ஒட்டகம் மேய்ப்பது ஓநாய் என்று
காவியம் மறந்து கருத்துச் சொன்னான்
கண்ணில்த் தெரிவது காகிதம் என்று
பாவம் செய்யத் தூண்டி விட்டு
தோஷம் தீர்க்க பூசை செய்தான்
தாகத்தோடு தண்ணீர் கேட்டால்
தலையைத்தடவித் தத்துவம் சொன்னான்
பசிக்கு இங்கே புசிக்க இல்லை
ருசிக்குதா என ரசித்துக் கேட்டான்
வீட்டில் இருந்து சாட்டுச் சொல்லும்
எலிகள் கூடப் புலியாம் இன்று
எண்ணக் கதவை மூடிக்கொண்டு
வண்ணம் பூசி வாழ்த்துப் பாடும் ...........
.................................................................... நாமே !!!

No comments:
Post a Comment