Friday, 23 March 2012

முத்தத்தில் வேர்த்த முத்து ***


பொத்தி வைத்த மொட்டு ஒன்று
மெத்தையிலே பூத்தது
மூடி வைத்த முத்து ஒன்று
முத்தத்திலே வேர்த்தது
கால் முளைத்த வெள்ளி ஒன்று
கவித்துவமாய் பேசுது
கண் சிமிட்டும் கவிதை ஒன்று
கன்னியாகச் சுற்றுது
கை முளைத்த நிலவு ஒன்று
கன்னத்திலே கனி கொண்டு, தன்
கண்ணாளன் வரவுக்காக
காத்திருக்கும் கிளி ஒன்று....

No comments:

Post a Comment