Saturday, 17 May 2014

அரியணை கேட்கும் வௌவால்

சுடுகாட்டில் எரியும் உடலுக்கு
எதற்கு சோடனை
ஒட்டடை பிடித்த இதயத்துக்கு
எதற்கு தட்சணை
விட்டத்தில் தொங்கும் வௌவாலுக்கு...
எதற்கு அரியணை
காட்டில் வாழும் பறவைக்கு கூட்டில்
எதற்கு சோதனை
அறிவுக்கண்கள் அற்ற மூடர்கு ஏட்டில்
எதற்கு போதனை

மாற்று மருந்து காற்று முத்தம்


  ஆத்துக்காரன் என்று அறிக்கை கொடுத்துவிட்டு
சோத்துக்கத்தாழை போல் பூத்துக் குலுங்கிறியே
பார்த்த உடனே என் உள்ளம் கூத்து ஆடுதேடி
வேர்த்து விறுவிறுத்து நேற்று விழுந்தேனே
காத்துக்கறுப்பு அடித்ததுபோல் மாட்டி தவிக்கின்றேன்
மாற்று மருந்தாக காற்று முத்தம் தருவாயோ.........

அழகு அழகு அழகு

 அழகு அழகு எது அழகு
அறியாக் குழந்தை சிரிப்பு அழகு,
அழகு அழகு எது அழகு
அன்பாய் பேசும் மொழி அழகு,
அழகு அழகு எது அழகு...

அந்தப் புறத்தில் மலர் அழகு,
அழகு அழகு எது அழகு
அருவி கொட்டும் நீர் அழகு,
எல்லா அழகில் எது அழகு
உந்தன் மடியில் நான் அழகு.
எந்தன் மடியில் நீ அழகே

நீ யார் நான் யார்

சிரித்து சிரித்து அழுபவன்,சிந்தனைவாதி
சிந்தித்த பின் சிரிப்பவன் தான் மேதாவி...
தண்டனையிலும் சிரிப்பவன் சாமர்த்தியசாலி
சாவைக் கண்டும் சிரிப்பவன் சரித்திரவாதி

அன்பை நம்பு முட்டாள் ஆவாய்

விடியாத உலகத்தில் படியாத மூடன் நான்
கொடியேற்ற நினைக்கின்றேன் தடிக்கம்பம்
இல்லாமல், , ஆமா ஆமா அன்பை உயிராய்
மதித்து நம்பிக்கையில் வாழும் எல்லோரும்
இவ்வுலகில் தலைசிறந்த முட்டாள்களே...... !!!

வீழ்ந்தாலும் உன் நிழலில்

அன்பே நான் இறக்கும் காலம் வந்தாலும்
உன்னை மறக்கா வரம் கேட்டிடுவேன்...
உயிரே நீ எனை மறக்கும் காலம் வந்தாலும்
நான் இறக்கும் வரம் வேண்டிடுவேன் ..
உன் தொடக்கம் எந்தன் உயிர் கலந்தாலும்
என் அடக்கம் உந்தன் நிழல் தனிலே......... !

அன்பும் உணர்வும் உயிரானது

அன்பு காட்டுவதில் கணக்கு போடாதே,
அதிலும் குற்றம் காணும் மனிதர் உண்டு
வெட்கப்படாதே
உயிரே போனாலும் உணர்வை கொல்லாதே
உரசிப்பார்பார் சத்தம் போடாதே

இதயம் தலையணை

அன்பே உன்னை உறங்க வைக்க
நான் கட்டில் ஒன்று செய்திடுவேன்
அதில் நீ ஆனந்தமாய் தூங்கிடவே
குருதியாலே வண்ணம் செய்வேன்
என் இதயத்தை எடுத்து உயிரே
உனக்கு தலையணை தந்திடுவேன்

உன் தனிமை எனக்கு வலியடி

வலிக்குதடி உயிரே நீ என்னை தனிமையில்
விட்டு வதைப்பதினால் இல்லை.... நீ என்னை
தனிமையில் விட்டேனே என்று தவிப்பதினால்..!

மந்தைகள் மத்தியில் மந்த நிலை

கத்தரிவெகுளிகள் மத்தியிலே இன்று
நித்திரை கொள்ளும் மந்தைகள்
நம் இனம், சித்திரை வந்தது நித்திரை சென்றது
வைகாசி பிறந்ததும் நம் பசி வளர்ந்தது
சத்தமே இல்லாமல் யுத்தமே நடக்குதே
மிச்சமின்றி கத்தி நான் சொல்லுவேன்
ஆனால் என் புத்திதான் தடுக்குதே............!!!

மெலிந்த கறுப்பி கொழுத்த சிவப்பி


ஊருக்கு போனேன் நான் ஊருக்குப் போனேன் ..!!!

கருகருவென இருக்கும் கறுப்பி ஒருத்தி என்னை
வெள்ளை உள்ளத்தால் கொள்ளை கொண்டாள்
கொழுகொழுவென இருக்கும் சிவப்பி ஒருத்தி...
தன்னை வெள்ளைக்கரி போல் எண்ணி புகழ்ந்தாள்
மெலிமெலிந்திருந்த நெடுத்தி ஒருத்தி என்னை
கொல்லை புறத்தில் மயக்கித் தொலைத்தாள்....
முடிவு என்ன அறிய ஆசையா அடுத்த ஆக்கதில்
படித்து தெரிக.................. ஹா ஹா ஹா ஹா !!!
 

ஊருக்கு போனேனா போருக்கு போனேனா ?

உருக்கு போனேன் நான் ஊருக்கு போனேன் என்
உறவுகளை பார்க்க நான் ஊருக்கு போனேன்
போருக்கா போனேன் நான் போருக்கா போனேன்
ஏன் என் மனது வெடித்து திரும்பி வந்தேன்
என்ன நடந்தது அறியவேண்டுமா கொஞ்சம்
பொறுங்கோ வந்து சொல்லுறென்.. ஹா ஹா ஹா

பவழமல்லிகையும் பைத்தியக்காரணும்

மடக்கொடியே நின் துகிர்த்தளியே
ஒர் மந்தணம் செப்பவா
உன் திவிய துகிர் மேனி தொட்ட
மந்தானிலம் எனை தழுவும் போது
மயத்தல் கொண்டு தீவானம் நின்வழி

பூவை மிஞ்சிய பூவை

மண்ணிலே நடக்கின்ற போதும் நான்
விண்ணிலே பறக்கின்றேனே
காரணம் என்னவென்று எந்தன்
கண்மணி அறிவாளே
பூஞ்சோலையில் இல்லா வாசனையை...

அவள் சேலையில் கண்டேனே
நான் மாளிகை இல்லா மன்னன் என்று
அவள் பார்வையில் சொன்னாளே
கோபுரம் இல்லா மனக்கோட்டைக்குள்ளே
என் சாமியும் நீதானே.... !

நீ விதியா மதியா சொல்லடி ?

உணர்வு கவியில் பொங்கிட
உயிரில் ஏதோ மின்னிட
உரிமை கொண்ட என்னவள்
விதியாய் நின்றாள் என்னிடம்
மதியை கொண்டு அவளிடம்...

சகியே என்றேன் முந்தினம்
... பதிதான் நீ என்றாள் பிந்தினம்
இப்போ என் கவியே உங்கள்
கைவசம், நான் தனியே என்றதே
ஒர் இனம், என் தனிமை தீரும்
அவள் வந்ததும்........................ !!!
 

தலைகோதும் தேவதை நீ

குருத்தோலை சரசரக்க குயில் ஓசை
இசையமைக்க
அதிகாலை வேளையிலே நீ எந்தன்
கனவிலடி.
கால்முட்டப் பாவாடை கசங்கிப்போன...

மேலாடை
கையிலே வளையோசை கவிபாடும்
விழியோடு
என் தலைகோதி அமர்கின்றாய் விரலால்
சுரம் பிடிக்கின்றாய்
மதிமயங்கி போனேனடி நீ எனை மன்மதா
என அழைக்கயிலே
செவியோரம் தேன் பாய திகட்டாது அதை
உண்ண
சுதிசேர்ந்த என் தேவதையே ஏன் விதி என
விட்டுச்சென்றாய்... ???

காற்றில் ஆடும் பாவாடை

மாம்பழத்தை அணில் கொந்த
மாமி அதை துரத்த
கொக்கரித்துக் கோழி ஒன்று
தெத்தித் தெத்தி ஒடயிலே
அத்தை மகள் ஒத்தையிலே...

முத்தம்தனை கூட்டயிலே
ஒட்டுப்போட்ட பாவாடை
விட்டு விட்டு ஆடயிலே
இத்தனையும் போதுமடா
எனக்கு எந்த சொத்துச்சுகமும்
வேண்டாமென்றேன்
நித்திரையில் மாமன் எழுப்பி
பட்ட பாட்டை சொன்ன போது
மொட்டு விட்டு பூத்த நெஞ்சம்
ஐயஹோ பட்ட மரம் ஆனதடா !

போதையூட்டும் குலமகள்


கலியுகத்தில் கண்ணன் காதலிக்கின்றான்
கவிதைகளால் அள்ளி சோடிக்கின்றான்,
குலமகள் போதையை உற்றுகின்றாள் குடிக்கமும்
குதூகலம் காட்டுகின்றாள்