Thursday, 22 March 2012

மடியைத் தேடும் மனசு



உனக்கும். எனக்கும். நெருக்கம்
அதில் ஊருக்கு ஏனடி வருத்தம்
நீ சிரித்துப் பழகும் போது,
சில இதயம் சிவந்து கலங்கும்
புரிந்து கொண்டதாலே உன்
உதயம் இங்கே சுணக்கம்
இருந்தும் ஏனோ எனக்கும்
உன் உறவின் மீது மயக்கம்
மயக்கம் தீரும் முன்னே உன்
மடியைக் கொஞ்சம் தாடி
தயங்கி நீயும் நின்றால் என்
உயிரை விடுவேன் தேடி
உண்மை அறிந்து நீயும்
எனை நாடி ஓடி...... வாடி
மறுத்து நீயோ சென்றால்
என் மரணம் உனக்கு செய்தி
அப்போது நீ வருவாய் ஓடி
வந்து என்னை மண்ணில்
புதைத்து விட்டுப் போடி..... !!!

No comments:

Post a Comment