உழைக்கும் மனிதனுக்கு
உடுத்த உடை இல்லை
உண்ண உணவு இல்லை
பாடுபடும் மக்களுக்கு
படுக்கப் பாய் இல்லை
பசியாற வழி இல்லை
கூரை வீட்டுக்குள் சீவியம்
கொடியில் தொங்குது கோவணம்
வறுமையில் நீ வாழ்ந்தாலும்,,அவன்
பெருமை பாட மறந்ததில்லை
கடவுள் என்ற கற்பனைக்கு
கருணை என்று சொற்பொழிவு
கையில் இல்லையே காசு
உன் காதில் தானே பூவு
இருட்டில் விட்டு ரசிக்கின்ற
இறைவன் என்னும் விதி எதற்க்கு,,,,.......???

No comments:
Post a Comment