பூவைக் கண்டு மயங்கவில்லை, உன்
புன்னகை கண்டு மயங்கிவிட்டேன்
வண்ணம் கண்டு மயங்கவில்லை, உன்
வார்த்தை கண்டு மயங்கிவிட்டேன்
மேகம் கண்டு மயங்கவில்லை, உன்
மேனி கண்டு மயங்கிவிட்டேன்
மானைக் கண்டு மயங்கவில்லை, உன்
மனதை கண்டு மயங்கிவிட்டேன்
நிலவைக் கண்டு மயங்கவில்லை, உன்
நினைப்பே எனக்கு மயக்கமடி...

No comments:
Post a Comment