நேசிக்கிறேன் பூஜிக்கிறேன் ***
கடலைவிட அலையை நேசிக்கிறாய், நான்
கடவுளைவிட உன்னை நேசிக்கிறேன்
பூவைவிட காம்பை நேசிக்கிறாய், நான்
பூமியைவிட உன்னை நேசிக்கிறேன்
மழையைவிட துளியை நேசிக்கிறாய், நான்
மனசாலே உன்னை சுவாசிக்கிறேன்
அன்னையாய் உன்னை நேசிக்கிறேன்
அன்பாலே உன்னை பூஜிக்கிறேன்
உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன் என்
உடலுக்கு உயிராகப் பாவிக்கின்றேன்
எப்படி சொன்னாலும் தீராது
எந்த ஏட்டிலும் இனி வராது
உடலுக்கும் உயிருக்கும் பாலமா
இதை உதட்டாலே சொல்வதில் தீருமா ?????????
No comments:
Post a Comment