Tuesday, 25 December 2012

குழல் ஊதும் பூச்செடி !



வார்த்தையில் அடங்கா மெல்லினமே
என் வாழ்வினில் படர்ந்த பூவனமே
உணர்வினில் உறைந்த வல்லினமே
என் உறவினில் கலந்த உன்னதமே
சொத்தாகக் கிடைத்த பொக்கிஷமே

என் இதயத் துடிப்பின் ஒலி நீயே
எனை ஆட்டிவைக்கும் விதி நீயே
என் உடலில் வாழும் உயிர் நீயே
எனை காயப்படுத்தும் அம்பு நீயே
என் வலியை ஆற்றும் மருந்தும் நீயே
எனை சொர்ப்பனத்தில் வாட்டும் தீயே
என் சொர்க்க வாசல் கதவும் நீயே
என் சொந்தம் என்று வந்தாய் தாயே
எனை பிள்ளையாக்கி மகிழ்ந்தாய் நீயே
உன் பாசத்தை கண்டு மயக்குவதா
உன் பாதத்தை தொட்டு வணங்குவதா
என் சுவாசம் நீ உன் வசம் நான்
என்னவளே என் எல்லாமானவளே
உன் சுவடுகள் என் சுவாசத்தில்
சிறிதேனும் வாசம் குறைந்தால்
என் உயிரின் தடம் என் உடலில் இருந்து
இடம் மாறும் என் உயிரினைத் தேடும் ...!!!

மடியில் உறங்கும் மழலை நீயே !


அன்பே இப்போதுதான் புரிந்துகொண்டேன் நீ ஏன்
என்னை அடிக்கடி வாட்டி வதைக்கின்றாய் என்று
உன் அன்பில் மூழ்கி நான் இறந்துவிடுவேன்
என்பதினால் தானோ என் உயிரை காக்க இப்படி?
ஆமா உண்மைதானடி நீ கொடுக்கும் வலிகளை
கூட என்னால் தாங்கிட முடியும், ஆனால் உனது
அன்பில் மூழ்கி மூச்சு முட்டுதடி என் சுவாசமே
பூர்வஜென்மம் போன ஜென்மம் என்பார்களடி
அதை நான் இப்போது முழுமையாக நம்புகின்றேனடி
அன்று என் அன்னையின் மடியில் உறங்கியசுகத்தை
இன்று உன் அருகாமையில் உணர்ந்தேனடி...............!!!

உயிரை காக்கும் வலிகள் !


உன்னை நானும் தாங்கும் போது உலகே கையிலடி
உன் உணர்வை நானும் சுவைக்கும் போது உயிரில்
மின்னலடி, என்னை நீயும் ஏந்திக்கொண்டால் எதிலும்
இன்பமடி....... என் இரவை பகலாய் ஆக்கும் வித்தை
எங்கே கற்றாயடி... ?

Monday, 17 December 2012

உன் பாவடை பூவிலே தேன் குடிக்கும் வண்டு நான் !




பூப்போட்ட பாவாடை பூட்டாத மேலாடை
காத்தோடு தானாட ஏறுதே பெரும்போதை
உன் பாவாடையில் பூவாக மேலாடையில்
நூலாக ஏங்குதே என் ஆசை..........................
உன் காதிலே கம்மலடி கண்ணிலே மின்னலடி

முதுகிலே யன்னலடி காயுதே என் நெஞ்சமடி
உன் இடுப்பிலே உடுக்கையடி என் உள்ளத்திலே
உலக்கை இடி, ஐயோ போதுமினி உன் இம்சையடி.!

விடை சொல்லும் முத்தங்கள் !



அன்பே உனக்கு எப்படி புரிகின்றது
என் கண்கள் கேட்கும் கேள்விகள்
ஓ என் இதயம் உனக்குள் இருந்து
பேசுவதாலோ மொத்தத்தையும் நீ
முத்தத்தால் மொழிபெயர்க்கின்றாய்
உயிரே நீ என்னை நினைக்கும் போது

தானடி உலகையே மறக்கிறாய் நான்
உனை மறந்தால் தானடி நினைப்பதற்கு
அடி போடி என் பூச்செண்டே என் உலகே
நீதானடி என் பொன்வண்டே.................!!!

மகாகவியும் மானிடப்பிறவியும் !!!



நின் புகழ் பாட என் நிலை என்ன
விண்வெளி தோறும் உன் கவி பாட !!!

சாதியை எடுத்து சந்தனத்தில் குழைத்து
சொந்தத்தில் பூசி சந்தையில் விற்குதே
இன்று உன் புத்திகள் எல்லாம் புத்தகமாகி

குப்பையில் கிடக்குதே...
அச்சங்கள் இல்லை என தினம்தோறும்
சத்தங்கள் போட்டியே
ஐயோ அது இங்கே துஷ்டன்கள் வாயிலே
எச்சங்கள் ஆனதே
பட்டினி பார்த்ததும் நித்தமும் எத்தனை
சத்தியம் செய்தியே..
இப்போ பட்டினி மட்டுமே ஏழையின்
குடிசையில் நித்திரை கொள்ளுதே
சாமியின் தலையிலே ஊற்றிய பால் இங்கே
தரையினில் ஓடுதே
என் தம்பியும் தங்கையும் வாசலில் தான் நின்று
வயிற்றினை தடவுதே..........................................!!!

Tuesday, 11 December 2012

நான் சொல்வது உண்மை !



உண்மை ஒன்று சொல்லவா
உண்மை ஒன்று சொல்லவா
வாயை மூடி மனதைத்திறந்து
வார்த்தையின்றி மௌனமாக
உணர்வை இங்கே கொட்டவா
காதை நீயும் பொத்திக்கொண்டு
கண்ணை நன்கு விழித்துக்கொண்டு
என் கதையை கேட்க ஓடிவா...!
என் விழியில் வடியும் கண்ணீர்
துளியும் அந்த உண்மை சொல்லுதா,
இல்லை ஊமை பேசும் பாஷை போலே
எந்தன் மொழியும் உள்ளதா...............???

கட்டிப்போடு இல்லை வெட்டிப்போடு !



கொடுமையாய் இருந்தாலும் கொடையா நிக்கிறாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகிறாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கிறாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகிறாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கிறாளே

உன் பொல்லாத்தனத்தால் பொசுங்கிப்போறேனடி
என்னவளே என் உயிரே என் எல்லாமானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி இல்லை
உன் காலடியில் என்னை வெட்டிப் போடடி........... !!!

இப்படியும் மனிதர்கள் உலகத்திலே !





உலகம் அழியப்போகுதாம் ஊரெல்லாம் கெடிக்கலக்கம்
உனக்கு என் மீது ஏன் இந்த பகை முழக்கம, ஏண்டா
தம்பி உப்பிடி செய்துட்டாய்.? தாயாய் பிள்ளையாய்
தானேடா பழகினோம், உலகத்து கதையெல்லம்
ஓடிவந்து சொல்லுவியே
பொறுத்த கதையை பொறுப்பில்லாமல் விட்டுட்டியே
உந்த விசயத்தை உடனே ஏன் சொல்லவில்லை.......?
பனங்காய் பணியாரத்தையும் கொடுத்து திண்டேனடா
அறுந்து போவானே ஏன் பழசெல்லம் மறந்திட்டியோ
கிறகம் பிடிப்பானே கேட்டால் தான் சொல்லுவியோ
தெரிந்திருந்தால் முதலே நான் உசாரா இருந்திருப்பேன்
பக்கத்து வீட்டுப் பரிமளம் பத்தாயிரம் தரவேண்டும்
வாங்கும் போதே சொன்னாளே அந்த பாழாப்போனவள்
பணம் உனக்கு தேவையென்றால் ஒருமாதத் தவணை
எனக்கு வேண்டுமென்று,
ஐயோ ஐயோ உலகம் அழிய அவ்வளவு நாள் இல்லை
அழிஞ்ச பிறகு நான் யாரைத்தான் பிடிப்பனடா ............?
அட இராசம்மா மாமிண்ட ஆதங்கம் கேட்டு நானும்
கொஞ்சம் கதிகலங்கிப் போனேனே ........................... !!!

அன்பு புரியாத அசடு !



நீ கேட்ட ஒரு கேள்வி எந்தன்
உயிரைக் குடித்ததடா
இதயத்துடிப்பினிலே இடியாய்
விழுந்ததடா
கனவிலும் நினைக்காத காரியம்

நடக்கையிலே
வெறும் சிலையோ நீயென்று மனசு
கேட்குதடா
உரிமையாய் ஓடி வந்து அன்பால்
அதட்டினேனே
அதுகூடப் புரியாமல் அடிமனதில்
குத்திவிட்டாய்
உயிரை பிடித்து வைத்து உனக்காக
காத்திருந்தேன்
உன் அன்பு அவ்வுணர்வை மதிக்காமல்
போனாலும்
என் அன்பை நீதான் காலில் போட்டு
மிதித்துவிட்டாய் போடா......................!!!

தமிழ் மொழி என் தாய் பொழி !



அதையும் இதையும் எழுதிவிட்டு
கவிதை என்று நான் போட்டேன்
கண்டபடி கருத்துக்கூறி என்னை
கவிஞன் என வாழ்த்துப்பாடி
ஊக்குவிக்கும் உள்ளங்களின்
கருணைதனை நான் கண்டு
மெய்சிலிர்த்து போகின்றேன்
தாய்பொழியாம் தமிழை எடுத்து
தாறுமாறாய் கொலைசெய்தேன்
மொழி காக்கும் தனையனென
வழிமொழியும் போதினிலே என்
விழிகலங்கி நிற்கின்றேன் பெரும்
பழிசுமந்த உணர்வோடு..............!!!

பஞ்சும் நெஞ்சும் கொஞ்சும் நேரம் !



உயிரே நீ உன் இதயத்தை கொடுத்து
பத்திரம் என்றாய் ஆனால் இவ்வளவு
பாரம் என்று சொல்லவில்லையே
அன்பே நீதான் பஞ்சுமிட்டாயாச்சே
அப்போ ஏன் உன் இதயம் மட்டும்

இப்படி கனக்கின்றது ..... ?????
ஓ........... உன் இதயத்துக்குள் நான்
இருப்பதாலோ ....???

எதை தேடி அலைக்கின்றாய் ......???



அம்மா நான் வெளிநாட்டுக்குப் போறன்
கைநிறைய உழைச்சுக்கொண்டுவாறென்,
மாமிட்டை சொல்லிவை என் மச்சாள்
கவனம் எண்டு நான் வந்து கட்டுறன்
அதுக்கும் இதுக்கும் ஆசைப்பட்டாய் இப்போ

மதுக்கடைக்கு வாழ்க்கைப்பட்டாய்
உதுக்குத்தானோ கோடுபோட்டு உன் உறவைக்
கூட விட்டுவந்தாய்
எதுக்கு எதுக்கு என்று கேட்க அதுக்கு அதுக்கு
என்று சொல்லி
ஐயஹோ.......இதுக்குத்தானோ பாடுபட்டாய்......?

லூசும் லூசும் லூசாகுது !


அன்பே நீ என்னை லூசு என்று சொல்லும் போது நான் நம்பவில்லை..
ஆனால் இப்போ அதை என்னால் நம்பாமலும் இருக்க
முடியல்லை..
இல்லை என்றால் நீ என் தேவதை என்று சொல்லி
தினம் தினம்..
உன் புகைப்படத்தை பசும்பாலில் குளிப்பாட்டுவேனா...???

அவள் நனைகின்றாள் நான் கரைகின்றேன் !



மழையில் நனைகின்றாள் என் மைனாக் குஞ்சு
அதை கண்டதும் தொங்குதே என் மனது பிஞ்சு
பக்கதில் சென்று தொட்டேன் அவள் மேனி பஞ்சு
தொட்டதால் என் எண்ணத்தில் ஊறுதே நஞ்சு
ஐயோ என் மனசு சொல்லுதே அவளை கொஞ்சு

இல்லை என்றாள் கெஞ்சு மறுத்தால் நீ மிஞ்சு...
பட்டாடை உன் மேனியை ஒட்டி உரசயில் நான்
பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவன் போல் ஆனேனடி
மழையில் நனைவது நீயடி என் மனதில் ஏன் தீயடி.?

Monday, 10 December 2012

மாற்றங்களும் தருணங்களும் மாலையானது !



மனிதனின் வாழ்வினில் மாற்றங்கள்
மறுக்கமுடியா மந்திரம் என்பது
தடுக்கமுடியா தருணங்கள் ஆகுதே
மனதினால் மண்டியிட்டாலும் அதன்
சண்டித்தனமோ குறைவதும் இல்லை,

பக்தனும் இங்கே பித்தனாவான்
பித்தனும் இங்கே சித்தனாவான்
உற்றானும் இங்கே மாற்றானாவான்
வேற்றானும் இங்கே பற்றானாவான்
கரும்பான குறும்பு செய்பவனும் இங்கே
எறும்புபோல் கூனிக் குறுகுவான்
விருந்தாக கிடைத்த அன்பும் இங்கே
மருந்தாக மாறும் போது இரும்பான
உள்ளம் கூட வருந்தாமல் போவதுண்டோ
ஏன் இந்த நிலையென்று யாரிடமோ
நான் கேட்டால். உன் சொந்த நிலை
இதுவோ என்று கைகொட்டி சிரிக்கின்றார்
ஐயோ என் கண்கள் கலங்கி நிற்கின்றேன்
எனை காப்பாற்ற யாரும் உண்டோ.......???

அன்பில் பூத்த அழகு மலர் !



குத்துவிளக்கே என் குலமகளே உன்
நாமம் தினம் நான் உரைப்பதினால்
என் நாவூறும் உமிழ்நீரும் பேரின்பம்
கொள்ளுதடி கர்வமாய் முறைக்குதடி...
பட்டுமேனி கட்டழகி சிட்டு உன்னை
கண்ட கண்கள் கட்டத்த காளைபோல்
கட்டளையை மீறுதடி..
கருமுரல் கூந்தலழகே கருவப்பழ உதட்டழகே
கொத்தித்தின்னும் விழியழகே கொக்கரிக்கும்
கழுத்தழகே
குத்தரிசி சிரிப்பழகே குயில்கீதப் பேச்சழகே
திகட்டாத இடையழகே கோலம் போடும்
நடையழகே
நாகதாளி பாதழகே நாவூறும் அவளழகே
அழகே அழகே இது அழகே, அழகான
அழகே இவள் அழகே, என் முட்டைகண்ணியே
கொட்டைப்பாக்கே,.......... மன்மதனும் பசியாற
மாங்கனிகள் தாங்கிநிற்கும் தேவதையே
இதையெல்லாம் தாண்டியதே உன் அன்பழகே
இதுதான்டி என் உயிரில் கலந்த பேர் அழகே... !!!