Sunday, 24 January 2016

பழமையிலும் புதுமையானது தமிழ்

என்ன எழுதுகின்றேன் நான் என்னை
எழுதுகின்றேன் உன்னை தான் நான்
நினைத்து உண்மை எழுதுகிறேன்

கவிதை எழுதிகின்றேன் நான் உனை
...
என் கவித்தாயே நீ என்று கவிதையாய்
எழுதுகின்றேன் என் கவிதையே...

புதுமை நீ என்று புது மையால் எழுதுகிறேன்
பழமை நான் என்ற வளமை வேண்டாமே
கடமை எனக்குண்டு நீ கொடுமை எண்ணாதே

சிலைகள் வடிக்கின்ற கலைகள் எனக்கில்லை
கொலை நீ செய்தாலும் விலை நான் போகேனே
தலைகூன மாட்டேன் மலைபோலே தடுக்காதே

என் தமிழே நீ இன்றி என் தாகம் தீர்ந்திடுமோ
நான் தனிமையானாலும் உன் மொழியில்
வாழ்ந்திடுவேன் தமிழே என் துணையாக !

ஓவியம் பேசும் காவியம்



இடிந்து போகாதே என்னவனே என்றும்
இமைபோல் இருப்பேன் உன்னுடனே

உயிராய் உனக்குள் நான் இருந்து
உடைந்து போக விடமாட்டேன்

...
கடந்து போகும் கவலையெல்லாம்
தொடர்ந்து நீயும் நடை போடு

தாரம் என்று நினைக்காதே, தங்கைக்கு
நான் தாயுமாவேன் கலங்காதே

வரதச்சனை பிச்சைகேட்டு வருவோர்க்கு
என் வீட்டில் கொடுத்த சீதனச்சீர் மிச்சம்
இருக்கு வருந்தாதே.!

Monday, 18 January 2016

வியர்வை துடைத்த முந்தானை


உன் கண்களில் தொட்டெடுத்த
கண்ணீர்த்துளிகள் இதழ்களில்
காயவில்லை

உன் கன்னம் அணைத்தெடுத்த ...
என் நெஞ்சில் உன் வாசம்
போகவில்லை

உன் கூந்தல் துளைத்தெடுத்த
விரல்களில் நடுக்கம்
தீரவில்லை

நம் உணர்வில் பெருக்கெடுத்த
வெள்ளத்தின் அலைகள்
ஓயவில்லை

என் வியர்வை துடைத்தெடுத்த உன்
முந்தானை என் தோளில் விழுந்த
பூமாலை.,!
 

புளுவாய் துடிக்கும் மனது

விறித்திகெட்டவன் வீட்டுக்குள்ளே
கருத்து சொன்னவன் காலமானான்....
அந்த
போக்கணம்கெட்டவன் கல்லறையில்...
இந்த
நாக்கணம் புளுவுக்கு என்ன வேலை.!

கனவை கலைத்த சேவல்


பற்றிய கைகள் ஒத்திகை பார்க்க
பொத்திய இதழ்கள் முத்திரை பதிக்க

குவிந்த விழிகள் வாளெனக் கிழிக்க
கூரிய மாங்கனி தேன் கனிகளாக...

சங்கினக் கழுத்தில் வெண்பனி பூக்க
மெல்லிய இடைகள் மெத்தை விரிக்க

செவ்வாழை தண்டுகள் போர்வைகளாக
மல்லிகை வாசம் மனதை துளைக்க

மன்மதக்கலையில் மங்கை சிவக்க
மானிடப்பிறப்பை மன்னவன் மறக்க

கூவிய சேவல் தூக்கத்தை குழப்ப
கொதித்தெழுந்தேன் என்ன கொடுமை !
 

வலியை ரசிக்கும் வானரம்

வாழ்ந்து கெட்டவன் வீழ்ந்து படுக்க
வீண்பு பிடித்தவன் நோன்பு இருக்க
சோர்ந்து போனவன் சோகத்திலே
புகுந்து விளையாடினானாம்
புண்ணியவான்.!

Saturday, 16 January 2016

வாழ்க்கையே கரணம்



இருப்பதோ மண்ணில் பறப்பதோ  விண்ணில்

நினைப்பதோ கோடி கிடப்பதோ கூனிக் குறுகி

கேட்பதோ ஆயிரம் கிடைப்பதோ அற்பம்

வார்த்தையில் தோரணம் வாழ்க்கையே கரணம்

எத்தனை எத்தனை அவலம் இதற்கு பின்னும் மரணம் !

பொட்டு வைத்த சிட்டு

உன் அன்பை கிள்ளி எந்தன் நெஞ்சில்
தொட்டு வைக்கின்றாய்

என் உயிரை அள்ளி உந்தன் வகிட்டில்
பொட்டு வைக்கின்றாய்

என் உணர்வில் ஏன் தான் தள்ளி நின்று
கொள்ளி வைக்கின்றாய்

எதற்கு இனியும் கள்ளி என்னை மேலும்
விட்டு வைக்கின்றாய் ..

உண்மை இல்லா உரிமை


எங்கு பார்த்தாலும் ஒரே குளறல்
எல்லாமே வெறும் சாடல்,..ஏன்
தான் இந்த உளறல்.......... ?

அன்பில் இல்லை தூய்மை
காதலில் இல்லை உண்மை

உறவில் இல்லை உரிமை
நட்பில் இல்லை நேர்மை

வாழ்வில் இல்லை இனிமை
செயலில் இல்லை கடமை

பேச்சில் மட்டுமே திறமை
பெயரில் வாழுது பெருமை

அப்பப்பா எத்தனை வறுமை
எல்லாமே இங்கே வெறுமை

இது தான் இப்போ நிலமை
எதற்கு இந்தக் கொடுமை ?

பரிகாரம் சொல்லும் அதிகாரம்

ஜகதலப்பிரதாபன் ஜென்மத்தில் நான் இல்லை
அகலிகை அம்சத்தில் அமைந்தவள் நீ இல்லை

அகராதி கற்பிக்கும் அதிகாரம் இல்லேனும்
பரிகாரம் செப்பிக்கும் பக்குவம் உண்டேடி

பகலவன் வருகை முன் பரவசம் கொள்ளடி
பால்குடம் ஏந்தி எனை பற்றிக்கொள்ளேண்டி

சுடரொளி விழிகொண்டு ...... நீ சுட்டென்னை எரித்தாலும்
மடல் வாழைத்தண்டோரம் மடியாமல் நான் வாழ்வேன்

கொடையான உன் மேனி படியாமல் போனாலும்
தடையேதும் இல்லாமல் விடை கூறி மகிழ்வேனே !

என் குஞ்சு நிலவே


மஞ்சம் உன் மடி இருக்க
தஞ்சம் என நான் கிடக்க
நெஞ்சம் அதில் படபடக்க
வஞ்சம் எதற்கடி

கொஞ்ச நேரம் உன்னை
கொஞ்சவா... இல்ல
கொஞ்சும் நேரம் என்னை
கொல்லவா

அஞ்சும் வேளை உன்னை
கெஞ்சவா ......இல்ல
கெஞ்சும் வேளை என்னை
மிஞ்சவா

பஞ்சு போன்ற உன் இதழால்
பிஞ்சு முத்தங்கள் கொடுத்து
நஞ்சூட்டுவது நியாயமா என்
குஞ்சு நிலவே கூறம்மா...???

உணர்வும் உறவும் உபத்திரமா

தலையாயக் கடமைகள் தலை போகும்
விடையமா உயிரான உறவுகள் உபத்திர
ஜென்மமா

அன்பான உணர்வுகள் அவமான சின்னமா
உரிமை பேச்சுக்கள் ஒருவகை வன்மமா

பல கேள்விகள் எனக்குள்ளே விடைகள்
ஏதும் கிடைக்கவில்லை

விழிகளை மூடி தடைகளை உடைக்கமுன்
விழிநீர் வடிந்து கேள்வியும் கரைந்ததே !!!

இப்படிக்கு இதயம்



என்னை கண்டவர்களிடமும் கண்டபடி
தூக்கிக்கொடுத்துவிடாதீர்கள் , எனக்குள்
அன்பு காதல் பாசம் எனும் அளவில்லாப்
பொக்கிஷங்கள் நிறைந்திருப்பதால், நான்
மிக கனத்துடன் தான் இருப்பேன் ஆகையால்
கொண்டு சுமக்க முடியாதவர்கள் கீழே போட்டு
உடைத்து விடலாம் அப்படி போட்டு என்னை
உடைத்து விட்டால் அந்த வலியை என்னால்
தாங்கிக்கொள்ளவே முடியாது..!!!
.
இப்படிக்கு இதயம் 

லூசும் சுகமே அவள் சொன்னால்


நம்மை யாரேனும் நீங்க முட்டாளா அறிவில்ல
என்று சொல்லிவிட்டால் ரொம்ப கோபத்துடன்
எப்படி திருப்பி அடிக்கலாம் என்று காத்திருக்கும்
நாம், எங்களுக்கு பிடிதவர்கள் போ(டி)டா லூசு
என்று திட்டினால் கூட இந்த உலகத்தில் நீங்கள்
தான் மிகவும் திறமைசாலி என நமக்கு ஏதோ ஒரு
மாபெரும் விருது வளங்கியது போல் வானத்தில்
பறக்கின்றோமே அது ஏன்............???

தடை போடும் வலிகள்


செதுக்கி வைத்த சிற்பத்தில்
நொருங்கி விழுந்த துண்டுகள்
மரத்துபோன நெஞ்சில் உரத்து
கீறிய கோடுகள்

பொறுக்கி எடுக்கும் போதினில்
கையில் கிழித்த காயங்கள் கனத்த
உள்ளங்கள் உருகினால் கண்களில்
சிந்தும் குருதிகள்

கடக்க எண்ணி நடக்கையில் தடக்கி
விழுத்தும் நினைவுகள்....எழுந்து
செல்ல முனைகையில் கொழுக்கி
போடும் வலிகள் !

அனாதையானது அன்பும் பண்பும்


கண்களில் காட்சிகள் மங்கிப்போச்சு
கற்பனை வளமோ வற்றிப்போச்சு
சரித்திரம் கூட தரித்திரம் ஆச்சு
நட்பினில் இன்று நாணயம் போச்சு
நல்லது கெட்டது மறந்து போச்சு
அன்பும் பண்பும் அனாதை ஆச்சு
பணமும் பதவியும் வல்லமையாச்சு
இல்லாமை இயலாமை நிறைஞ்சுபோச்சு
பொல்லாமை பொருளாமை ஆட்சியாச்சு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ,இங்கே
விதைப்பதுயாவும் முளைத்திட்ட போதும்
வளர்ப்பவன் ஏனோ ........................................!!!

இப்படிக்கு உள்ளம் !

உண்மையாக காதலித்தேன்
அன்பு கிடைக்கவில்லை
பொய்யாய் அன்பாக நடித்தேன்
காதல் கிடைத்தது

இப்படிக்கு உள்ளம் !

நான் கயவனான காதலன்


உருகிடும் உள்ளம் உணராது
போனால் பழகிடும் நெஞ்சம்
பரிதாபம் ஆகும்

வலிகளை சுமந்து வாழ்வது
பாவம் உயிரினை நீக்கினால்
தீர்ந்திடும் சாபம்

கடவுளாய் நினைத்து கைகூப்பி
நின்றேன் கருணையே நீ என்று
தவம் ஒன்று செய்தேன்

அன்பினைத் தேடிடும் பித்தனாய்
அலைந்தேன் கயவன் நீ என்று வரம்
ஒன்று தந்தாய்

ஏக்கத்தில் என்றேனும் என்னுயிர்
மாண்டால் தாக்கத்தில் உன் நெஞ்சம்
தடுமாறி மீண்டால்

மோட்ஷம் பெறாதவன் கல்லறையில்
சிறு பூச்செண்டாவது வைத்து ஒருதுளி
கண்ணீரை தூவிச்செல்.!!!

வேதாளத்தின் கையில் பூமாலை

குடிகாரன் கைகளில் கடிவாளம்
தலை கூனி நிற்குதே பல தாரம்
இதுவே சிலர் வாழ்வில் தாராளம்
அதை அறிந்தவர்களோ ஏராளம்
இது தெரிந்தும் மீண்டும் மீண்டும்
பலர் வாழ்வினில் முருங்கைமரம்
ஏறுகின்றதே ஏன் இந்த வேதாளம் ?

குஞ்சு நிலவே


கொஞ்சி மொழி பேசி பிஞ்சு
விரல்களால் கஞ்சி வடிக்கும்
என் குஞ்சு நிலவே

நஞ்சு உண்ட மழலை போல் என்
இதயம் தொஞ்சு போகுதடி

உனை கெஞ்சி கேட்கின்றேன்
வஞ்சி உன் பாசத்தால் எனை
மிஞ்சி விடாதே..!

கெஞ்ச வைக்கும் வஞ்சி


கண்களில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை நெஞ்சில் குறைந்து விடும்
கற்பனை நெஞ்சில் குறைந்து விட்டால்
கவர்ச்சி உணர்வில் கரைந்து விடும்
கவர்ச்சி உணர்வில் கரைந்து விட்டால்
காதல் காற்றில் கலைந்து விடும்....!

சட்டம் இல்லா சம்பிரதாயம்

எட்டு எட்டாய் கணக்கு போட்டேன்
கட்டம் இதற்கு எதற்கு என்றாய்
மட்டுப் படுத்தி பேசாதே என்றேன்
விட்டு கொடுக்க இடமில்லை என்றாய்
தட்டில் போட்டு தாரை வார்த்தேன்
தொட்டுப் பார்த்து இதுவா என்றாய்
கட்டு கட்டாய் கொட்டிக் கொடுத்தேன்
பெட்டிக்குள்ளே பாம்பாய் சுருண்டாய்
கட்டில் மேலே சுகத்தைத் தேடிக்
குட்டி போட்ட நாய் போல் நிற்கும்
தட்டுக் கெட்ட உனக்கு சமைத்துப்போட
சட்டி பானை வாங்க வேண்டும்,.. உன்
சட்டைப் பையில் ஏதும் உண்டா, இல்ல
எனை உனக்கு கட்டிக் கொடுத்த வீட்டில்
பாட்டன் பாட்டி கொட்டப்பெட்டியில் ஏதும்
இருக்கா என்று பார்க்க சொல்லவா.......???

தலைக்கனம் இல்லாத இலக்கணம்

சங்கீதம் என் கவிதை நடையில் உள்ளது
இங்கிதம் என் கருவில் உயிராய் துள்ளுது
சிலர் கண்களில் ஏனோ காமம் மின்னுது

இலக்கணம் என் கவியில் இல்லாது போகலாம்
ஆனால் தலைக்கனம் என் தமிழில் தேடலாம்
இதற்கு மாற்றுக் கருத்திருந்தால் நீ கூறலாம்.. ?

வீட்டுக்கு வீடு வாசல்ப் படி



வீட்டுக்கு வீடு வாசல்ப் படி
அங்கேயும் சிலர் குளறுபடி
பலருக்கு அதுவே அத்துப்படி
எதையும் வாழ்வில் கற்றுப்படி

தீவெட்டி கைகளில் தீப்பந்தம்
தீக்கிரையாகுதே பல ஒப்பந்தம்
பூமிக்கு இதில் என்ன புண்ணியம்
கண்மூடிச் செல்வதா கண்ணியம்

ஒருவேளை உணவுக்கு பலவேலை
அரைவயிற்று கஞ்சிக்கோ வழியில்லை
இது தானே இப்போது இங்குள்ள நிலை
எப்போதுதான் தீரும் இந்தத் தொல்லை ?

காயம் கொண்ட இதயம்

நல்லவனாக நாம் இருந்து நடந்ததெல்லாம்
கூறிவிட்டால் நல்லவரே வாழ்க என்று நாடு
நம்மை வாழ்த்துமென்ற நம்பிக்கை இல்லையடி
நான் சொல்வது உண்மையடி

கவித்துவமாய் கதை சொன்னால் இங்கே கைதட்ட
பலர் உண்டு காயம் கொண்ட இதயத்தை கவனிக்க
யார் உண்டு

வீணை அழுதால் இசை என்பார் விடியும் வரைக்கும்
சுவை என்பார்

உள்ளம் அழுகுது தன்னாலே உறங்கம் கொள்வது
என்னாளோ ???

பழகிப்பார் பாசம் புரியும்

நாம் ஒருவருடன் நெருங்கி பழகாத வரைக்கும்
தான் அவர்களுக்கு நாம் அதிசயம் நெருங்கிப்
பழகிவிட்டால் நாம் அவர்களுக்கு அலட்சியம் .

நீ அதிசயமாக இருக்க விரும்புகின்றாயா இல்ல
அலட்சியமாக இருக்கப்போகின்றாயா என்பதை
நீயே முடிவு செய்..?

பத்தரமாத்து தங்கம்


பூவே எனக்கு புரியாத மொழியில்
புன்னகை செய்கின்றாய்

பாவை உன் மடியில் பாலகனாக்கி
பாவி ஏன் வதைக்கிறாய்

காலையில் வளரும் கதிரவன் போலே
கண்களில் மின்னுகிறாய்

மாலையில் உலாவிடும் சந்திரன் போலே
காளை நான் தேய்கிறேன்

மழையினில் நனைந்த மாந்தளிர் போலே
சேலைக்குள் ஒழிகின்றாய்

மலையிலே உறைந்த பனித்துளி போலே
உருகி நான் கரைகின்றேன்

கார்த்திகை மாதத்து காந்தள் மலர் போலே
என் கவிதைக்குள் நுளைகிறாய்

மார்கழி மாதத்து கார்முகில் போலே நான்
கவிமழை பொழிகிறேன்

தை மாதத்து தாமைரைப் பூபோலே தத்தை
நீ மெத்தையில் தவழ்கிறாய்

சித்திரை மாதத்து கத்தரிவெகுளி போலே
வியர்வையில் குளிக்குறேன்

என் பத்தரமாத்து தங்கமே நான் நித்திரை
பாயினில் தினம் பல சித்திரம் வரைந்திட
உன் ஒற்றுமை வேண்டுமே.!

முத்தமும் யுத்தமும்

இங்லிஸ் முத்தம் கொடுத்தால்
தமிழிலே சத்தம் போடுகின்றாய்
தமிழிலே நித்தம் கொடுத்தால்
மலயாளத்தில் யுத்தம் புரிவாயா ?

எல்லாமே பிரச்சினை


இங்கே எல்லாமே ஒரே பிரச்சினை
என்பதே ஒரே பிரச்சினை
இந்த ஒரே பிரச்சினையால் எல்லாமே
ஒரே பிரச்சினையாக இருப்பதுதான்
ஒரே பிரச்சினை
இதை ஒரே பிரச்சினையாக பார்த்தால்
எல்லாமே ஒரே பிரச்சினைதான்
இந்த ஒரே பிரச்சினையை ஒன்றும்
இல்லாமல் ஆக்குவது எப்படி என்பதை
மட்டும் ஒரே பிரச்சினையாக பாருங்கள்
எல்லோருக்கும் நல்ல புரிந்தது தானே ..?

நினைவுகள்


மறந்து போக நினைக்கின்றேன் உன்னுடன்
தொடர்ந்து சென்ற நினைவுகளை

கடந்து செல்ல முனைகின்றேன் என்னை
விட்டுப் பறந்து போன உறவுகளை

இடத்துக்கு இடம் தடம் புரளும் இதயங்களுடன்
பயணம் செய்வது சுலபம் என்றால்

நாம் செல்லும் எந்தப் பாதையும் கடினம் அல்ல !

சதிராடும் சக்களத்தி


வாடி என் சக்களத்தி வழி தவறி வந்தாயோ
பொத்தி வைத்த மறுகணமே ஒத்திகைக்கு
ஆள் தேடி கொத்திச் செல்ல வந்தாயோ
கொள்ளிக் கட்டை கிடக்குதடி

மாமிசத்தை நான் மறந்து மாமனையே
தான் நினைத்து மாரியாத்தா முன்னாடி
மடியேந்தி தவம் இருந்து பெற்ற வரம்

நான் கொத்தாக பூத்திருந்த என் அத்தான்
மனதினிலே உன் பொத்தானை திறந்து
வைத்து பித்தாக்க நினைத்தாயோ

முத்தாக அவர் நெஞ்சில் சொத்தாக நான்
இருக்க உன் முந்தானை விலக்கி விட்டு நீ
பந்தாடத் தான் முனைந்தாயோ

தொண்ணூறு நாள் அவரை தொடாமல் நான்
இருந்ததினால் வல்லூறு போலே வந்து உன்
கள்ளூறும் விழிகள் கொண்டு அள்ளிச்செல்ல
பார்த்தாயோ ...................வாடி என் சக்களத்தி
கொள்ளிக்கட்டை கிடக்குதடி..!

ஆச்சியும் பேத்தியும் சூழ்ச்சியில்

ஆட்சி புரிவதில் பல சூழ்ச்சி நடப்பதாய்
சாட்சி இருக்குதே அந்த காட்சி பார்த்தும்
வாய் பேச்சில் கிடக்குதே இதை அன்று
என் ஆச்சி சொன்னாங்க அதை இன்று
நான் சொல்கின்றேன் இதையே நாளை
என் பேத்தி சொல்வாளோ ...................???