தாலாட்டும் தென்றலுக்குச் சொந்தக்காரி, இவள்
தள்ளாடும் வயதிலும் கொள்ளைகாரி
முல்லை தோட்டத்துக் காவல்காரி, இவள்
முத்துகள் சந்தைக்குப் பங்குக்காரி
தாமரை இதழ்களின் உறவுக்காரி, இவள்
தங்கத்தின் ஜொலிப்புக்கு உரிமைக்காரி
வாளெடுத்து விழிகளில் வீசும் காரி, இவள்
வாழ்கைக்கு உகந்த வீட்டுக்காரி
சாமர்த்தியக் கதைகள் சொல்லும் காரி, இவள்
தாம்பத்திய உறவில் கெட்டிக்காரி
புருசனை மயக்கும் பூக்காரி , இவள்
புன்னகை செய்யும் புதுமைக்காரி
கண்களில் மையில்லாக் கவர்ச்சிக்காரி, இவள்
கருவினில் எனைத் தாங்கா தாய்க்காரி.......