கண்ணில் பட்டு நெஞ்சை தொட்டு
உள்ளம் கொள்ளை கொண்டவளே
வண்ணம் பூச வார்த்தை கோர்த்து
கதைகள் பல சொன்னவளே
என்னை விட்டு எங்கே சென்றாய்
எண்ணம் என்னை கொல்லுதடி
இமைகள் மூடித் திறக்க முன்னே
இடியை நெஞ்சில் போட்டவளே
இருட்டில் என்னை தள்ளிவிட்டு
இறைவன் ஆணை என்றவளே
விதியே என்று சொன்ன போது
என் விழியில் அருவி கொட்டுதடி
சகியே உன்னை கண்டால் நானும்
கடவுள் உண்டு என்பேனடி........


No comments:
Post a Comment