விழியோரம் வீச்சருவாள், எனை
வெட்டி வெட்டி சாய்க்கின்றாள்
உதட்டோரம் புன்னகையால், எனை
ஓரம் கட்ட பார்க்கின்றாள்
கழுத்தோரம் கனி கொண்டு, எனை
காமத் தீயில் தள்ளுகிறாள்
இடுப்போரம் கொடி எடுத்து, எனை
கட்டிப்போடப் பார்க்கின்றாள்
முறை மச்சாள் நான் என்று, எனை
முட்டி போட வைக்கின்றாள்
தப்பி ஓட நினைத்தாலும், என்
கனவில் வந்து வதைக்கின்றாள் …

No comments:
Post a Comment