தப்புச் செய்பவன்
தைரியமாய் நடக்கிறான்
தடுக்கி விழுந்தவன்
தயங்கித் துடிக்கிறான்
தர்மத்தை மதிப்பவன்
கண்ணீரில் மிதக்கிறான்
அதர்மம் கொண்டவன்
அன்ணாந்து சிரிக்கிறான்
வம்பு செய்பவன்
வாட்டி வதைக்கிறான்
நட்பெனச் சொல்லி
நாடகம் ஆகிறான்
அன்பைச் சுமப்பவன்
பைத்தியம் ஆகிறான்
ஆசைப் படுபவன்
வாழத் துடிக்கிறான்..

No comments:
Post a Comment