Monday, 30 March 2015

பருவத்தில் எத்தனை நாணம்

புருவம் உயர்த்திப் பருவம் காட்டும்
உருவம் கண்டு மலைத்தேன் அவள்
அருகில் சென்று தொட்டுப் பார்த்தால்
விரல்களில் சுவைக்கும் மலை தேன்
மூச்சிலே காமபாணம் பேச்சிலே காதல்...
பாணம் கண்கள் வீச்சிலே நாகபாணம்
சிரிப்பிலே பூவாணம் உதட்டிலே சோம
பானம் இடையிலே பதுபாணம் நடையிலே
விண்ணாணம் வந்து நின்றாள் முன்னாடி
அன்றில் இருந்து எனைக் காணோம்..........!!

புத்தியும் யுத்தியும் சக்தியாகும்


வடித்தாலும் வளியாத சக்தி வேண்டும்
குடித்தாலும் குறையாத பக்தி வேண்டும்
மடித்தாலும் மடியாத புத்தி வேண்டும்
வெடித்தாலும் பிரியாத முக்தி வேண்டும்
இடித்தாலும் உடையாத யுக்தி வேண்டும்...
பாசத்தை கண்டு நீ தொழ வேண்டும்
பண்பாலே மனங்களை நீ ஆளவேண்டும்
பல்லாக்கில் நீ போனால் புவியே அழவேண்டும் !

பெண்ணே பெண்ணுக்கு அடிமை

பெண் அடிமை ஒழிய என்று முரசு கொட்டும் கண்மணிகளே
உங்கள் அடிமை என்னவென்று உனக்குத்தான் தெரிந்ததுண்டோ
மருமகளாய் இருக்கையிலே மாமியாரைத் திட்டுகின்றாய்
நீயோ மாமியார் ஆனதுமே மருமகளை குட்டுகின்றாய்
வரதட்சனை கேட்பாருடன் வாழ நீ மறுத்தாயென்றால்...
வாலிபரின் வாட்டத்தை வானளவில் பார்த்திடலாம்
ஏச்சுப் பிழைப்பவரை எஜமானாய் ஆக்குகின்றாய்
தாலி கட்டுமுன் அவனோ தன் தாயைப் பார்க்கின்றான்
தாம்பாழத்தில் வைத்தபின் தலையை ஆட்டுன்றாள்
சாமியாய் இருந்து நீ அவளுக்கு சக்தியை கொடுக்காமல்
மாமியாய் இருந்து நீ ஏனோ மங்களம் பாடுகின்றாய்
மறுமகள் இவள் என்று மனதினில் நீ கொள்ளாது
மருமகள் என்று நீயோ மண்டியிட வைக்கின்றாய்
கந்துவட்டிக்கு கடன் வாங்கி கணவன் உனை காத்திட்டாலும்
திண்டு கெட்ட மனிதன் என்று கண்டபடி திட்டுகின்றாய்
மாமியார் சாமியாடுறாள் மருமகள் பாவியாகின்றாள்
ஐயகோ இங்கே யாரடா அடிமை யாருக்கு இங்கு அடிமை ???

கள்ளி தள்ளிவிட்டு கொள்ளிவைக்கின்றாள்


தள்ளித் தள்ளி விடுகின்றேன்
எனை தாவிப்பிடிக்கின்றாள்
அள்ளி அணைக்கப்பார்க்கிறேன்
என்னை தள்ளி விடுகின்றாள்
கள்ளி எந்தன் நினைப்பினிலே...
ஏனோ கொள்ளி வைக்கின்றாள்
துள்ளி எழும் உணர்வுகளை
ஏன் தான் கிள்ளி எறிகின்றாள்
வெள்ளி முளைத்த வேளையிலும்
நான் பள்ளி கொள்ளவில்லை
தள்ளி விட்ட காரணத்தை........நீ
சொல்லி விட்டுப்போ வெளியே.. !!!
 

சாவை தடுக்குமா சாத்தான் ஓதல்


சாவைத் தடுக்கச் ஜாதகம் பார்க்கிறாய்
சாத்தானோடு தான் சமரசம் பேசுறாய்
பாவமூட்டையை பல்லாக்கில் ஏற்றுறாய்
பாசத்தைப் பார்த்து பாசங்கு என்கிறாய்
நேசம் போலேவே வேஷம் போடுறாய்...
வேப்பமரத்தைத் தான் சாமி என்கிறாய்
புளியமரத்தைப் பேயென்று சொல்கிறாய்
புத்தி கெட்ட மானிடனே,,,,,,,,,,,,,,,,, நீயோ
வீட்டை கொளுத்தும் ராசாவுக்கு ,,, நெருப்பு
எடுத்துக் கொடுக்கும் மந்திரியாய் இருக்காதே
பானை செய்யும் குயவனுக்கு மண் எடுத்துக்
கொடுக்கும் மனுசன இருந்தாலே போதும்,, !!!
 

சொர்ப்பனத்தில் தேன் சுவை

வான் அலையில் நீந்தி வந்தாள்
 மீனாக 
 மின் வலையில் பிடித்தேன் நான்
 துள்ளினாள் மானாக
 கொஞ்சம் தள்ளி வைத்து பார்த்தேன்
துடித்தாள் புழுவாக
 அள்ளி எடுத்தேன் கையில் அவளை
 மெல்லப் பூவாக
 கட்டி அணைத்து தொட்டு ருசித்தேன்
 வண்டாக
 எட்டிப் பிடித்தேன் முட்டிச் சிவந்து பட்டு
 சுவைத்தாள் தேனாக
 கட்டில் அமர்ந்து மொட்டு விரிந்து கொட்டி
 கிடந்தாள் முத்தாக
 அலறி எழுந்தேன் எல்லாம் கனவாக 
 ஐயோ ஐயோ 
 இது என்ன... பொய்யோ.... பொய்யோ.. 
தவித்தேன் துடித்தேன் தனியாக ......... ! 

பதில் இல்லாக் கேள்விகள்


உடை மாறிய அளவில் பெண்
நடை மாறவில்லை
இடை மெலிந்த அளவில் அவள்
தடை ஒளியவில்லை
படை கொண்டு வந்தும் ஏன்...
விடை காணவில்லை
இதற்கு காரணம் தான் யாரு, உனை
படைத்த சாமியைத் தான் கேளு
பதில் சொன்னால் என்னிடம் வந்து கூறு
இல்லை கல்லென்று நீ சொல்லி ஓடு...!!!
 

உண்மையில் என்னால் முடியல்ல

அதுவும் புரியல்ல எனக்கு இதுவும் புரியல்ல
அதுவா இருக்குமோ இதுவா இருக்குமோ
எதுவும் புரியல்ல அதுதான் என சொல்லவும்
முடியல்ல இதுவாத்தான் இருக்கும் என்று
எண்ணவும் முடியல்ல அப்போ எதுவா இருக்கும்...
என்று குழம்பிக்கவும் விருப்பம் இல்ல, எதுவா
இருந்தால் எனக்கென்னவென்று இருக்கவும்
முடியல்ல கூட்டிக்கழித்துப் பார்த்தேன் விடையும்
சரியில்ல சரி கேட்டுத்தெரிந்துக்கலாம் என்றால்
மனதும் கேட்கல்ல சரி கேட்காமல் பேசாம இருடா
என்றால் அதுவும் முடியல்ல இப்போ நான் என்ன
பண்ணுவது என்று எதுவும் புரியல்ல அப்போ
இதுக்கு என்ன தான் வழி அதுவும் தெரியல்ல
சீ என்னடா வாழ்க்கை என்று விடவும் முடியல்ல
சரி சரி விடு எல்லாம் நன்மைகே என்று மனதை
ஆற்றிக்கவும் முடியல்ல ஐயோஅப்போ இதற்கு
என்னதான் முடிவு என்று ஒன்றும் தெரியல்ல..!!!

நான் நல்லவன் இல்லை


என்ன கொடுமையடா,.. ஐயோ இதை நான் யாருக்கு
சொல்லி அழ.....???

ரொம்ப மோசமானவங்களுக்குள்ளேயே நான் ரொம்ப
முக்கியமானவன் என்று சொன்னால் யாருமே என்னை...
நம்புறாங்க இல்லயே..!

என்ன உலகமடா சாமி நீங்களாவது நம்புங்கப்பா.....!!!
 

ஓவியம் வரைந்தேன் காவியமானாள்


நான் அன்பெனும் தூரிகையால்
ஒரு ஓவியம் வரைந்தேன்
உன் விழியெனும் மொழியாலே
காதல் காவியம் என்கின்றாய்
நான் கனவென்னும் கற்பனையில்...
பல கவிதைகள் வடித்தேன்
உன் கருகொண்ட உணர்வாலே
காதலாய் வளர்கின்றாய்
கருத்துச் சொல்ல வந்தவளே, என்
இதயத்தில் கருவாகி நிற்கின்றாள்
மறுப்பு சொல்ல நினைக்கமுன்னே
என் மனதினை திருடிவிட்டாள்
கறுப்பாக இருந்தாலும் ரொம்ப
பொறுப்பாகப் பேசுகின்றாள்
நான் வெறுப்பேதும் காட்டாமல்
விழுந்துவிட்டேன் அவளிடமே
என் அன்பே எனதுயிரே இதைக்
கொஞ்சம் நீ கேளு ...................
சொந்தமென நீயிருந்தால் எனக்கு
சொத்துச் சுகம் தேவையில்லை
பந்தமெனெ நீ வந்தால் உன்
மடியே எனக்குலகம்..........!!!
 

வேகமும் மோகமும் வானத்தில் இல்லை

தேகம் சிலிர்ப்பதினால் தேடி அலைவதும்
மோகம் பிறப்பதினால் கூடித்திரிவதுவும்
என முணங்கித்திரியும் மூடன் எவனடா,
தாளம் இசைந்ததானால் ராகம் பிறக்கலாம்
தாகம் எடுப்பதானால் தண்ணீர் குடிக்கலாம்...
மேகம் கறுப்பதினால் வேகம் கிடைக்குமா
வானம் சிவப்பதினால் மோகம் பிறக்குமா
மூடன் கைகளில்தான் நியாயம் இருக்குமா 

என்று மலரும் இனிய வாழ்வு


யார் வந்து சொன்னாலும் ஏன் என்று
கேட்காமல் தலையாட்டி செல்கின்ற
மனநிலை மாறாதோ

எதற்காகச் சொல்கின்றார் என்று நீயும் ...
பாராது ஏமாந்து போகின்ற நிலை இங்கு
மறையாதோ

சதி ஒன்று செய்தாலும் விதி என்று
சொல்கின்ற மதி இங்கு சாகாதோ

சகதியாய் பாய்ந்தோடும் ஜாதியின்
சஞ்சலம் சாம்பலாய்க் கரையாதோ

வீண்புக்கு விலை போகும் விலையற்ற
மாந்தரின் விழிகளும் திறக்காதோ

கதியற்றுக் கலங்கிடும் ஏழையின்
வாழ்விலே பூமழை பொழியாதோ
புது யுகம் மலராதோ.
 

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகனே ?


அம்மா நான் வெளிநாட்டுக்குப் போறன்
கைநிறைய உழைச்சுக்கொண்டுவாறென்,
மாமிட்டை சொல்லிவை என் மச்சாள்
கவனம் எண்டு நான் வந்து கட்டுறன்
அதுக்கும் இதுக்கும் ஆசைப்பட்டாய் இப்போ ...
மதுக்கடைக்கு வாழ்க்கைப்பட்டாய்
உதுக்குத்தானோ கோடுபோட்டு உன் உறவைக்
கூட விட்டுவந்தாய்
எதுக்கு எதுக்கு என்று கேட்க அதுக்கு அதுக்கு
என்று சொல்லி
ஐயஹோ.......இதுக்குத்தானோ பாடுபட்டாய்......?

விசித்திரமான பாத்திரங்கள்


பத்திரமாக இருந்த பாண்டவர்கள் வாழ்வுக்கு
சூழ்ச்சி எனும் சித்திரம் வரைந்தான் சகுனி
அஸ்திரம் களைந்தாள் பாஞ்சாலி என்று அவள்
வஸ்திரம் களைய துடிந்தான் துரியோதனன்
உத்தமனாக இருந்தும் வித்தகனான போதும்...
மித்திரனாக மட்டும் நடந்து கொண்டான் கர்ணன்
மன்னனாக பிறந்தும் தர்மவழி நடந்தும் தனது
மனைவியையும் இழந்து நின்றான் தர்மன்
இச்செயல் அனைத்தும் உணர்ந்தும் எச்செயல்
வெல்லும் என தெரிந்தும் ஏன் கண்ணைமூடிச்
சந்தமின்றிச் சிரித்தான் (கிருஷ்ணன்) கண்ணன் ???
 

அம்மாவுக்கு எதற்கு கவிதை


அம்மாவுக்கு ஒரு கவிதை அம்மாவே
நீயே ஒரு கவிதை அம்மாவுக்கு எழுத
முடியுமா ஒரு கவிதை அம்மா என்று
சொன்னாலே போதும் ஓராயிரம் கவிதை !

அனைத்து அம்மாக்களுக்கும் என் அன்னையர்
தின நல் வாழ்த்துக்கள், அம்மா அம்மா அம்மா !

வேடிக்கையும் வேஷமும் அபிஷேகம் செய்யுது


கயவர்கள் கையிலே கலியுகம்
கண்மூடித் தூங்காதே மானிடம்
காணாமல் போயிடும் கோவணம்
உண்மையை கொல்லுது சாஸ்திரம்
பேய்களின் வாயிலே மந்திரம்...
சாமியின் சாட்டிலே உற்சவம்
சாமத்தில் நடக்குது தினம் தினம்
வேடிக்கை பார்க்குது ஒரு இனம்
வேஷம் தான் போடுது மறுதினம்
அபிஷேகம் செய்கிறாய் சாமிக்கு
அதிசயம் நடக்குதா பூமிக்கு.......
புரிந்தும் நீ நடிக்கிறாய் ஊருக்கு
பூக்கட்டிப் பார்க்கிறாய் வாழ்வுக்கு
வெள்ளைப்பூ வந்தால் தான் சுபிட்சமா
வேடிக்கை காட்டுறாய் வெளிச்சமா
சாவினைத் தடுக்குமா உன் சாமி
சாத்தியம் என்றாலே நீ ஆசாமி.. !!!
 

தேவாரம் பாடும் கானக்குயில்கள்


ஏழைக்கு ஒரு நீதியா ?


பணக்காரர்கள் தெளிக்கும் பன்னீருக்கு உள்ள
மதிப்பு
ஏழைகள் சிந்தும் கண்ணீருக்கு இல்லையே
அது ஏன்....?
உழைக்காமல் பிழைக்கும் மனிதர்கள் மத்தியில்...
இப்படி
பிழைக்காமல் உழைக்கின்ற மனிதர்கள் தான்
எத்தனையோ.....!
 

குழப்பம் தீர்க்க வா அருகே

பள்ளம் இல்லா என் உள்ளம்
வெள்ளம் எடுப்பது ஏனோ
கள்ளம் இல்லாம் உன் செல்லம்
கொள்ளையடித்ததினால் தானோ
குழப்பம் கொண்ட என் மனதில்...
விளக்கம் சொல்ல வா உடனே
பழக்கம் இல்லை நான் அழுது
முழக்கம் வேண்டாம் வா அருகே
வழக்கம் போலே தள்ளி நின்றால்
எனை அடக்கம் செய்யும் செய்திவரும் 

தென்னையும் என் அன்னையே

தலை விரித்து ஆடுறாள் தென்னை
அவள் வாழ்வதே நாட்டுக்குப் பெருமை
அவளை பார்த்தாலே கண்ணுக்கு பசுமை
உன் பால்குடித்து வளர்த்ததால் நானும்
உன் பிள்ளை ..என்னை உன் பால் ஊட்டி
வளர்த்ததால் நீயும் என் அன்னை...........!

காதலில் நாலு வகைகள்



காதலில் மூன்று வகைகள் உண்டு....!

1-பொழுதுபோக்குக்காக மட்டும் காதலிப்பது
2-பொழுதுபோகுதில்லை என்று காதலிப்பது
3-பொழுதுபோகுது என்பதற்காக காதலிப்பது...

ஆனால் நான்காவதாக ஒரு காதல் இருக்கின்றது
அந்த காதல் யாருக்கு எட்டுதோ அவர்களே இந்த
உலகத்தில் சுகவாசி.............

உன் காதல் எந்தமாதிரி என்பதை நீ யோசி ...!!!!

நீயும் நானும் வேறாக


நான் எதுவும் உன்னை கேட்கவில்லை
என்று என்னை ஏன் வதைக்கின்றாய்
நான் கேட்ட பின் ஏனோ புண்னகையை
மட்டும் பதிலாக்கி எனை மயக்கின்றாய்
நேற்று வரை நீ நீயாகவே இல்லை என...
நான் சொன்னால் மறுக்கின்றாய் இன்றில்
இருந்து நான் நானாகவே இல்லை என்றால்
ஏனடி லூசுபோல் இப்படிச் சிரிக்கின்றாய்.. ???
 

தூண்டில் போடும் முந்தானை


தகதகவென்று தங்கம் போலே
பளபளக்கிறாள்.... என்
பகுத்தறிவை குழிதோண்டிப்
புதைக்கப்பார்க்கிறாள்
மினுமினுக்கும் பற்களாலே ...
விளக்கேற்றுறாள்.... என்
வீரத்தினை முந்தானைக்குள்
முடியப்பார்க்கிறாள்
துறுதுறுக்கும் விழிகளாலே
தூண்டில்போடுறாள்.... என்
துணையிவனே என்று கத்தி
கூச்சல் போடுறாள்
சிணுசிணுக்மும் பேச்சினாலே
கிறங்கடிக்கிறாள் ... என்
மேனியிலே மெழுகுவர்த்தி
ஏற்றிவைக்கிறாள்
படபடக்கும் இதழ்களினால்
பந்திவிரிக்கிறாள் ... என்
பக்கத்திலே வாவென்று
தந்தியடிக்கிறாள்....!!!
 

பொய் சொல்லி கொல்லாதே

பிடிக்காத ஒருவரை பிடிக்கும் என பொய் சொல்லி
நடித்து வாழவைப்பதை விட
பிடிக்கவில்லை என்ற மெய்யைச் சொல்லி துடிக்கவைத்து
கொல்வது மேல்

சேலை கட்டிய வெடிகுண்டு


இதயத்துக்குள் நுழைந்து கொண்டு தீ மிதிக்கிறாய்
தேகத்திலே எரிமலையை அள்ளி பூசிவைக்கிறாய்
கண்ணுக்குள்ளே கண்ணிவெடி கொண்டு சுற்றுறாய்
சேலைக்குள்ளே ஒழிந்து கொண்டு மாயம்செய்கிறாய்
காளை எந்தன் கட்டுக்குள்ளே நானும் இல்லடி கன்னி ...
உந்தன் கண்ணசைவில் நான் காணாமல் போனேண்டி ,
என் நாவறண்டு வார்த்தையின்றி முணுமுணுக்கிறேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் கவிதை என்கிறாய்
யாழெடுது மீண்டும் கீதம் உந்தன் மொழி அதை நான்
தினமும் கேட்பதினால் படைப்பேன் இனி பல கவி.....!
 

வியர்வைக்கு மருந்து விசம்



பாவத்தை சுமந்து கொண்டு காகத்துக்கு
சோறு வைத்தோமே
தர்மத்தை அகற்றிவிட்டுச் சட்டத்தை
விதைத்து விட்டோமே
புத்தியை பதம் பார்க்க கூர்க் கத்தியால்...
கீறிவைத்தோமே
நியாயத்தை அறுவடை செய்து பெட்டிக்குள்
பூட்டி வைத்தோமே
அன்பென்னும் ஆயுதத்தால் அடிமைகளாய்
ஆட்டிவைத்தோமே
வாழ்க்கையின் தத்துவம் வசதியில் உள்ளதென
சாத்திரம் சொன்னோமே
இதற்கு ஆத்திரப் படும் மனிதர்கள் எல்லோரும்
நாத்திகரென்றோமே
சாதிச் சடங்கென்று போர்வையைப் போர்த்திட்டு
சேற்றுக்குள் நிற்கின்றோமே
வேர்க்க உழைத்தவன் வாடி விழுவதை நாம்
வேடிக்கை பார்த்தோமே
நேற்று விதைத்தது இன்று முளைத்தது நாளை
விசமாகும்
இதற்கு மாற்று மருந்துகள் தேடிப்பிடிக்கனும்
சோற்றில் கலக்கமுன்னே..!
 

கழுத்தறுத்து கொல்லும் அன்பு

அன்பே அன்பே என்றேன் என்னை
அலட்சியப்படுத்திவிட்டாய் உனை
உயிரே உயிரே என்றேன் நீயோ
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இப்போ வாழ்த்துச் சொல்லி உன்னை ...
வாழ்த்துகின்றேன் நீ வசந்தமாய் வாழ்க
உன் விழியில் இருந்து நான் விலகிச்
செல்கின்றேன் உனக்கு என் உறவு
வலிக்குதென்பதால் உன் அன்பின்
ஆழம் புரிகின்றது உன் அவலம் எனக்குத்
தெரிகின்றது, உன் காலைச் சுற்றிய பாம்பு
இன்று தீயில் விழுந்து கருகுகின்றது
உயிரே உயிரே என்று அரவணைக்க
ஆசைப்பட்டேன் நீயோ அன்பே அன்பே
என்று இதயத்தில் குத்திவிட்டாய்
குத்தியது நீ என்பதால் என்னால்
கத்தியழக்கூட முடியவில்லை
அழுகையின் சாபம் எங்கே உன்னை
ஆள்கொண்டு விடுமேயென்று.. ஆனால்
நீயோ மத்தியிலே என்னை வைத்து
கழுத்தறுத்து சென்றாயே.... புத்திசாலி
நீ என்று இப்போ முழுமையாகப்
புரிந்து கொண்டேன் என்னை சுத்தி சுத்தி
வரவைத்து சத்தமின்றி கொன்றுவிட்டாய்.. !

முத்தம் பெறும் கைபேசி


கட்டிலில் போர்வைக்குள் நானும்
வெளியில் மொட்டை மாடியில்
நீயும், .... சத்தம் மட்டும் போடும்
முத்தம் கொடுக்கும் வேளை நித்தம்
தொல்லை செய்வதே தொலைபேசி...
வேலை, அலைவரிசையின்றி அழுத
நாள்கள் கோடி பாழாப்போன கணனி
படுத்துதேடி ஏண்டி இதற்கும் மேலே
என்னால் சொல்லமுடியாது போடி !

சரியும் சரி இல்லை நீயும் நானும் தப்பானால்


தப்பு செய்தாலும் அது தப்பு என்று தெரிந்தாலும் அதை தப்பில்லாமல் சரியாக செய்யவேண்டும் , இங்கே தப்பு எல்லாம் தப்பும் இல்லை சரி எல்லாம் சரியும் இல்லை சரியென நினைத்து செய்யும் செயல்களால் சிலர் சரியில்லாமல் போகின்றார்கள் தப்பாக செய்வதினால் பலர் நிம்மதி அடைகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் நான் தப்பும் செய்வேன் தவறாமல்,. சட்டபடி குற்றமாக இருக்கலாம் தர்மப்படி நியாயமாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை.......... என் நீதிமன்றத்தில் ஆண்டவன் என்று ஒருவன் இருந்து வந்து கேள்வி கேட்டால் அவனுக்கும் இதே பதில் தான் என் தீர்பில் சட்டப்புத்தங்கள் கிடையாது அறிவைக் கேட்டு தீர்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை இங்கே மனசே சாட்சி மகிழ்வே நீதி உள்ளமே நீதிபதி ... தண்டனையில் இருந்து கூட ஒருவன் தப்பினாலும் நிம்மதி இழந்து ஒருவரும் வாழக்கூடாது இதுவே என் வாதம்... இதற்கு நீங்கள் வைக்கலாம் விவாதம்......................!!! 

பிடிக்கவில்லை என்பது உனக்கு பிடிக்கவில்லை

உன்னை எனக்கு பிடிக்காது என என்னிடம்
சொல்லவதையே பிடிக்காத உனக்கு
என்னை எப்படி பிடித்திருக்கின்றது
ஓஓ... பிடிக்காது எனும் வாத்தையே
உனக்குப் பிடிக்காது என்பதால் தானோ
என்னை உனக்குப் பிடித்திருக்கின்றது !!!

கருப்பா சிவப்பா ஏன் இந்த ஏக்கம்


வணக்கம் எதற்கு இந்தக் குழப்பம்
வாழும் மனிதர்கள் எல்லாம் ஓட்டம்
காணும் மனிதர்கள் எல்லாம் ஏக்கம்
நாளைப்பொழுதை எண்ணி கலக்கம்
முன்நோக்கிக் கால்வைக்கத் தயக்கம்...
எட்டாத பொருள்மீதெல்லாம் மயக்கம்
கருப்பாக பிறந்து விட்டால் வெட்கம்
முயற்சி .மேல் படுத்து .நல் .உறக்கம்
ஏன் தானோ இங்கே இத்தனை மார்க்கம்
உள்ளத்தில் உள்ளதுதானடா சொர்க்கம்
இது புரியாமல் அலைகின்றாயே மானிடா
.......................................நீ எந்த வர்க்கம் ???
 

பூவை தலைகுனிய வைக்கும் பூவை


மாயம் கொண்ட இதயத்துக்கு அன்புச் சாயம்
பூச வந்தவளே
சேலை கட்டி நீ நடந்தால் என் தேகத்திலே
நிலநடுக்கம்
சாலையோரம் நீ நடந்தால் பூக்கள் எல்லாம் ...
தலை குனியும்
மாலை நேரச் சூரியனும் உறக்கம் கொள்ளா
அடம்பிடிக்கும்
வானில் மின்னும் நச்சதிரங்கள் உன் தோளில்
மாலையாக தவம் இருக்கும்
உன் மடியில் சாய்ந்து நான் படுத்தால் அந்தச்
சொர்கம் வந்து குடைபிடிக்கும்
 

மாண்டவர்களா பாண்டவர்கள் ?

பாண்டவர்கள் மாண்டவர்கள்,.. மாண்டவர்களாவே
இருக்காது மீண்டவர்கள் வந்ததின் நோக்கம் தான்
என்ன ஆண்டவனின் செயல் என்று தாண்டவம்
ஆடாமல் மானிடனின் நிலை நிறுத்தி நோக்குவோமே
இக்கூற்றுக்கு பதில் தெரிந்தால் தாக்கங்கள் ஏதுமின்றி
நோக்கங்கள் மட்டும் இங்கு கூறிவீரே ..........................!!!

காதலும் கடவுளும்


கடவுளும் காதலும் ஒன்றென்றால்....... !

கடவுள் எனக்கு விரோதி இல்லை
அவனை நான் காணும் வரை
காதல் எனக்குத் துரோகி இல்லை...
அவளை நான் காணும் வரை..,,

.................. இப்படிக்கு இதயம் !!!
 

போனது கசக்கட்டும் வருவது இனிக்கட்டும்


மனம் தடம் புரளும் போது இடம் கொடுக்காதே
உன் வட்டத்தை விட்டு என்றும் நீ விலகாதே
யடம் போலிருக்கும் முடம் என்று திட்டினாலும்
மனம் தளராதே குணம் மாறாதே
உனை விட்டு விலகி விடைபெறுவோருக்கு தடை...
போடாதே உன் கவலைகள் எல்லாம் சேமித்து
சடை போட்டுப் பூவைத்துக் குடை பிடிக்காதே
மடை திறந்து ஓடும் அருவிபோல் நீராட்டி உனை
தாலாட்டிப் பாலுட்ட கொடைவள்ளல் போல் மனம்
படைத்தவள் ஒருத்தி வருவாள் கலங்காதே............!