Thursday, 26 May 2016

கலகலக்கும் நிலையறியாப் பரபரப்பு

தலைகுனியும் நிலை எதற்கு
தமிழினமே நீ விளக்கு

மதி மயங்கி மதுக்கடையில்
கிடப்பதுவா உன் பிழைப்பு
...

நடந்து செல்லும் வழியெல்லாம்
நரிகளின் வலை விரிப்பு

நாட்டுக்குள்ளே காட்டுக்கோழி
கூடி நின்று கலகலப்பு

மாட்டுக்காரன் தோட்டத்திலே
பாட்டுப்பாட ஏன் மறுப்பு

சாட்டு சொல்லும் கூட்டத்துக்கு
வீட்டுக்குள்ளே வரவேற்பு

கூட்டுக்குள்ளே வாழும் உனக்கு
எதற்கு இந்தப் பரபரப்பு..?




லேசாய் சுடும் வாடாமல்லி

லூசா என்பதும் லேசா
இருக்கின்றதே நீ எனை
திட்டும் போதும்


போடா என்பதும் சூடா...
இருக்கின்றதே நீ எனை
விரட்டும் போதும்



வாடா என்பதும் காடா
எரிகின்றதே என் மேனி
யாவும்


வாடாமல்லிகையே சூடா
மணியே எனை பாடாய்ப்
படுத்துறியேடி !

Wednesday, 18 May 2016

யார் கொடுத்த சாபமடி கண்மணி ?

    மூடர்கள் உலகமடி கண்மணி
    இங்கே பூவையர் சுமப்பது ஏன்
    வீண்பழி                                                                                                                                                  

    ஆடவர் ஆட்சியடி கண்மணி...
    இங்கே பாவிகள் அதிகமடி நீ
    அதைப்படி                                                                                                                                               

    மாமியார் மோசமடி கண்மணி
    இங்கே மருமகள் பாவமடி என்
    நிலைப்படி                                                                                                                                            

    சாமியார் தொல்லையடி கண்மணி
    இங்கே சாத்தான்கள் நடமாட்டம்
    அத்துபடி                                                                                                                                            

    ஏன் என்று கேட்பாரோ இல்லயடி
    எனக்கு எதற்கென்று போவாரே
    அதிகமடி                                                                                                                                               

    விளைநிலம் பார்த்து நீ விவசாயம்
    செய்ய, பெண் என்ன மண்ணா என
    திருப்பியடி                                                                                                                                           

    சீதனம் கேட்டு அலைந்தவன் பின்
    சீதையா நீயென்றால் கொடுத்திடு
    சவுக்கடி.


எல்லாத்துக்கும் ஒரு வயதுண்டு

அந்த வயதிலே நீ அந்த வேலையைப்
பார்க்காமல் இப்போ இந்த வயதிலே ஏன்
உந்த வேலையைப் பார்க்கின்றாய் ?

இல்ல உண்ணாணைச் சொல்லு அப்போ
நீ எந்த வயதிலே தான் உந்தன் சொந்த
வேலையைப் பார்க்கப்போகின்றாய் ?

நேசிப்பதால் உனை சுவாசிக்கின்றேன்


விசுக்கோத்து விசுக்கோத்து
என்றென்னை சொல்கிறாள்


எனக்கு கோபம் வரவில்லை
ஏன் ரோசமும் வரவில்லை...

அவள் மேல் பாசம் வருகின்றது
ரொம்ப நேசமும் வளர்கின்றது

காரணம் சொல்பவள் எந்தன்
சுவாசம் என்பதால் ............!!!
 

விறுவிறுத்த நெஞ்சம் புறுபுறுக்குது.


திடுதிடுக்க ஓடி வந்து திருடன்
தான் அங்கு என்று படபடத்த
விழிகள் இரண்டு வழுவழுத்த
கதையைக் கண்டு

விறுவிறுத்த நெஞ்சம் கொண்டு
பொங்கி வந்த ஒருவன் இன்று
புறுபுறுத்த நிலையைக்கண்டு
பிரசுரித்தான் மழலை ஒன்று

கொழுகொழுத்து வளர்ந்த பிள்ளை
பளபளக்கும் மேனிகெண்டு தளதளக்கும்
தேகத்தோடு கொதகொதக்கும் உலையில்
விழுந்து விலை உயர்ந்தான் தன்னாலே !