வாட்டும் மனச்சாட்சி
சுளற்றி விட்டாய் பம்பரத்தை
சுளன்று வந்து நிற்கமுன்னே
சூழ்ந்து வந்த என் பாசம்
சுளர உன்னை வைக்குதடி
சூழ்ச்சி செய்து வந்த உன்னை
சுத்தாமான என் அன்பால்
சுட்டு விட்டேன் உன் மனதில்
பாவத்தை செய்த நீயும்
பாசத்தை கண்டவுடன்
பதட்டம் வந்து இப்போ
பாடாய் படுத்துதுன்னை
மனசாட்சி உயிர் பெற்று
மங்கை உன்னை வாட்டுதடி
காயங்கள் ஆறினாலும்
தழும்புகள் சாட்சி ஆகும்..
வேஷத்தை கலைத்து விட்டு
பெண்மைக்கு மேன்மை கொடு....
No comments:
Post a Comment