க எவ்வளவு
ஆனந்தம், ஆனால் உன்னை கட்டித்தழுவிப்
பாராட்டத்தான் என்னால் முடியவில்லை...,
காரணம் விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டு
மைதானத்துக்கு வெளியே நான் ................. நீ
நீயாகவே இருக்கின்றாய் நான் மட்டும்தான்
லூசாகவே ....................... ஹா ஹா ஹா !!!

திரையை விலக்கு இல்லை கொலையை நடத்து

காசறைக்கருவே உன் நிர்வர்த்தம் இல்லாது
நின் காசாக்காரன் கபோதியாய் கருவுற்றுப்
போகமுன் கவழிகை விலக்கி கதிர் மொழி
செவியிடு இல்லை எனை காசனம் செய்திடு..!!!

கொஞ்சம் சிரிக்கலாமே

வேண்டா வெறுப்பா பிள்ளையை பெற்று
காண்டா மிருகம் என்று பேர் வைத்து
போண்டா வாங்கி கொடுத்தால் ஐயோ
வேண்டாம் என்று சொல்லிச்சுதாம் ......... !

காண்டாமிருகம் போண்டா தின்னுமா ஐயோ
ஐயோ வேண்டா வெறுப்பா கதைக்காதீங்கோ

துடுப்பில்லா ஓடம்

சிலை வடித்த கவிதை நான்
உன் கழுத்து மாலையாக
அலை அடித்த ஓடம் நான்
விலை போக முடியாமல்
தலை சாய்த்தேன் கரையோரம்

பிடித்தால் செய் பிடிக்காட்டில் சொல்

நமக்குப் பிடிக்காதவர்கள் எங்களுக்கு பிடித்த
விடயத்தை செய்யும் போது எங்களுக்கு
அவர்களிடம் மதிப்பு கூடுவது தெரியும்...
நமக்குப் பிடித்தவர்கள் எங்களுக்கு பிடிக்காத
விடயமென்று தெரிந்தும் செய்யும் போது ...

அவர்களுக்கு எங்கள் மேல் உள்ள மதிப்பும்
மரியாதையும் நன்றாகவே புரியும்....
இதை பார்த்துக் கொண்டு இருப்பதை விட
கண்ணை மூடிக் காணாமல் போவதே மேல்...!!!

தடை உடைக்க வழியில்லை



படை கொண்டுவந்தாலும் இடையறுத்து
நடை பயில்வேன், விடை கூட குடை
பிடித்தால் உடைபோட்டு என்ன பலன்
தடை உடைக்க முடியாது தடுமாறும்
மடை கொண்ட சிலை நானே...................!!!

சட்டத்தை உடைக்கும் திட்டம்


பட்டுப்பூச்சிக்கும் செட்டை முளைக்கும்
சட்டம் போடுவோரின் கொட்டம் அடங்கும்
அப்போ கைதட்டி மெட்டுப்போடுகின்றேன்
ஓடிவந்து என்னை கட்டிக்கொள்ளடி .......

குழப்பத்தில் குமுறும் நெஞ்சம்

காதலுக்கு காச்சல் என்று கண்ணீர் துளி
சொல்லக் கேட்டு இதயத்திலே இடி இடிக்க
இமையோரம் மழைத்தூறல், தூது சென்ற
தென்றல் கூட துயரத்தை தாங்காமல் இடை
நின்று தவிக்குதென்று இடைக்காலத் தகவல் ...
ஒன்று,............... நடைமுறையை அறியாமல்
நாவினிலே சுவையில்லை விடை என்ன
தெரியாமல் விழிகளிலே ஒளியில்லை தடை
ஏது வந்தாலும் தடுமாறப்போவதில்லை படை
கொன்று நின்றாலும்....................... என் துணை
நீயின்றி ஏதுமில்லை