Thursday, 22 March 2012

ஏன் என்னை வாட்டுகிறாய் ***


படபடக்குது இதயம் அவள்
என்னை பார்த்து சிரிக்கையிலே
கிடுகிடுக்குது தேகம் அவள்
நேரில் வந்து நிற்கையிலே
முறுமுறுக்குது சருமம் அவள்
பார்வை என்மேல் விழுகையிலே
துடிதுடிக்குது புருவம் அவள்
சேலை கட்டி நடக்கையிலே
நடுநடுங்குது பாதம் அவள்
பேரைச் சொல்லி அழைக்கையிலே
தொளதொளக்குது உள்ளம் அவள்
மேனி கொஞ்சம் வளைக்கையிலே
கலகலக்குது எண்ணம் அவள்
விட்டுச் சென்ற நினைவினிலே
வெடவெடக்குது பருவம் அவள்
கட்டுடலை நெளிக்கையிலே
எனக்கு புத்துணர்ச்சி பிறக்குதடி
உந்தன் மொத்த அழகை ரசிக்கையிலே !

No comments:

Post a Comment