Thursday, 28 June 2012
பொய்யே நீயும் பொய்யோ ***
பொய்யை பொய்யாய் பொய் பொய்யாய்
பொய் சொல்லி
பொய்யே நீயும் பொய்யோ என்றேன்
பொய் இல்லை என்றாய் பொய்யே
பொய்யாய்,
இதுவும் பொய்யோ என்று கேட்டேன் ,
இல்லை என்றாய் அதுவும் பொய்யாய் !!!
இதனால் தான் ஐயோ நீ பொய்யோ ???
செந்தமிழ் தேவதை ****
செந்தமிழ் தேவதை தெருவிலே ஊர்வலம்
பார்ப்பவர் கண்களில் பொங்குதே பரவசம்
மங்கையின் நடையிலே நெளியுதே புல்லினம்
மாதர்கள் நெஞ்சிலே எழுந்ததே கலவரம்
பூங்கொடி இதழ்களில் தாமரை நடமிடும்
தந்தவர் யாரேன உருகுதே பல மனம்
கண்டதும் எனக்குள் ஏறுதே தலைக்கனம்
காரணம் அவளோ இருப்பது என்வசம்.
Thursday, 21 June 2012
உன் கடைசி ஆசை என்ன ..??? ***
நெஞ்சு வெடிக்குதடி அன்பே
நீ என்னை வெறுக்கையிலே
உயிரு துடிக்குதடி உயிரே
நீ பேசாது இருக்கையிலே
உள்ளம் வலிக்குதடி உணர்வே
நீ உருகித் தவிக்கையிலே
இறந்து போய்விடு என்று
மனசு சொல்லுதடி, இல்லை
தேவதை வருவாள் உந்தன்
சோகத்தை தீர்ப்பாள் என்று
புத்தி மறிக்குதடி, என் உறவில்
கலந்த உன்னதமே இனி என்
வாழ்வு உன் வசமே நீ எனை
என்ன செய்யப் போகின்றாய்,
போடா மடையா என்று எனை
சாகவிடுவாயோ இல்லை சாபமிடுவாயோ
பாப்பா நான் என்று உன் பாசம்
நடிப்பென்று பாவி நீ சொன்னதுமே
பாதி உயிர் போனதடி, மன்னிப்பு நீ
தந்து மன்னவனாய் ஏற்காவிடில்
மீதி உயிரும் இன்று உந்தன்
நினைவோடு பிரியுமடி,,
பாவம் செய்த நான் பாடையிலே
போகையிலே, மறந்து கூட நீ
பாசம் காட்டி எனை பார்க்க
நினைக்காதே, உன் வேசக்காரன்
இந்த உலகை விட்டு போகட்டும்
தேவதை உன் வாழ்வு இனியாகின்
தேனாய் இனிக்கட்டும் ................... !!!
உன் கடைசி ஆசை என்னவென்று
நீ கேட்டால்....????
என் கல்லறையில் வந்து மன்னித்தேன்
என்று சொல்
என் ஆத்மா அன்றே அமைதியாக உறக்கம்
கொள்ளும் ....
அவள் அருகில் என் உலகம் ***
உன் நினைவில் என் உள்ளம் உருகும்
உன் அருகில் என் உலகம் மலரும்
உன் அன்பால் என் வாழ்வில் உதயம்
நம் உறவே நாளை இவ்வுலகின் வேதம்..!!!
முகம் காட்ட மறுத்தவள் ***
உன் முகம் பார்க்க முடியாது மறைத்தாயே
என் முகவரியில் நட்பாக நுழைந்தாயே
உன் கவியாலே எனை மெல்ல ஈர்த்தாயே
என் கருத்தாலே உனை போற்ற வைத்தாயே
உன் பண்பாலே தனியாகத் தெரிந்தாயே
என் அகம் எல்லாம் முழுதாக நிறைந்தாயே
உன் வம்பாலே எனை தினம் வதைத்தாயே
என் அன்பாலே அதை கூட அணைத்தேனே
உன் உயிர் என்று எனை சொல்லி மகிழ்ந்தாயே
என் உடலுக்கு உயிரான வரமாக வந்தாயே
என் உணர்வோடு உணர்வாக கலந்தாயே
இனி நீயின்றி நான் ஏது என் தாயே ......?????
உன் பேச்சே என் மூச்சு !!! ***
நீ பேசாது போனால் மூச்சே நிக்குதடி
நீ பேச வந்தால் வார்த்தை தட்டுதடி
நீ பேசும் போது கவிதை கொட்டுதடி
நீ சொன்ன சொல்லில் உள்ளம் துள்ளுதடி
நீ தோகை மயிலோ துள்ளும் மானோ
என் உயிரைக் கிள்ளும் கள்ளி நீயோ
என் எண்ண அலையில் நீந்தும் மீனோ
என் வாழ்வில் வந்த வசந்தம் தானோ
என் வழி மறிந்த தென்றல் காற்றோ
என் தேவை தீர்க்க பிறந்தாய் நீயோ....
உன் தாயும் தந்தையும் மானிடர் தானே, தத்தையே
நீ மட்டும் எப்படி தேவதையாய் பிறந்தாய் ........???
Monday, 11 June 2012
என்னவளே இதைக் கேளு...!!! ***
அன்பே ஆருயிரே என்னவளே
இதை கொஞ்சம் நீ கேளு .......!
நீ என்னாலே என்னாலே
உருவானேன் என்றாயே
நான் உன்னாலே உன்னாலே
கருவானேன் தன்னாலே
சொல்லாமல் கொள்ளாமல்
என் இதயத்தை பறித்தாயே
கண்டும் நான் காணாது
கண்மூடி நடித்தேனே
இருந்தும் நான் இல்லாத
உணர்வொன்றை உணர்ந்தேனே
அறிந்தும் நான் அறியாத
அசடாக இருந்தேனே
நீ தெரிந்துகொண்டதனால்
தெளிவாக இருந்தாயோ
அன்பென்னும் வலை வீசி
அசையாது பிடித்தாயோ
முள்ளை பிடித்தாலும்
முழுதாகப் பிடித்தவளே
என் கண்ணின் இமை போலே
உனை காலம் எல்லாம்
நான் காப்பேன் ....................!!!
இதை கொஞ்சம் நீ கேளு .......!
நீ என்னாலே என்னாலே
உருவானேன் என்றாயே
நான் உன்னாலே உன்னாலே
கருவானேன் தன்னாலே
சொல்லாமல் கொள்ளாமல்
என் இதயத்தை பறித்தாயே
கண்டும் நான் காணாது
கண்மூடி நடித்தேனே
இருந்தும் நான் இல்லாத
உணர்வொன்றை உணர்ந்தேனே
அறிந்தும் நான் அறியாத
அசடாக இருந்தேனே
நீ தெரிந்துகொண்டதனால்
தெளிவாக இருந்தாயோ
அன்பென்னும் வலை வீசி
அசையாது பிடித்தாயோ
முள்ளை பிடித்தாலும்
முழுதாகப் பிடித்தவளே
என் கண்ணின் இமை போலே
உனை காலம் எல்லாம்
நான் காப்பேன் ....................!!!
எண்ணத்தில் வண்ணத்துப்பூச்சி ***
என் வாழ்விலே வந்தது ஒரு வண்ணத்துபூச்சி
அதன் வண்ணமே என் எண்ணங்கள் ஆச்சு
அவள் கடைக்கண் பார்வையில் எல்லாமே போச்சு
என் உள்ளத்தில் என்றுமே அவளின் ஆட்சி
நான் பார்க்கும் இடமெல்லாம் அவளின் காட்சி
அவள் இல்லாது போனால் என் வாழ்வே வீழ்ச்சி....!
Wednesday, 6 June 2012
காதல் பைத்தியம்.. !!! ***
நான் என் வாழ்நாள் முழுவதும் அழத்தயார்
நீ என் கண்ணீர் துடைக்க வருவாயென்றால்
நான் பைத்தியமாக இன்றே தயார், எனக்கு
நீ வைத்தியம் பார்க்க வருவாயென்றால்
நான் குழந்தையாக என்றும் தயார், என்னை
நீ உன் மடியில் போட்டு தாலாட்டுவாயென்றால்,,!!!
சித்திரமே நீ நித்திரையா... ?? ***
வரைந்து போட்ட சித்திரம் போல்
என்னவள் நித்திரை கொள்வதால்
பக்கத்தில் இருந்தும் நான் பார்த்து
ரசித்திருந்தேன், சத்தங்கள் போட்டால்
அவள் விழித்து விடுவாளோ என்று,
நான் முத்தங்கள் கூட கொடுக்க
மறுத்துவிட்டேன், காதல் செய்து
களைத்தவளே கண்மூடி நீ தூங்கு
உன் அயர்ந்த தூக்கம் கண்டு நான்
பேர் ஆனந்தம் கொண்டேனடி..........!!!
கொக்கா மக்கா ***
கிறுக்கு பிடிச்சவன் காதலிச்சான்
குறுக்கே போனவ மாட்டிக்கிட்டா
விறுக் விறுக்கென்று வந்த அவள்
நொறுக்குத் தீனி வேண்டுமென்றாள்
மறுக்க மனம் இல்லாத அவன்
சின்ன விரலை நீட்டிக்கொண்டு
இதை தின்னு என்று புறுபுறுத்தான்
முறுக்குப் போலே இருக்குதென்று
கறுக்கு கறுக்கென அவள் கடித்தாள்..
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என்ன கொடுமையடா இது ........... ???
வான் அலையில் பழகியகவிதை ***
வான் அலையில் நீந்தி வந்தால்
மீனாக
நான் மின் வலையில் பிடித்தேன்
துள்ளினாள் மானாக
கொஞ்சம் தள்ளி வைத்தேன்
துடித்தாள் புழுவாக
அள்ளி எடுத்தேன் அவளை கையில்
மெல்லப் பூவாக
கட்டி அணைத்து எனை தொட்டு
ருசித்தாள் தேனாக
அலறி எழுந்தால் எல்லாம் கனவாக
ஐயோ ஐயோ .............இது என்ன
பொய்யோ பொய்யோ.. தவித்தேன்
துடித்தேன் தனியாக ................ !
மீனாக
நான் மின் வலையில் பிடித்தேன்
துள்ளினாள் மானாக
கொஞ்சம் தள்ளி வைத்தேன்
துடித்தாள் புழுவாக
அள்ளி எடுத்தேன் அவளை கையில்
மெல்லப் பூவாக
கட்டி அணைத்து எனை தொட்டு
ருசித்தாள் தேனாக
அலறி எழுந்தால் எல்லாம் கனவாக
ஐயோ ஐயோ .............இது என்ன
பொய்யோ பொய்யோ.. தவித்தேன்
துடித்தேன் தனியாக ................ !
பஞ்சம் இல்லா வஞ்சம்.. !!! ***
கொடுப்பவன் கையில்
இருப்பதோ கொஞ்சம்
எடுப்பவன் நெஞ்சில்
ஆசையோ தஞ்சம்
உழைப்பவன் வாழ்வில்
எல்லாமே பஞ்சம்
ஏன் இந்த உலகில்
இப்படி வஞ்சம் .......???
இருப்பதோ கொஞ்சம்
எடுப்பவன் நெஞ்சில்
ஆசையோ தஞ்சம்
உழைப்பவன் வாழ்வில்
எல்லாமே பஞ்சம்
ஏன் இந்த உலகில்
இப்படி வஞ்சம் .......???
Subscribe to:
Comments (Atom)












