கடல் கடக்கப் பார்க்கின்றாய்
ஓவியத்தை வரைந்து வைத்து
உயிர் கொடுக்க நினைக்கிறாய்
சொத்துக்களை சேகரித்து, பல
வித்தைகளை காட்டுறாய், நீயோ
பத்திரத்தை பதிவு செய்து
மெத்தையிலே வைக்கின்றாய்
பெத்தவரை அங்கும் இங்கும்
குத்தகைக்கு விடுகின்றாய், உன்
மனைவி ஊதும் மகுடி கேட்டு
மதிமயங்கி ஆடுறாய் ...................
............மண்புழுவாய் வாழ்கிறாய்
சத்துணவு தந்தவர்க்கு , ஏன் தான்
சாதம் போட மறந்திட்டாய்....
சாதம் போட மறந்திட்டாய்....
No comments:
Post a Comment