தயங்கித் தயங்கிப் பேசுகின்றாள்
தள்ளி நின்று கண்வீசுகின்றாள்
உறக்கம் கொள்ளும் போதினிலும்
உயிரில் ஊஞ்சல் ஆடுகிறாள்
இரக்கம் இல்லாப் பாவையவள்
கனவில் வந்து ஓடுகிறாள்
கடலில் விழுந்த உப்பைப்போலே
கரைந்து போவது நியாயம் தானோ
கன்றைத் தொலைத்த பசுவைபோலே
உன்னை தொலைத்த பாவி நானே...........

No comments:
Post a Comment