யார் வந்து சொன்னாலும்
ஏன் என்று கேட்க்காமல்
தலையாட்டி செல்கின்ற
மனநிலை மாறாதோ
எதற்காகச் சொல்கின்றார்
என்று நீயும் பாராது
ஏமாந்து போகின்ற
நிலை இங்கு மறையாதோ
சதி ஒன்று செய்தாலும்
விதி என்று சொல்கின்ற
கெதி இங்கு சாகாதோ
சகதியாய் பாய்ந்தோடும்
ஜாதியின் சஞ்சலம்
சாம்பலாய்க் கரையாதோ
வீண்புக்கு விலை போகும்
விலையற்ற மாந்தரின்
விழிகளும் திறக்காதோ
கதியற்றுக் கலங்கிடும்
ஏழையின் வாழ்விலே
பூமழை பொழியாதோ
புது யுகம் மலராதோ

No comments:
Post a Comment