நீ மழையில் நனைந்தாய் எனக்கு சளி பிடித்தது
நீ வெய்யிலில் அலைந்தாய் மூளை கொதித்தது
இப்போ என் இதயம் வலிக்கின்றதே நீ என்னதான்
செய்கிறாய் என் உயிரே
Wednesday, 15 January 2014
தெரியாமல் புரியாமல் உயிரில்லை
என்னால முடியல்ல ஏன் என்று
புரியல்ல
உன்னோடு பேசாமல் என் உடலில்
உயிரில்ல
வடிந்தோடும் கண்ணீரை மறைக்கவும்...
தெரியல்ல
என்னென்று அறியாமல் எனக்கிங்கு
விடிவில்ல
புரியல்ல
உன்னோடு பேசாமல் என் உடலில்
உயிரில்ல
வடிந்தோடும் கண்ணீரை மறைக்கவும்...
தெரியல்ல
என்னென்று அறியாமல் எனக்கிங்கு
விடிவில்ல
சந்தேகமே எனக்கில்லை
உனக்கான உபக்கிரமணம் என்றும்
உபசமனமோ உகுத(ல்)லோ காணாது
கிழத்தியை உபசந்தானம் மட்டுமே
என் உயிர் மூச்சு, .............. இதில்
எந்தவொரு உகுத்தல் கிடையாது !!!
உபசமனமோ உகுத(ல்)லோ காணாது
கிழத்தியை உபசந்தானம் மட்டுமே
என் உயிர் மூச்சு, .............. இதில்
எந்தவொரு உகுத்தல் கிடையாது !!!
பிச்சை எடுக்கும் இச்சை
உச்ச சாயலில் மெட்டுப் போடுகிறாய்
பச்சை தமிழிலே முச்சை கட்டுகிறாய்
இச்சை தீர்க்க நான் உச்சி வேகுகின்றேன்
துச்சமென நினைத்து கருப்பொருளை
கொச்சைப்படுத்தி முகராது பிச்சை தான்
எடுத்தேனும் சொச்சம் அறிந்திடுவேன் ....
பச்சை தமிழிலே முச்சை கட்டுகிறாய்
இச்சை தீர்க்க நான் உச்சி வேகுகின்றேன்
துச்சமென நினைத்து கருப்பொருளை
கொச்சைப்படுத்தி முகராது பிச்சை தான்
எடுத்தேனும் சொச்சம் அறிந்திடுவேன் ....
உன்னை நான் அறிவேன்
அடி போடி பைதியக்காரி அன்புக்கு
அடையாளம் நீயடி
உன்னை அறியாமல் போவேனோ
நானடி
காலத்தின் கோலத்தில் நீயடி என்
கனவிலும் உன் நிழல் தானடி ...!!!
அடையாளம் நீயடி
உன்னை அறியாமல் போவேனோ
நானடி
காலத்தின் கோலத்தில் நீயடி என்
கனவிலும் உன் நிழல் தானடி ...!!!
தரிசிக்க துடிக்கும் விழிகள்
நான் சோரவில்லை இருந்தும் சோகத்தில்
மூழ்கின்றேன்
காணவில்லை என்னை நான் காற்றோடு
அலைகின்றேன்
கூடிவரும் நாளை தினம் தினம் கைநீட்டி ...
அழைக்கின்றேன்
என் உயிர் இருக்கும் போதே உன் தரிசனம்
வேண்டுமடி ..... !!!
மூழ்கின்றேன்
காணவில்லை என்னை நான் காற்றோடு
அலைகின்றேன்
கூடிவரும் நாளை தினம் தினம் கைநீட்டி ...
அழைக்கின்றேன்
என் உயிர் இருக்கும் போதே உன் தரிசனம்
வேண்டுமடி ..... !!!
உலகமே ஒரு கடன் காரன்
கடன் கடன் கடன் இங்கு எல்லாமே கடன்தான்
விண்ணுக்கு மண் கடன் மழைபொழிவதால்
கண்ணுக்கு நீர் கடன் கண்ணீர் வடிவதால்
சொல்லுக்கு வாய் கடன் வார்த்தை வருவதால்
உயிருக்கு உடல் கடன் உணர்வை கொடுப்பதால்...
இதயத்துக்கு வலி கடன் காதல் கொள்வதால்
செவிக்கு ஓசை கடை இசைகள் கேட்பதால்
கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கினான்
அன்று இலக்கியத்தில் இலங்கை வேந்தன்
இன்று என் இதயத்தை கொடுத்துவிட்டு கடன்
கேட்கின்றேன் என் வலிகளிடம் கவிகொண்டு
உன்னை தாங்கும் பூமியும் ஒரு கடன்காரன்
அது நாளை உன் உடலின் வரவுக்காக இன்று
உன்னை சுமக்கும் சிலகாலம் ......................... !!!
விண்ணுக்கு மண் கடன் மழைபொழிவதால்
கண்ணுக்கு நீர் கடன் கண்ணீர் வடிவதால்
சொல்லுக்கு வாய் கடன் வார்த்தை வருவதால்
உயிருக்கு உடல் கடன் உணர்வை கொடுப்பதால்...
இதயத்துக்கு வலி கடன் காதல் கொள்வதால்
செவிக்கு ஓசை கடை இசைகள் கேட்பதால்
கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கினான்
அன்று இலக்கியத்தில் இலங்கை வேந்தன்
இன்று என் இதயத்தை கொடுத்துவிட்டு கடன்
கேட்கின்றேன் என் வலிகளிடம் கவிகொண்டு
உன்னை தாங்கும் பூமியும் ஒரு கடன்காரன்
அது நாளை உன் உடலின் வரவுக்காக இன்று
உன்னை சுமக்கும் சிலகாலம் ......................... !!!
கவலைக்கு கண்ணீர் சொல்லும் ஆறுதல்
கவிதை எழுதுகின்றேன் கவிதை எழுதுகின்றேன் உன்
கண்ணீரை அறிந்து நான் கவிதை எழுதுகின்றேன்
காலத்தை நினைத்து கவலை கொள்வது ஏனோ
எனை தழுவும் காற்றுக்கும் உந்தன் கண்ணீ்ரை
சொல்லும் சக்தி உள்ளதை நீ அறியாயோ உன் ...
உள்ளம் பேசும் பாசையின் ஓசை என் காதில்
விழுகின்றது என் உயிரில் உந்தன் மூச்சுக்காற்று
தினமும் இசைக்கின்றது, காலம் எல்லாம் காவல்
இல்லை கவலை விட்டுவிடு இந்த உலகே அழியும்
போதிலும் எங்கள் கைகள் பற்றிக்கொள்ளும் உன்
சோகம் தீர நானும் இங்கே தவங்கள் செய்திடுவேன்
அந்த தவத்தின் வலுவின் பொருளை எடுத்து உனக்கே
தந்திடுவேன் இதுகும் நன்மைக்கே என்று நினைத்துவிடு..!
கண்ணீரை அறிந்து நான் கவிதை எழுதுகின்றேன்
காலத்தை நினைத்து கவலை கொள்வது ஏனோ
எனை தழுவும் காற்றுக்கும் உந்தன் கண்ணீ்ரை
சொல்லும் சக்தி உள்ளதை நீ அறியாயோ உன் ...
உள்ளம் பேசும் பாசையின் ஓசை என் காதில்
விழுகின்றது என் உயிரில் உந்தன் மூச்சுக்காற்று
தினமும் இசைக்கின்றது, காலம் எல்லாம் காவல்
இல்லை கவலை விட்டுவிடு இந்த உலகே அழியும்
போதிலும் எங்கள் கைகள் பற்றிக்கொள்ளும் உன்
சோகம் தீர நானும் இங்கே தவங்கள் செய்திடுவேன்
அந்த தவத்தின் வலுவின் பொருளை எடுத்து உனக்கே
தந்திடுவேன் இதுகும் நன்மைக்கே என்று நினைத்துவிடு..!
மழையை ரசிக்கும் மயில்குஞ்சு
பூனைக்குட்டியை மடியில் வைத்து
புன்னகையை உதட்டில் தைத்து
வாழைப்பூவை தலையில் சுமந்து
மழைத் துளியை ரசித்திருக்கும் என்
மயில்குஞ்சே உன் மடிமீது நானுறங்க...
என்ன தவம் செய்வேனடி.... உந்தன்
இதழ்களை நீ அசைத்து எனை ஓரக்
கண்ணால் நோக்கமிட்டால் என் பஞ்சு
நெஞ்சினில் பூவாணம் பிஞ்சு மேனியில்
தூவாணம். உன்னை கெஞ்சுகின்றேன்
ஏன் இந்த மாயம் நான் ரொம்ப பாவம்,
மயில்குஞ்சு மழையில் நனையுது ஐயோ
என் மனதில் ஏதோ அலைகள் அடிக்குது !!!
புன்னகையை உதட்டில் தைத்து
வாழைப்பூவை தலையில் சுமந்து
மழைத் துளியை ரசித்திருக்கும் என்
மயில்குஞ்சே உன் மடிமீது நானுறங்க...
என்ன தவம் செய்வேனடி.... உந்தன்
இதழ்களை நீ அசைத்து எனை ஓரக்
கண்ணால் நோக்கமிட்டால் என் பஞ்சு
நெஞ்சினில் பூவாணம் பிஞ்சு மேனியில்
தூவாணம். உன்னை கெஞ்சுகின்றேன்
ஏன் இந்த மாயம் நான் ரொம்ப பாவம்,
மயில்குஞ்சு மழையில் நனையுது ஐயோ
என் மனதில் ஏதோ அலைகள் அடிக்குது !!!
மனங்களில் எத்தனை குணங்கள் ...!!!
மனங்களில் எத்தனை ´குணங்கள்
குணங்களில் எத்தனை நிறங்கள்
அன்பைக் காட்டுவது ஒரு மனசு
அறிவாய் திகழ்வது ஒரு மனசு
பண்பை வளர்ப்பது ஒரு மனசு...
பாசம் விதைப்பது ஒரு மனசு
மாயம் புரியும் ஒரு மனசு
மயங்க வைக்கும் ஒரு மனசு
முயற்சி செய்யும் ஒரு மனசு
முடியா என்னும் ஒரு மனசு
புரட்சி பண்ணும் ஒரு மனசு
புதுமை காட்டும் ஒரு மனசு
காதல் கொள்ளும் ஒரு மனசு
கவிதை பாடும் ஒரு மனசு
வேஷம் போடும் ஒரு மனசு
மோசம் செய்யும் ஒரு மனசு
இதில் எது உன் மனசு.........???
குணங்களில் எத்தனை நிறங்கள்
அன்பைக் காட்டுவது ஒரு மனசு
அறிவாய் திகழ்வது ஒரு மனசு
பண்பை வளர்ப்பது ஒரு மனசு...
பாசம் விதைப்பது ஒரு மனசு
மாயம் புரியும் ஒரு மனசு
மயங்க வைக்கும் ஒரு மனசு
முயற்சி செய்யும் ஒரு மனசு
முடியா என்னும் ஒரு மனசு
புரட்சி பண்ணும் ஒரு மனசு
புதுமை காட்டும் ஒரு மனசு
காதல் கொள்ளும் ஒரு மனசு
கவிதை பாடும் ஒரு மனசு
வேஷம் போடும் ஒரு மனசு
மோசம் செய்யும் ஒரு மனசு
இதில் எது உன் மனசு.........???
Subscribe to:
Comments (Atom)









