விதியா மதியா கூறடா மனிதா ? ***
விதி எனச் சொல்பவன் வாழும்போதே
இறக்கின்றான்
மதி கொண்டு வாழ்பவன் இறந்தபின்னும்
வாழ்கின்றான்
விழி கொண்டு வாழ்பவன் விந்தைகள்
புரிகின்றான்
உழைத்துப் பிழைப்பவன் வாழ்க்கையத்
தேடுகின்றான்
உதவ நினைப்பவன் உள்ளத்துக்குள்
குமுறுகின்றான்
உறங்கிக் கிடப்பவன் உரிமையை
தொலைக்கின்றான்
உரத்துப் பேசுபவன் தன் உயிரையே
இழக்கின்றான்..........
No comments:
Post a Comment