காதல் கைதி
முதல் முறை உன்னாலே
மனசுக்குள் துடிக்கிறேன்
செந்நீரில் மை எடுத்து
கவிதைகள் படைக்கிறேன்
கனவுடன் போராடிக்
கடைசியில் தோற்கிறேன்
நினைவுடன் உறவாடி
கண்ணீராய் வடிக்கிறேன்
காதல் எனும் நாடகத்தில்
கைதியாய் நடிக்கிறேன்
முடிவினில் நான் மட்டும்
கண்கலங்கி நிற்கின்றேன்
சாபமிட்டது யார் என்று
சாமியை கேற்க்கின்றேன்
பன்னீரில் குளித்தாலும்
வென்நீராய் கொதிக்கிறேன்
மறுபடி நீ வந்து ,,,,,எனை
உயிர் இட்டு அணைப்பாயா
புதுஜென்மம் கொடுப்பாயா ..??
No comments:
Post a Comment